Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


17-06-09
தலையங்கம்
விதை பழுதானால்..?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையங்கம்
தலையங்கம்
 
தலையங்கம்

ல்வி இங்கே கடைச்சரக்கு ஆகிவிட்டது. தவறுகளைத் தட்டிக்கேட்டுத் தண்டிக்க வேண்டிய அரசாங்கம், உருப்படியாக ஏதும் செய்ததாக இதுவரை தகவல் இல்லை. மாறாக, நேற்று முளைத்த கல்லூரிக்குக்கூட 'நிகர்நிலைப் பல்கலைக்கழகம்' என்று அந்தஸ்து கொடுப்பதும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே அங்கு நடக்கும் விழாக் களில் கலந்துகொண்டு ஆசி வழங்கும் கூத்தும்தான் தொடர்கிறது.

நல்ல கல்விக்கான இலக்கணம் வகுப்பதற்கென்றே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அறிவுச் சுடரைத் தூண்டுவதற்காகத் தங்கள் செல்வத்தை எல்லாம் செலவிட்ட எத்தனையோ மேதைகளையும் வள்ளல்களையும் ஈன்றெடுத்த பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. இன்றைக்கும் அந்தத் தூய நோக்கோடு பாடுபடுகிற உத்தமர்கள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், வாணவேடிக்கை நடத்தி, ஒளிவெள்ளம் பாய்ச்சி, உரக்கக் கூவி 'வா, ராசா வா' என்று மாணவர்களை வளைத்துப் பிடிக்கிற 'நவீன கல்வித் தந்தை'களுக்கு மத்தியில்... கல்வியைத் தவமாக நினைப் பவர்களின் குரல் காணாமலே போய்விட்டது.

நாட்டுக்குள் வழக்கமான ஒரு சாபக்கேடு உண்டு... போலிச் சாமியாரைப் பற்றிச் செய்தி வெளியானால், அந்தச் சாமியாரின் விலாசம் ஊரறிந்த தகவலாகி, அங்கே கூட்டம் இன்னும் குவியும். 'விபசாரக் குற்றம்' என்று ஒரு விடுதி மீது காவல் துறை நடவடிக்கை பாய்ந்தால்... அந்த விடுதிக்குத் 'தனிக் கவர்ச்சி'யே வந்துவிடும்.

கல்வித் துறைக்கு இப்போது கிடைத்துவரும் 'கறுப்பு விளம்பரமும்' அப்படித்தான் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஆட்டிப்படைக்கிறது. 'இன்ன பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு இத்தனை லட்சம் பணம் கேட்டார்களாம்' என்று ஊரறியத் தகவல் பரவினால், அதுவும்கூட 'வியாபாரி'களின் 'விலைப்பட்டியலாக' மாறி 'வாடிக்கை யாளர்'களை இழுக்கத்தான் பயன்படுமோ என்ற கவலை எழுகிறது.

நோட்டு கொடுத்தால்தான் 'ஸீட்டு' என்பது கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமாக இருந்துவிட்டுத் தொலையட்டும். நாளைய மன்னர்களான மாணவர்களுக்கும் அதுவே வழிமுறை என்றாகிப்போனால்... போட்ட விதையெல்லாம் பழுதாகும்; நாளைய விளைச்சல் என்னாகும்?

 
தலையங்கம்
-
தலையங்கம்