Published:Updated:

நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

Vikatan Correspondent
நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து!
நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

நாடாளுமன்ற வளாகத்தின் 8வது நுழைவு வாயிலில் உள்ள ரயில் பவனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏ.சி. மின் இணைப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

உடனடியாக சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து பரவி கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தால், அந்த பகுதியே பெரும் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. விபத்து ஏற்பட்ட 8வது கேட் வழியாக தான் பார்வையாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த விபத்தில் ஏற்பட்ட இழப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.