Published:Updated:

தைரிய மீரா!

தைரிய மீரா!


17-06-09
தைரிய மீரா!
தைரிய மீரா!
தைரிய மீரா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
ப.திருமாவேலன்
தைரிய மீரா!
தைரிய மீரா!

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் கூச்சலும் காய்ச்சலுமான நாள் அது. ஆரம்பத்தில் கை கோத்து ஆட்சிச் சக்கரம் சுழற்றிய காங்கிரசும் கம்யூனிஸ்ட்டுகளும் கைகலப்புகளை அரங்கேற்ற ஆரம்பித்திருந்த சமயம். காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத் திருத்த மசோதாவை நிதித் துறை இணை அமைச்சர் பி.கே.பன்சால் அறிமுகப்படுத்திப் பேசினார். அவருக்குத் துணையாக வந்துஉட்கார்ந்து இருந்தார் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

பன்சாலைப் படிக்க விடவில்லை கம்யூனிஸ்ட்டுகள். 'இன்ஷூரன்ஸைத் தனியாருக்குத் தாரைவார்க்கக் கூடாது!' என்று கத்தியவர்கள் சும்மா இருக்கவில்லை. மந்திரிக்கு முன்னால் கூட்டமாக ஓடி வந்தார்கள். சிலர் அடிக்கப் பாய... சிலர் அவரைப் படிக்கவிடாமல், கையில் இருந்த காகிதத்தைப் பிடுங்க முயற்சிக்க... யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது எழுந்தார் அந்தப் பெண். தனது இரண்டு கைகளையும் அகலமாக விரித்தபடி பன்சாலுக்கு முன் போய் நின்றார். சுமார் பத்துப் பதினைந்து உறுப்பினர்களை மேற் கொண்டு நகரவிடாமல் தடுத்தது அந்த ஒற்றை மனுஷிதான்! பன்சாலைப் பத்திரமாக வெளியே கொண்டுவந்தவரும் அவரே. அவர்தான் இப்போதைய மக்களவையின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மீராகுமார்!

முதல் பெண் சபாநாயகர், முதல் தலித் சபாநாயகர் என்று எத்தனையோ பெருமைகள் சூட்டப்பட்டாலும் மீராகுமாருக்கு முதல் பெருமை, 'ஜெகஜீவன்ராம் மகள்' என்பதுதான். ஐ.எஃப்.எஸ். அதிகாரியாக வெளியுறவுத் துறை வேலையில் இருந்த மீராவை, அரசியலுக்குள் அழைத்து வந்தவர் ராஜீவ். 1985 முதல் நடந்த அத்தனை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் மீரா போட்டியிட்டார். கடந்த முறை, அவருக்கு சமூக நீதித் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. தன்னுடைய எண்ணங்கள், ஆசைகளுக்கு வடிவம் கொடுக்கும் நேரமாக அதை மாற்றிக்கொண்டார் மீரா.

பெற்றோரைப் பாதுகாக்கத் தவறிய வாரிசுகளுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை கொடுக்கலாம் என்று கொண்டுவந்த சட்டம், அவரது பல நாள் கனவுத் திட்டமாம். 'முதியோர் இல்லங்கள் இந்த நாட்டுக் குடும்பங்களின் சமாதிகள்!' என்று சொன்னார். நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோது பெரும்பாலான எதிர்க்கட்சிகள்கூட ஆதரித்தன. வயதானநிலை யில் நடக்க முடியாமல் வீட்டில் இருந்த பி.ஜே.பி-க் காரர், கியான் பிரகாஷ் பிலனியா இந்தச் சட்டத் திருத்தத்தில் பேச வேண்டும் என்பதற்காக வீல் சேரில் சபைக்கு வந்தார். இப்படி எதிர்க்கட்சிகளின் பாராட்டையும் பெற்ற காங்கிரஸ் அமைச்சராக இருந்தார் மீரா.

கவிஞர், ஓவியர், சமூக சேவகி, விளையாட்டு வீராங்கனை என எத்தனையோ முகம் இருந்தாலும், மீரா என்றால் 'தைரியம்' என்கிறது டெல்லி. ''நான் அழுதுகொண்டு இருக்கும் பெண்ணல்ல. கோபக்காரி!'' என்கிறார் மீரா. ஆனால், அவரது கீச்சுக்குரல் உலகின் பிரமாண்ட சபைகளுள் ஒன்றின் சத்தத்தைக் கட்டுப்படுத்துமா?

 
தைரிய மீரா!
-
தைரிய மீரா!