Published:Updated:

ராகுல் காந்தியை உளவு பார்த்தது ஜனநாயகத்திற்கு எதிரானது: காங்கிரஸ் கடும் தாக்கு!

Vikatan Correspondent

புதுடெல்லி: ராகுல் காந்தியை மத்திய அரசு உளவு பார்த்தது ஜனநாயக விரோதம் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வீட்டிற்குச் சென்ற டெல்லி போலீசார், ராகுல் தலைமுடி கலர் மற்றும் கண் நிறம் குறித்து விசாரித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், மத்திய அரசு ராகுல் காந்தியை உளவு பார்க்கிறது என்றும்  காங்கிரஸ் கூறியுள்ளது விவாதத்தை எழுப்பியுள்ளது. 

இந்நிலையில்நாடாளுமன்றம் இன்று   கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே, கேள்வி நேரத்தை ஒத்திவைத்து ராகுல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வெங்ககைய்ய நாயுடு, பகல் 12 மணிக்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் பேசினார். அப்போது ‘‘ஆட்சியாளர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு இந்தியா ஒன்றும் பாகிஸ்தான் இல்லை. ராகுல் குறித்து நடத்தப்பட்ட விசாரணை ஜனநாயகத்திற்கு எதிரானது.

என்னுடைய 35 வருட அரசியல் வாழ்க்கையில் இதுபோன்று சம்பவத்தை  பார்த்தது கிடையாது. தற்போது அரசியல் சுதந்திரம் குறைந்து விட்டது’’ என்றார்.