Published:Updated:

`அரசு அதிகாரி காரில் ரூ.40 லட்சம்; இவ்வளவு பணம் யாருக்குச் செல்கிறது?’-அதிமுக கேள்விக்கு திமுக பதில்

பறிமுதல் செய்யப்பட்ட 40 லட்சம் ரூபாய்

``இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்'' என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்துகின்றன.

`அரசு அதிகாரி காரில் ரூ.40 லட்சம்; இவ்வளவு பணம் யாருக்குச் செல்கிறது?’-அதிமுக கேள்விக்கு திமுக பதில்

``இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்'' என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்துகின்றன.

Published:Updated:
பறிமுதல் செய்யப்பட்ட 40 லட்சம் ரூபாய்

திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணனிடமிருந்து 40 லட்ச ரூபாய் பணத்தை லஞ்ச ஒழித்துத்துறையினர் கைப்பற்றியிருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில், தவறு செய்த அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், துறை அமைச்சருக்கு இதில் தொடர்பிருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிவருகின்றன.

விசாரணை
விசாரணை

திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக இருப்பவர் சரவணக்குமார். சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இவர் காரில் கட்டுக் கட்டாக லஞ்சப் பணம் எடுத்துச் செல்லப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தொடர்ந்து இந்தத் தகவல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தெரிவிக்கப்பட, லஞ்ச ஒழிப்பு ஏடி.எஸ்.பி தேவநாதன் தலைமையில் அதிகாரிகள் அவரைப் பிடிப்பதற்குத் தயாராகினர். நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 மணியளவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் அருகே சரவணக்குமார் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, பைகளில் கட்டுக் கட்டாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரையும், கார் டிரைவர் குளித்தலையைச் சேர்ந்த மணியையும் விழுப்புரம் பழங்குடியின அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, பணம் எண்ணும் இயந்திரம் மூலம் எண்ணியபோது, 38 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர், சரவணகுமாரிடம் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சமையலர் பணிக்கு ஆட்கள் எடுத்துள்ளனர். அதற்கான லஞ்சப் பணத்தை சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரக உதவி செயற்பொறியாளர் கலைமோகனிடம் கொடுக்க எடுத்துச் சென்றது தெரியவந்தது. சரவணகுமாரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பிறகு, இருவரையும் கலெக்டர் அலுவலகத்திலிருந்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர். இந்த நிலையில், ``இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜுக்கு இதில் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்'' என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்துகின்றன.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

நம்மிடம் இது குறித்து அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் பேசும்போது,

``தமிழ்நாடு முதலமைச்சர் மேடையில், சட்டமன்றத்தில் பேசுவதற்கும் நடைமுறைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. தவறு செய்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பேசுகிறாரே தவிர, இதுவரை அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், தவறு செய்பவர்களின் எண்ணிக்கைதான் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டால், ஆதி திராவிடர் நலத்துறையில் இவ்வளவு பணம் லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால், ஆதிதிராவிட மக்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம் இந்த ஆட்சியில் இழைக்கப்படுகிறது என்பதை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் பணம் முழுமையாக அந்த மக்களுக்காகச் செலவழிக்கப்படுவதில்லை. மற்ற துறைகளில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால், இந்தத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் பல ஆண்டுகாலமாக தொடர்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது ஒருபுறமிருக்க, அதிகாரிகள் இவ்வளவு பணம் யாருக்காக வாங்குகிறார்கள், எதற்காக பணம் வசூலிக்கப்பட்டு சென்னைக்குக் கொண்டுவரப்படுகிறது. இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நிச்சயமாக அந்தத் துறை சார்ந்த அமைச்சர்களுக்கோ இல்லை மூத்த அமைச்சர்களுக்கோதான் போகும். அது குறித்தும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். எழிலகத்தில் இப்படித்தான் பத்து நாள்களுக்கு முன்பாக 35 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. வேலூரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. ஆனால், இவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. 1,500, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் மின்பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளைக் கைதுசெய்து சிறையிலடைப்பவர்கள், மேல்மட்ட அளவிலுள்ள அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்... ஏதாவது பிரச்னை என்றால் டிரான்ஸ்பர் செய்கிறார்கள். அது ஒரு தண்டனையா சொல்லுங்கள்?

ஆர்.எம்.பாபு முருகவேல்
ஆர்.எம்.பாபு முருகவேல்

தவறு செய்பவர்கள் யார்மீதும் நடவடிக்கை எடுக்க இயலாத ஓர் அரசாங்கமாகத்தான் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசாங்கம் இருக்கிறது. இந்த விஷயத்தில் லஞ்சம் என்பதைத் தாண்டி ஆதி திராவிட மக்களுக்கு இழைக்கப்பட்ட ஓர் அநீதியாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன்'' என்கிறார் அவர்.

ஆளும் அரசின் மீதான விமர்சனங்கள் குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

``அரசு அதிகாரிகள் அனைவருக்கும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது என்று சொன்னால் பகுத்தறியும் யார் ஒருவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பத்தாண்டுக்காலம் கட்டப்பட்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் கைகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. அதனால்தான், கடந்த ஆட்சியிலிருந்து தொடர்ந்துகொண்டிருக்கும் அதிகாரிகளின் லஞ்ச வேட்டை தற்போது ஒவ்வொன்றாகக் கண்டறியப்பட்டுவருகிறது. அமைச்சர்களை இதில் தொடர்புபடுத்திப் பேசுவதில் எந்த அடிப்படையும் இல்லை. ஒருவேளை அமைச்சர்களுக்கு இதில் பங்கிருந்தால், லஞ்ச ஒழிப்புத்துறை இப்படிச் சுதந்திரமாகச் செயல்பட முடியுமா?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் புரையோடிப்போயிருந்த ஊழல் இப்போது ஒவ்வொன்றாக வெளியில் வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் கைகள் கட்டவிழ்க்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதால்தான் தற்போது பல விஷயங்கள் வெளியில் வருகின்றன என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் மக்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என முதல்வர் சொன்னார். அதன்படி மக்களுக்கான ஆட்சியாக, சிறப்பாக தளபதியின் ஆட்சி செயல்பட்டுவருகிறது'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism