Published:Updated:

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

Published:Updated:

01-04-09
ஸ்பெஷல் 1
என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?
என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?
 
என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?
என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?
விகடன் டீம்

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

டந்த ஐந்தாண்டுகளைக் கழித்த எம்.பி-க்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பயனுள்ள வேலைகள் என்ன செய்திருக்கிறார்கள் என்று ஸ்கேன் செய்து பார்க்கும் இரண்டாவது ரிப்போர்ட்.

சமீபத்தில் ம.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு மாறிய செஞ்சி ராமச்சந்திரன் தொடங்கி, அமைச்சராக இருந்தபோது அசத்திவிட்டு இப்போது அமைதியாக இருக்கும் ஏ.கே.மூர்த்தி வரையிலான 15 எம்.பி-க்கள் குறித்த தகவல்கள் இது!

செஞ்சி ராமச்சந்திரன்
(தி.மு.க. வந்தவாசி)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

ம.தி.மு.க -வின் துணைப் பொதுச் செயலாளர், மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தவர், தி.மு.க-வில் ஐக்கியமாகி இருப்பவர் என்று செஞ்சி ராமச்சந்திரனுக்கு அரசியல் முகம்தான் அதிகம். மந்திரி ஆசையில் நொந்தவாசியாக இருந்தவர். அதனாலேயே வெட்கப்பட்டுக்கொண்டு அதிக ஆர்வம் இல்லாமல் வலம் வந்தார்.

தன் தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலைத் தொல்லியல் துறை கைப்பற்றாமல் தடுத்தது தான்தான் என்று ரகசியக் கூட்டம் போட்டு வெடி வெடித்தார். ஆனால், நாங்கள் சொன்னதால்தான் தடுக்கப்பட்டது என்று தி.மு.க. சொன்னது. செஞ்சியார் சொல்லிக்கொள்ள இருக்கும் பெரிய விஷயம் இதுதான்.

இரண்டு விஷயங்களை மட்டுமே ஒழுங்காகச் செய்வதால் இவருக்கு இப்பகுதியில் 'ஃபங்ஷன் எம்.பி.' என்ற பெயர் இருக்கிறது. ஒன்று, வருடந்தோறும் தனது பிறந்த நாளன்று திருவண்ணாமலை கோயிலுக்கு விசிட் அடித்துவிட்டுத் தனது ஆதர வாளர்களுடன் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடுவது; மற்றொன்று, அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் அழைப்பிதழிலும் இவர் பெயரைப் போட்டாலும், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் போன்ற வி.வி.ஐ.பி-க்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மட்டுமே இவரையும் மேடையில் பார்க்க முடிவது. மற்றபடி, இவர் எங்கிருக்கிறார் என்பதை இவரின் ஆதரவாளர்களேகூடக் கண்டு பிடிப்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான்!


பெல்லார்மின்
(சி.பி.எம்., கன்னியாகுமரி)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

மிழகத்தின் சென்சிட்டிவ்வான தொகுதி இது. இங்கு எம்.பி-யாக இருந்த பெல்லார்மின், தொகுதி மக்களிடம் நெருங்கிய தொடர்புடன் இருப்பவர். எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். முந்திரித் தொழிற்சாலை, ரப்பர் தோட்டம், கட்டுமானத் துறை, விவசாயம் போன்றவற்றில் இருக்கும் பெருவாரியான தொழிலாளர் போராட் டங்களில் பெல்லார்மினைப் பார்க்கலாம். 'அவர் பார்லிமென்ட்டில் வாதாடினாரோ இல்லையோ, இங்கு தெருவில் போராடினார்' என்கிறார்கள்.

குளச்சலில் அமைய இருந்த வர்த்தகத் துறைமுகம் கேரள மாநிலம் விளிஞ்சத்துக்குப் போனதை இவர் தடுக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. பக்கத்து மாநிலமும் தோழர்கள் ஆள்வதுதான் என் பதால், தடுக்கமுடியவில்லை. சரி... விளையாட்டு வீரர்களுக்குப் பயனளிக்கும் 'சாய் சப்-சென்டர்' திருநெல்வேலிக்குப் போவதற்குத் தொகுதி எம்.பி-யின் அசட்டையே காரணம் என்றும் சொல்கிறார்கள்.

இந்தத் தொகுதியில் மருத்துவக் கல்லூரி அமைந் திருப்பதே பெரிய சாதனைதான். ஆனாலும், இங்கு ஆயுர்வேதக் கல்லூரி அமைப்பதற்கு சித்த மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பதால், அந்தத் திட்டம் கிடப் பில் கிடக்கிறது. மீனவர்களின் நலன் கருதி ஒரே நேரத்தில் நான்கு மீன்பிடித் துறைமுகங்களுக்கான பணிகளைத் தொடங்கி இருப்பது, வர்த்தகத்தை அதிகரிக்க சாலை கட்டமைப்புகளை மேம்படுத் தியது எனப் பல்வேறு பணிகளைச் செய்திருப்பதாக காம்ரேட்டுகள் பெருமிதம் கொள்கிறார்கள்!

கம்யூனிஸ்ட் கோட்டையான இத்தொகுதியை மீண்டும் பெருவதற்கு அ.தி.மு.க. கூட்டணியில் சி.பி.எம். முயற்சித்து வருகிறது!


செ.குப்புசாமி
(தி.மு.க., வட சென்னை)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

தொழிற்சங்கத் தலைவர் என்பதால், ஆட் களைத் திரட்டிக் கூட்டம் சேர்ப்ப தில் கில்லாடி. அந்த மரியாதைக்குதான் வட சென்னை இவ ருக்கு ஒதுக்கப் பட்டது. ஆனால், அங்கு ஒரு அலுவலகத்தைக்கூட இவர் திறக்கவில்லையாம். கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் வந்துவிடுவார். மற்றபடி, ஆளைப் பார்க்க முடியாதாம். ராயபுரம், ஆர்.கே.புரம் எனச் சட்டமன்றத் தொகுதிகள் அ.தி.மு.க-விடம் இருந்தாலும், இந்தப் பகுதியில் அதிக அளவில் தொகுதி மேம்பாட்டு நிதியைச் செலவழித்துள்ளார். காசிமேட்டில் மீன் ஏலம்விடும் மேடை, ஸ்டான்லி மருத்துவமனைக்குப் புதிய கட்டடங்கள், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டையில் சுரங்கப் பாதை எனப் பணிகள் பல செய்துள்ளார்.

கடந்த முறை போட்டியிடும்போது, 'எண்ணூர் துறைமுகத்தில் சரக்கு லாரிகள் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், அங்கு நான்கு வழிச் சாலை அமைப்பேன்; வட சென்னை மக்களைப் பெரிதும் பாதிக்கும் கடல் அரிப்பைத் தடுக்க மும்பையில் ஆஸ்திரேலியத் தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தப்படும் சிமென்ட் சுவர் அமைக்கும் பணியை வட சென்னையிலும் புகுத்துவேன்' என்பன போன்ற பல அறிவிப்புகள் வெறும் அறிவிப்பாகவே இருக்கின்றன. தென் சென்னையை இணைக்கும் பறக்கும் ரயில் திட்டத்தை வட சென்னைக்கும் கொண்டுவருவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். இப்படி, அளித்த வாக்கு றுதிகள்தான் நிறைய!


செந்தில்
(பா.ம.க, தர்மபுரி)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

டாக்டர் செந்தில், அன்புமணியின் நெருங்கிய நண்பர். தர்மபுரியில் மருத்துவமனை நடத்தி வந்ததால், தொகுதியில் உள்ள மக்களிடம் நல்ல அறிமுகம். எம்.பி. ஆன பிறகு, தனது மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்கள் பலருக்கு இலவசமாகவே வைத்தியம் பார்க்கிறார். தர்மபுரி மக்களின் நீண்டநாள் கனவாக இருந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் இவரது காலத்தில்தான் அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது. தொகுதிக்குள் எந்த நிகழ்ச்சியானாலும் தவறாமல் ஆஜராகிவிடுவார். ஆயத்த ஆடைப் பூங்கா, தர்மபுரி மருத்துவக் கல்லூரி இவற்றைக் கொண்டுவந்ததை செந்திலின் சாதனைகளாகச் சொல்கிறார்கள் பா.ம.க- வினர்.

'மிகவும் பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியைத் தமிழகத்திலேயே நம்பர் ஒன் மாவட்டமாக மாற்றுவேன்' எனக் கடந்த தேர்தலில் வாக்குறுதி கொடுத்தாராம் செந்தில். ஆனால், அதற்காகப் பெரிதாக எந்த முயற்சியுமே செந்தில் எடுத்ததாகத் தெரியவில்லை.

'பாராட்டவும் முடியாது; ஒதுக்கிவிடவும் முடியாது. ஏதோ பரவால்லப்பா...' என்கிறார்கள் தர்மபுரிக்காரர்கள்!


சுகவனம்
(தி.மு.க., கிருஷ்ணகிரி)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

ஜெயலலிதாவையே எதிர்த்து நின்று பர்கூர் தொகுதியில் ஜெயித்ததால், 'யானை காதுக்குள் புகுந்த எறும்பு' என்று முதல்வர் கருணாநிதி இவரைச் செல்லமாகச் சொல்வார். ஆனால், எம்.பி-யான பிறகு சுகவனம் சொல்லிக்கொள்ளும் படி பெயரெடுக்கவில்லை. கட்சி வேலைகளில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

தமிழகத்தின் மிக முக்கியத் தொழில் நகரமான ஓசூர் இவருடைய தொகுதிக்குள்தான் வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில், ஒசூரில் தொழில் வளர்ச் சிக்குப் பெருமைப்படும் அள வுக்கு எதுவுமே செய்யவில்லை என்று உதட்டைப் பிதுக்கு கிறார்கள்.

வறட்சிப் பகுதியான கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த்திட்டம் அறிவிக்கப்பட்டாலும் கர்நாடகம் முட்டுக்கட்டை போட்டு நிற்கிறது. கிருஷ்ணகிரி-தொப்பூர் நாற்கரச்சாலை பளபளக்கிறது. ஆனால், கிருஷ்ணகிரி- திண்டிவனம் சாலைக்கான வேலைகள் பாதியில் நிற்கிறது. தொகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகள் பேசும் மக்களும் சரிவிகிதத்தில் இருக்கிறார்கள். சுகவனத்துக்கு மூன்று மொழிகளும் தெரியும். என்பது ஒரு பிளஸ் பாயின்ட்!


த.வேணுகோபால்
(தி.மு.க., திருப்பத்தூர்)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

நான்காவது முறையாகத் திருப்பத்தூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு இருப் பவர் வேணுகோபால் என்பதே பலருக்குத் தெரியாது. அந்த அளவுக்கு அமைதியானவர். ஆளை எங்கும் பார்க்கவும் முடியாது.

வேலூர் மாவட்டத்தில் ஆரம்பித்து திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நீராதாரம் கொடுக்கக்கூடிய பாலாற்றில் ஆந்திர அரசு கட்டவிருக்கும் அணையைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று பெரிய பெரிய கட்சிகளில் ஆரம்பித்து, லெட்டர் பேடு கட்சிகள் வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் எனத் தூள் கிளப்பியபோதும், அதை இவர் கண்டுகொள்ளவே இல்லை. 'கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் பாதிக்கப்படுகிற பிரச்னையைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசவில்லை வேணுகோபால்' என்று குற்றம் சாட்டுகிறார்கள்!

'வறண்ட பூமியாகக் கிடக்கும் திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, செங்கம் ஆகிய பகுதிகளிலிருந்து பஞ்சம் பிழைக்கப் பக்கத்து மாநிலமான கர்நாடகாவுக்கு மக் கள் கூட்டம் கூட்டமாகக் குடிபெயர்வதைத் தடுக்க ஒரு தொழிற்சாலையைக் கொண்டுவந்து வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்கலாம்' என்று மக்கள்கேட் பதில் நியாயம் இருக்கிறது!

 


கே.எம்.காதர்மொய்தீன்
(முஸ்லிம் லீக், வேலூர்)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் தலைவர் என காதர் மொய்தீனுக்குப் பல முகங்கள் இருந்தாலும், ஏனோ மந்தமாகவே ஐந்தாண்டுகளைக் கழித்துவிட்டார்.

வேலூர் கோட்டைக்கு எதிரே சாலையை மக்கள் கடக்க, நடைபாதை மேம்பாலம் ஒன்றைத் தனது தொகுதி நிதியில் செய்து கொடுத்தது தவிர, பெரிதாக வேறு எதுவும் செய்யவில்லை என்கிறார்கள். வேலூர் கோட்டைக்குள் உள்ள பூட்டிக்கிடக்கும் மசூதி யைத் திறந்து, தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தார்கள். 'டெல்லி சென்ற உடனே மத்திய அரசின் தொல்லியல் துறையிடமிருந்து அனுமதி பெற்றுத் தருவேன்' என்றார். ஆனால், மறந்தேபோனார்.

உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றாலும், தங்களை மதிக்கவில்லை என்று தி.மு.க-வினர் மத்தியில் வருத்தங்கள் உண்டு. 'இன்னொரு கட்சி சார்பில் நின்றவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் தலைவராகவும் நீடிப்பது எப்படி? எனவே, இவர் வெற்றி பெற்றது செல்லாது' என்று முஸ்லிம் அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது!


பொன்னுசாமி
(பா.ம.க., சிதம்பரம்)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

னித் தொகுதியான சிதம்பரத்தின் கடந்த பத்தாண்டு கால நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் பொன்னுசாமி. ராமதாஸின் நெருங்கிய நண்பர் என்பதால், கொஞ்ச நாள் மந்திரியாகவும் இருந்தார். அதிலிருந்து இருமுறை தொடர்ந்து நாடாளுமன்ற வாசம்.

அதிர்ஷ்டத்தின் மூலம் வந்ததாலோ என்னவோ, கட்சிக்காரர்களுக்கு இவர் ஒரு பொருட்டே இல்லை. அதற்காகக் கவலைப் படுகிற ஆளும் இல்லை இவர். அழைத்தால் போவார்; அழைக்கவில்லையென்றால் நிம்மதி.

ரொம்பவும் அடக்கமான ஆசாமி. அரசியல் பந்தாவெல்லாம் அவரை நாடவில்லை. எல்லோருக்கும் சிரித்த முகத்தோடு ஒரு வணக்கம். யாரோடும் வாதமில்லை; பேதமில்லை. எல்லோருக்கும் இவர் 'அண்ணாச்சி'தான்.

பெண்ணாடம், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய ஊர்களில் பிரமாண்டமாகக் கட்டப்பட் டுள்ள நிழற்குடைகள்தான் தொகுதிக்குள் இவர் பெயரைச் சொல்லி நிற்கின்றன! தொகுதி வளர்ச்சி நிதியை மக்களுக்கு பரவலாக பயன்படுத்தினார் என்ற நல்ல பெயர் இவருக்கு இருந்தாலும் இம்முறையும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறி!


ஏ.கே.எஸ்.விஜயன்
(தி.மு.க., நாகப்பட்டினம்)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

ம்யூனிஸக் கோட்டையான நாகை, திருவாரூர் பகுதியில் கம்யூனிஸ்ட்களை எதிர்த்து வெற்றி பெற்றவர். மாவட்டச் செயலாளர் பதவியும் தேடி வர, இரண்டும் சேர்ந்த அதிகாரமிக்கவர். மாவட்டத்தில் இவருக் குப் பலமான கோஷ்டி இருக்கிறது. மிச்சம் இருப்பவர்கள் கோ.சி.மணி ஆட்கள்.

'நாகை துறைமுகத்தை முழுமையான துறைமுகமாக ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை; வேதாரண்யம் பகுதியைச் சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை; உப்பளத் தொழில் மேம்பாட்டுக்கான எந்தத் திட்ட மும் கொண்டுவரவில்லை; நாகூர், நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கோ, தென் மாவட்டங்களுக்கோ ஒரு ரயில் வசதிகூட ஏற்பாடு செய்யவில்லை; தொகுதிக்குள் ஒரு தொழிற்சாலையைக்கூட கொண்டு வரவில்லை' என்று ஏகப்பட்ட 'இல்லை'கள் வாசிக்கப்படுகின்றன.

ஆனால், தொகுதி முழுவதும் பரவலாகத் தனது மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்திக் கட்டடங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். திருவாரூர்-நாகூர் அகல ரயில் பாதை துரிதமாக்க உதவினார். திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் வருவதில் முனைப்பாக இருந்தார்!


ஜே.எம்.ஆரூண்
(காங்கிரஸ், பெரியகுளம்)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

டி.டி.வி. தினகரன் என்ற மலையை வென்று ஒட்டுமொத்தத் தமிழகத்தையே பெரியகுளத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். மாதத்தில் ஏழு நாட்கள் தொகுதி விசிட், மறக்காமல் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, விடுமுறை எடுக்காமல் நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டவர், எம்.பி. தொகுதி நிதியை முழுமையாகச் செலவு செய்தவர், நாடாளுமன்றத்தில் தான் பேசிய பேச் சுக்களையும் அதன் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை யும் தொகுத்துப் புத்தகமாக்கி, பொதுமக்களுக்குக் கொடுத்து வரும் அரசியல்வாதி என்று ஆரூணுக்கு நல்ல பெயர் வாசிக்கப்படுகிறது.

'தேனி தொகுதி முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பூமி. இதற்கு ஜீவாதாரமாக இருக்கிற முல்லைப் பெரியாறு அணை விவகாரம் அப்படியே கிடக்கிறது. தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி தென்னை மரங்கள் இருக்கின்றன. தென்னை வாரியத்தின் கிளை அலுவலகத்தை தேனிக்குக் கொண்டு வந்திருக்கலாம்!' என்றும் விமர்சனங் கள். ' ஒரு எம்.பி.யாக செய்யவேண்டிய பல்வேறு திட்டங்களை ஆரூண் முடித்துவிட்டார்' என்கிறார்கள் காங்கிரஸார்!


மு.ராமதாஸ்
(பா.ம.க, பாண்டிச்சேரி)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தான், டாக்டர் ராமதாஸின் ரகசிய மூளை. நாடாளுமன்றத் துக்கு ஒழுங்காகச் செல்லும் எம்.பி. கடந்த ஐந்தாண்டுகளில் 331 நாள் நடந்த கூட்டத்தொடரில் 318 நாள் கலந்துகொண்டவர் இவர். சும்மா இருக்க மாட்டார். கேள்விகளால் துளைப்பார். விவாதங்கள் அனைத்திலும் மூக்கை நுழைப்பார். தொகுதி வளர்ச்சி நிதியை ஒழுங்காகச் செலவழிக்கிறார்களா என்பதை ஆராய ஒரு குழு இருக்கிறது. அதன் ஆய்வுப்படி, இந்தியாவில் சிறந்த எம்.பி. என்று ஐந்தாவது இடத்தைப் பெற்றவர். புதுச்சேரி பஞ்சாலை தனியார் வசமாவதில் இருந்து காப்பாற்றியது இவரது சாதனையாகச் சொல்லப்படுகிறது.

பாண்டிச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவது, மின்சார உற்பத்திக்கான எந்த முயற்சியும் எடுக்காதது, சுங்க வரி இல்லாத் துறைமுகம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் திட்டம் இருந்தும் அதைப் பெற்றுத் தராதது, மத்திய அரசிடம் பாண்டிச்சேரி பெற்ற கடனையோ, அதன் வட்டியையோ தள்ளுபடி செய்வதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காதது, சுற்றுலாத் துறையை மேம்படுத்த மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத் தராதது போன்ற குற்றச்சாட்டுகளும் இவர் மேல் உள்ளன!


பிரபு
(காங்கிரஸ், நீலகிரி)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

நீலகிரி தொகுதியில் எட்டு முறை போட்டியிட்டு, ஐந்து முறை வென்று எம்.பி-யாக இருந்தவர் பிரபு. பெயருக்கு ஏற்றவாறு ஏகப் பட்ட சொத்துக்களுக்கு அதிபதி. படுகர் இன மக்கள் மத்தியில் 'அன்னதானப் பிரபு' என்று பெயர். காரணம் ஊர்த் திருவிழா, வீட்டு விசேஷம் என்று வாரி வாரி வழங்குவதுதான். இருந்தாலும், தங்கள் மத்தியில் வந்து நின்று, தங்களின் குறைகளைக் கேட்டுச் சரிசெய்வதில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடம் இருக் கிறது.

நலிந்த நிலையிலிருந்த ஊட்டி போட்டோ ஃபிலிம் தொழிற்சாலையை ஓரளவுக்குக் காப்பாற்றி, அந்தத் தொழிற்சாலையை நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார். இருந்தாலும், நிறைவேற்றிய வாக்குறுதிகளைவிட நிறைவேற்றாதவைதான் அதிகம்.

'பசுந் தேயிலைக்கு கிலோவுக்கு 15 ரூபாய் விலை நிர்ணயம் செய்து தருகிறேன்' என்ற வாக்குறுதியை இவரால் நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும் இறக்குமதித் தேயிலைக்கான வரி உயர்த்தப்பட்டதன் மூலம், உள்ளூர்த் தேயிலைக்கான தேவை அதிகரித்து, விலை சற்றே உயர்ந்து, விவசாயிகளைக் காப்பாற்றி இருக்கிறது.

இருந்தாலும், நீலகிரி இந்த முறை பிரபுவுக்கு இல்லை. அதை ரிசர்வ் தொகுதியாக மாற்றிவிட்டதுதான் காரணம்!


கிருஷ்ணசாமி
(தி.மு.க.,

பெரும்புதூர்)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

தொகுதிக்கு தான் செய்த சாதனைகளை மக்களுக்கு விளக்குவதற்காகப் புத்தகமே போட்டுள்ளவர் கிருஷ்ணசாமி. பட்டாபிராம் பகுதியில் வசிக்கும் இவர், தொகுதி முழுமைக்கும் போய்த் தலைகாட்டுவது ரொம்பவும் குறைவு. தேர்தல் நெருங்குவதால், கடந்த ஆறு மாதங்களாகத் தொகுதி முழுக்க ரவுண்ட் அடித்து வருகிறார்.தற்போது

பெரும்புதூர் தொகுதியில் இருந்த பல தொகு திகள் பிரிக்கப்பட்டு, புதிதாக திருவள்ளூர் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தத் தொகுதியைக் குறி வைத்திருக்கிறார். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செலவுகள் செய்தது தவிர, வேறு பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஆவடி, திருவள்ளூர் வழியாக

பெரும்புதூருக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என்று அறிவித்துப் பல வருடங்கள் ஆகியும், நிலத்தைக் கைய கப்படுத்துவதில் பிரச்னை என்று கூறியே பணிகள் நடக்கவில்லையாம். தொகுதியைக் கவனிப்பதைவிட கட்சிக்காரர்களைக் கவனிப்பதை கிருஷ்ணசாமி சரியாகப் பார்த்தார். எளிமையாகச் சந்திக்க முடிந்த ஆள் என்ற நற்பெயர் மட்டுமே ப்ளஸ்!


தன்ராஜ்
(பா.ம.க., திண்டிவனம்)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

'இனி, திண்டிவனம் தொகுதியே எனது கோயில்; மக்களே என் தெய்வம்' என்று எக்கச்சக்கமான பில்டப்களுடன் எம்.பி-யான புதிதில் பேசிய தன்ராஜ், அவற்றில் சிலவற்றைக்கூட நிறைவேற்றவில்லை. ராமதாஸின் உறவினரான இவர் பப்ளிசிட்டி அரசியலில் கை தேர்ந்தவர். 'நடமாடும் அலுவலகம்' என்ற பெயரில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட சகல வசதிகளுடனும் கூடிய ஒரு வேன் தொகுதியில் எந்நேரமும் சுற்றிவர ஏற்பாடு செய்தார். நோக்கமெல்லாம் ஓ.கே. அதன்மூலம் எத்தனை மனுக்கள் பெறப்பட்டன, அவற்றில் தீர்த்து வைக்கப்பட்ட குறைகள் என்னென்ன என்பதை தன்ராஜே அறிவார்.

12 வருடங்களாக மூடிக்கிடந்த ஒலக்கூர் ரயில்வே கேட்டைத் திறந்துவைத்ததைத்தான் தனது சாதனையாகச் சொல்கிறார். அண்மையில் குடுகுடுப்பைக்காரர் வேடம் போட்டுக்கொண்டு கட்சி ஆபீஸூக்குப் போய், 'நல்ல காலம் பொறக்குது, பா.ம.க-வுக்கு நல்லகாலம் பொறக்குது' என்று குறி சொல்லியிருக்கிறார். இந்த முறை தொகுதி சீரமைப்பில் திண்டிவனம் கிடையாது என்பதால், புதிதாக உதயமாகியிருக்கும் கள்ளக்குறிச்சியின் மீது தன் ராஜுக்குக் கண்!


ஏ.கே.மூர்த்தி
(பா.ம.க, செங்கல்பட்டு)

என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?

தொகுதியில் 1999-2004-ல¢ எடுத்த நல்ல பெயரை 2004 - 2009-ல் இழந்தவர். செங்கல்பட்டு தொகுதி இப்போது காஞ்சிபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏ.கே.மூர்த்தி மீண்டும் போட்டியிட முடியாத நிலை. அமைச்சராக இருந்தபோது, நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல ரயில்வே திட்டங்களை அறிவித்தவர். இப்போது அமைச் சர் பதவி இல்லையென்றதும், தொகுதிக்குள்ளேயே பார்க்க முடியவில்லை என்கிறார்கள். அரசு நிகழ்ச்சிகளில்கூடக் கலந்துகொள்வது அரிதாம்.

தொகுதி மேம்பாட்டு நிதியில் 80 சதவிகிதத்தைப் பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு ஒதுக்கியது, தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து ரயில்களும் செங்கல்பட்டில் நிற்கச் செய்தது போன்றவற்றை இவரது சாத னைகளாகக் கூறுகின்றனர் கட்சியினர். ஆனாலும், செங் கல்பட்டு ராட்டினம் கிணறு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டியும், பணியை நிறைவேற்ற முடிய வில்லை. இம்முறை

பெரும்புதூர் தொகுதியில் ஏ.கே.மூர்த்தி போட்டியிடலாம்!

 
என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?
என்ன செய்தார்கள் எம்.பி-க்கள்?