Published:Updated:

'கேரளா: அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை!'

Vikatan Correspondent
'கேரளா: அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை!'
'கேரளா: அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை!'
'கேரளா: அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை!'

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்து உள்ளார்.

கேரளாவில் ஊழல் புகாரில் சிக்கிய நிதி அமைச்சர் மாணியை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். மாணி பட்ஜெட் தாக்கல் செய்தபோது, சட்டசபையில் எதிர்க்கட்சியினர் வரலாறு காணாத அமளியில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கேரள கவர்னர் சதாசிவத்தை சந்தித்து முதல்வர் சாண்டி விளக்கம் அளித்தார்.

அதன்பின் நேற்று இரவு கேரள அமைச்சரவையின் அவசர கூட்டத்தை முதல்வர் கூட்டினார். அதில், இன்று நடைபெற இருக்கும் சட்டசபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், பட்ஜெட் நாளன்று அமளியில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பின் உம்மன்சாண்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கேரள சட்டசபையில் அரங்கேறிய சம்பவங்கள் கண்டனத்திற்குரியது. இதில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். கவர்னரிடம் இது தொடர்பான தகவல்களை தெரிவித்து விட்டோம். சபையில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடை பெறாது என்றும் கூறி உள்ளோம். பட்ஜெட்டை வருகிற 31 ஆம் தேதிக்குள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் நிறைவேற்றுவோம்" என்றார்.