Published:Updated:

சட்டசபையில் வன்முறை: கேரள எம்.எல்.ஏக்கள் 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்

Vikatan Correspondent
சட்டசபையில் வன்முறை: கேரள எம்.எல்.ஏக்கள் 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்
சட்டசபையில் வன்முறை: கேரள எம்.எல்.ஏக்கள் 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்
சட்டசபையில் வன்முறை: கேரள எம்.எல்.ஏக்கள் 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்

கேரளா: கேரள சட்டப்பேரவையில் நடந்த வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 5 பேர் கூட்டத் தொடர் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கேரள சட்டப்பேரவையில் கடந்த வெள்ளியன்று நிதியமைச்சர் கே.எம்.மணி பட்ஜெட் தாக்கல் செய்ய முற்பட்டார்.

அப்போது, மீதுள்ள லஞ்ச ஊழல் வழக்கை காரணம் காட்டி அவர் பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர்.

பிரச்னை முற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவைத் தலைவரின் இருக்கை, கணினி, ஒலிப்பெருக்கி உள் ளிட்டவைகளை சேதப்படுத்தியதோடு, அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறை குறித்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பப்போவதாக, கேரள ஆளுநர் பி.சதாசிவம் தெரிவித்திருந்தார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் வலியுறுத்தியிருந்தார்.

சட்டசபையில் வன்முறை: கேரள எம்.எல்.ஏக்கள் 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்

இதையடுத்து, 5 எம்எல்ஏக்களையும் இடை நீக்கம் செய்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.