Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:

01-04-09
அரசியல்
தலையங்கம்
தலையங்கம்
 
தலையங்கம்
தலையங்கம்


கை நழுவிய ஆடுகளம்!

தலையங்கம்

'விம்பிள்டன் டென்னிஸ்' என்றாலே இங்கிலாந்து என்று அடையாளம் இருப்பது போல, இந்தியாவின் அடையாளமாக 'ஐ.பி.எல். கிரிக்கெட்' உருவாகக்கூடிய சூழலை இழந்துவிட்டோம்!

'கோடி கோடியாகக் கொட்டி, பிரமாண்ட விளம்பரங்களைத் தயாரித்து, ஆரோக்கிய மான விளையாட்டை அப்பட்டமான வியாபாரமாக ஆக்குகிற இந்தக் கலாசாரம் எங்கே போய் முடியும்?' என்ற வருத்தங்கள் ஒருபக்கம் இருக்கட்டும்...

உலகமே உற்றுப் பார்க்கும் அரங்கில், இந்திய தேசம் தன்னை மிடுக்காக முன் நிறுத்துகிற பல அம்சங்களில் கிரிக்கெட்டும் ஒன்று என்பதை மறுக்க முடியுமா?

ஆனால், ஒரு தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் தேர்தலுக் குத்தான் முன்னுரிமை!

அதிலும் குறிப்பாக, தேர்தலும் கிரிக்கெட்டும் ஒரே சமயத்தில் பந்துகளை வீசினால், பாதுகாப்பு விஷயத்தில் அரசுக்குத் திணறல் ஏற்படத்தான் செய்யும். ஆக, 'ஐ.பி.எல்-லைத் தள்ளிவையுங்கள்' என்று மத்திய உள்துறை சொன்னதில் தவறில்லை. பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல் ஏற்படுத்திவிட்ட கவலையும் புறக்கணிக்கக்கூடியதல்ல!

அதே சமயம், இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளின்போது, ஐ.பி.எல். பொறுப்பாளர் லலித் மோடி காட்டிய பிடிவாதத்தில் பி.ஜே.பி-யின் வாடையும், உள்துறையின் கடமை உணர்வோடு கூடவே காங்கிரஸ் வாடையும் வீசியதைப் புத்திசாலிகள் கட்டாயம் புரிந்துகொண்டு இருப்பார்கள்!

குறுகலான பாலத்தில் எதிரெதிரே வந்த இரண்டு ஆடுகள், முட்டிக்கொள்ளாமல் குனிந்து வழிவிட்டுக்கொண்ட பால பாடத்தைப் பெரிய மனிதர்கள் சிலர் மறந்து போனதால், இந்தியா உருவாக்கிக்கொண்ட ஓர் அழகான வாய்ப்பு இரண்டாம் வருடமே கை நழுவி வெளிநாடு போய்விட்டது!

 
தலையங்கம்
தலையங்கம்