Published:Updated:

''நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு?''

''நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு?''

''நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு?''

''நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு?''

Published:Updated:

01-04-09
அரசியல்
''நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு?''
''நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு?''
 
''நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு?''
''நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு?''
- ப.திருமாவேலன், படங்கள்: கே.ராஜசேகரன்

''நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு?''
''நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு?''

அ.தி.மு.க-வின் அனல் கிளப்பும் பேச்சாளர் பழ.கருப்பையா. காங்கிரஸையும் கருணாநிதியையும் திட்டுவதென்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி!

''பள்ளிக்குச் செல்லும் பிள்ளை, அலுவலகம் செல்லும் கணவன், மார்க்கெட்டுக்குப் போகும் மனைவி ஆகியோர் உயிரோடு வீடு வந்து சேர்வார்களா என்பதற்கு காங்கிரஸ் - தி.மு.க. ஆட்சியில் எந்தவித உத்தரவாதமும் இல்லை.

பாகிஸ்தானிலிருந்து கப்பல் ஏறி வந்து, மும்பைத் துறைமுகத்தில் இறங்கி, துப்பாக்கிகளால் வேட்டை ஆடுகிறார்கள், வெடிவைத்துத் தகர்க்கிறார்கள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள். மும்பையின் முகம் கிழிந்து தொங்குகிறது. அந்தத் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு சென்னை என்று சொன்ன பிறகும், நம் அரசுகளுக்கு சொரணை வரவில்லை. பாகிஸ்தானுடன் மூன்று மாதங்களாக சாவகாசமாகப் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதனால்தான் இவர்கள் ஆட்சியில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிறேன்.

பணவீக்கம் 2.40 சதவிகிதத்தில் இருந்து 0.44 சதவிகிதத்துக்கு விழுந்திருக்கிறது. இது மகிழத்தக்கதல்ல. உடல்நிலை வெப்பம் போல இது கூடவும் கூடாது; குறையவும் கூடாது. மிகமிக மெல்லிய அளவுக்கு விலைவாசி உயர்வு இருக்கலாம். அது உற்பத்தியைப் பெருக்கும். ஆனால், இப்போது இருப்பது பொருளாதார மந்தம். பணவாட்ட நிலையின்போது உற்பத்தி இருக்காது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும். மக்கள் அமைதியை இழந்து நாடு வன்முறையைச் சந்திக்கும். ப.சிதம்பரத்தின் பொருளாதார அறிவுக் குறைபாட்டாலும், முதலாளித்துவச் சார்புப் பார்வையாலும் இது ஏற்பட்டது.

''நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு?''

மிக நீண்ட காலமாக நாட்டை ஆள்கிறது காங்கிரஸ். ஒரு நாளைக்கு வெறும் 20 ரூபாய்கூட வருமானம் இல்லாத மக்கள் 40 கோடிப் பேர் இருக்கிறார்கள். மருத்துவ வசதி, கல்வியில் இந்தியா 127-வது இடத்தில் இருக்கிறது. இன வெறி பிடித்த இலங்கைகூட 93-வது இடத்தைப் பிடித்திருப்பதுதான் காங்கிரஸ் நமக்கு வாங்கிக் கொடுத்திருக்கும் கேவலம். அம்பானிகளுக்கு நாடு முழுவதும் காய்கறிக் கடைகளும்பலசரக்குக் கடைகளும் வைக்க நடைபாவாடை விரித்து, சிறுவியாபாரிகளையும் கூலிக்காரர்களாக மாற் றிய ஆட்சிதான் காங்கிரஸூம் தி.மு.க-வும்.

கோவை, திருப்பூர், திருத்துறைப்பூண்டியில் இருக்கும் ஆலைகளுக்கும், பவர்லூம்களுக்கும், பம்பு செட்டுகளுக்கும் மின்சாரம் கிடைக்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையறாமல் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. பன்னாட்டு கம்பெனிக்காரனுக்கு வாக்கு இருந்தால், அவன் வாக்களிக்கட்டும். பொது மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?

எங்கள் அ.தி.மு.க. ஆட்சியின்போது முதல் வர் ஜெயலலிதா, மின் உற்பத்தியைப் பெருக்க பைகாரா மின்திட்டம் கொண்டுவந்தார்.அதற்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சுற்றுச்சூழல் என்று காரணத்தைக் கண்டுபிடித்துத் தடை போட்டார். அம்மா, சும்மா இருக்கவில்லை. உச்ச நீதிமன்றம் போய் வாதாடி அனுமதி வாங் கினார். இவர்கள் நல்லது செய்யவும் மாட் டார்கள்; யாரையும் செய்யவிடவும் மாட்டார் கள். பெருமகன் அண்ணா காலத்துக்குப் பிறகு, நாட்டைப் பீடித்த நோய்... தி.மு.க!

இவர்கள் தனியாக வந்தாலே, மக்கள் வாக்கு அளிக்க மாட்டார்கள். கூட வருகிறது காங்கிரஸ். தங்கபாலு, ப.சிதம்பரம், இளங்கோவன்போன்ற மனிதர்கள் இருக்கும் கட்சிக்கு எவனாவது வாக்கு அளிப்பானா? இவர்கள் வேறு கட்சியில் இருந்தால், பஞ்சாயத்துத் தலைவர்களாகக்கூட வர முடியாது. 10 பேர் நிரந்தரமாக எம்.பி-யாக இருப்பதற்காகவே நடத்தப்படும் கட்சிதான் காங்கிரஸ்.

தமிழ்நாடு நீண்ட கடற்கரையை உடைய மாநிலம். பரதவர்கள் என்று போற்றப்படும் மீனவர்கள் இந்து மாக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொருமுறை யும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஒவ்வொரு சாவின் போதும் கருணாநிதி தவறாமல் டெல்லிக்கு ஒரு கடிதம் உருகி உருகி எழுதிவிடுவார். மையுள்ள வரை இதுபோல் எழுதிக்கொண்டே இருப்பார். தொலைபேசி உள்ளவரை மன்மோகன்சிங்கும் ராஜபக்ஷேவிடம் பேசிக்கொண்டே இருப்பார். இப்படி நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு? இனியும் மீனவப் பெண்கள் விதவையாகக்கூடாது என்றால், காங்கிரஸ் - தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?

தி.மு.க-வைத் தோற்கடித்தால்தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஸ்பெக்ட்ரம் பணம் இருந்தால், இரண்டு ஆண்டுகளுக்கு எந்த வரியும் போடாமல் தமிழ்நாட்டு அரசை நடத்த முடியும். கனிமொழி பிறந்தபோது தொடங்கிய கருணாநிதியின் ஊழல்முறைகேடுகளுக்கு கனிமொழி மூப்படையும் முன்னராவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?

ஹிட்லரைப் போல மனநிலை சரியில்லாத ராஜபக்ஷே, ஈழத்தில் 2 ஆயிரம் விடுதலைப் புலிகளை அழிப்பதாகச் சொல்லி, 2 லட்சம் தமிழர்களைக் கொல்லத் துவங்கி இருக்கிறான். அப்படி அழிப்பவனுக்கு ஆயுதங்கள் கொடுத்தும், ராணுவரீதியான உதவிகள் செய்தும், தமிழினப் படுகொலைக்குத் துணை போகிறது காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு. நாடகத் தோற்றத்தோடு கருணாநிதி தன் சட்டைப் பையில் வாங்கி வைத்துக்கொண்ட தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை உண்மையில் டெல்லிக்கு அனுப்பியிருந்தால், அன்றிரவே போர் நின்றிருக்கும். தங்கள் கையில் மத்திய அரசை வைத்திருந்தும், அப்பாவி ஈழத் தமிழ் மக்களின் அழிவை வேடிக்கை பார்த்து வரும் கருணாநிதியை எந்தச் சொரணையுள்ள தமிழனும் மன்னிக்க மாட்டான். மன்னிப்பவன், தமிழனாக இருக்க மாட்டான்.

ஆளுமையும், தீர்மானமான போக்கும், தெளிவும், உறுதியான செயல்பாடும், தலைமைக் குணங்களும் உடைய எங்கள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வலது, இடது பொதுவுடைமைக் கட்சிகளும், வைகோவும் உள்ள இந்த அணிதான் டெல்லி செங்கோட்டையின் முகத்தை மாற்றும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கருணாநிதி மற்றும் காங்கிரஸ் முகம் காணாமல் போகும்!''

 
''நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு?''
''நாடகம் ஆடுகிறவர்களுக்கு நாடு எதற்கு?''