Published:Updated:

2ஜி வழக்கு: கனிமொழி, ராசா பதில்களை பதிவு செய்கிறது சி.பி.ஐ

Vikatan Correspondent
  2ஜி வழக்கு: கனிமொழி, ராசா பதில்களை பதிவு செய்கிறது சி.பி.ஐ
2ஜி வழக்கு: கனிமொழி, ராசா பதில்களை பதிவு செய்கிறது சி.பி.ஐ
  2ஜி வழக்கு: கனிமொழி, ராசா பதில்களை பதிவு செய்கிறது சி.பி.ஐ

புதுடில்லி: 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் கேள்வி கேட்டு அவர்களின் பதில்களை பதிவு செய்யும் பணியை துவங்கியது சி.பி. ஐ.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக மத்திய தொலைதொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அத்துறையின் செயலராக இருந்த சித்தார்த் பெஹுரா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை சார்ந்த ஷாஹித் உஸ்மான் பால்வா உள்பட 14 பேர் மீது சிபிஐ 2011 ல் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது பதில்கள் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று பதிவு செய்யப்படுகிறது.

வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சி.பி.ஐ அலுவலத்தின் இன்று காலை ஆஜரானார். கிட்டதட்ட 400 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தாள் அவருக்கு தரப்பட்டு 2ஜி தொடர்பான பதில்கள் அவரிடமிருந்து பெறப்படும் என்று சி.பி.ஜ வட்டாரம் தெரிவிக்கிறது. அடுத்தடுத்து இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கனிமொழி உள்ளிட்ட 19 பேரின் பதில்களை சி.பி.ஐ பதிவு செய்யும் எனக் கூறப்படுகிறது.