Published:Updated:

ராஜபக்சே - மோடி சந்திப்பு: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொதிப்பு!

Vikatan Correspondent
ராஜபக்சே -  மோடி சந்திப்பு: ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் கொதிப்பு!
ராஜபக்சே - மோடி சந்திப்பு: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொதிப்பு!
ராஜபக்சே -  மோடி சந்திப்பு: ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் கொதிப்பு!

சென்னை: நரேந்திர மோடி, முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசியது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, ராஜபக்சேவை சந்தித்துப் பேசியுள்ளார். தமிழர்களுக்கு எதிராக ஆணவ அரசியல் நடத்திய ராஜபட்சேவும், நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதற்கு பல கருத்தொற்றுமைகள் உள்ளன.

பெரும்பான்மையினரை, சிறுபான்மையினருக்கு எதிராக அணி திரட்டி ஆத ரவைப் பெருக்குவதுதான் இவர்களது செயல்முறை திட்டம். மோடி மதத்தின் பேராலும் ராஜபக்சே இனத்தின் பேராலும் அதைச் செய்கின்றனர்.

ராஜபட்சே அண்மையில் அளித்த பேட்டியில், தனது தேர்தல் தோல்விக்கு இந்திய "ரா' உளவுப் பிரிவுதான் முழு காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பைக் கண்காணித்து உறுதி செய்யும் உளவுத் துறையையே ராஜபக்சே களங்கப்படுத்தியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை இந்தியத் தரப்பிலிருந்து யாரும் கடுமையான முறையில் மறுக்கவோ, ஆட்சேபம் தெரிவிக்கவோ இல்லை. ராஜபக்சேவை எதிர்த்துக் கருத்துக் கூறுவதில் இந்திய அரசுக்கு என்ன தயக்கம்?

நரேந்திர மோடியும், ராஜபக்சேவும் நெருக்கமான நண்பர்கள் என்பதுதான் காரணமா? இதை விட இந்தியாவுக்கு தலைகுனிவும், அவமானமும் வேறு இருக்க முடியாது. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை தோற்கடித் தது அங்கு வாழும் 25 லட்சம் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள்தான். இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, உடமைகளை, உரிமைகளை பறித்த ராஜபக்சேவை நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.