Published:Updated:

''கருணாநிதி கொடுத்த விலை!''

''கருணாநிதி கொடுத்த விலை!''

ப.திருமாவேலன், படங்கள்: சு.குமரேசன்.
''கருணாநிதி கொடுத்த விலை!''
''கருணாநிதி கொடுத்த விலை!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
''கருணாநிதி கொடுத்த விலை!''
"கருணாநிதி கொடுத்த விலை!"
''கருணாநிதி கொடுத்த விலை!''
''கருணாநிதி கொடுத்த விலை!''

தே வேகத்தில் வந்து விழுகின்றன வார்த்தைகள், கறுப்புச் சால்வையை முறுக்கிவிட்டபடியே கர்ஜனை, கண்களை மூடியபடி வெடிச் சிரிப்பு... உள்ளூட்டத்தில் தான் தோற்றதைவிட ஈழத்துச் சோகம்தான் அவரை அலைக்கழித்திருப்பதை அந்த ஒரு மணி நேரம் உணர்த்தியது.

நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, ம.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து மறைந்த தத்துவக் கவிஞர் குடியரசுவின் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். ''நான் கொடுத்த வாக்குறுதி ஒன்று இன்று நிறைவேறுகிறது. காலமெல்லாம் திராவிட இயக்கத்துக்காக எழுதியும் பேசியும் வந்த குடியரசுக் கவிஞன் தனது கடைசிக் காலம் வரை குடிசை வீட்டில்தான் வாழ்ந்து மறைந்தார்.

அவரது உடலைப் பார்க்கச் சென்ற நான் கட்சியின் சார்பில் அவரது குடும்பத்துக்கு வீடு கட்டித் தர சபதம் ஏற்றேன். கட்சித் தொண்டர்களிடம் வசூலித்த பணத்தில் வீட்டைக் கட்டி முடித்து ஒப்படைத்துவிட்டோம். யாருடைய ரத்தமும் சதையும் இந்த இயக்கத்துக்கு அடி உரமாக இருந்ததோ, அந்தக் குடும்பத்துக்கு என்னால் ஆன உதவி''என்று கண் கலங்கியபடியே பேட்டிக்குத் தயாராகிறார்.

''விருதுநகரில் தோற்றதைப் பற்றித்தானே முதல் கேள்வி'' என்று எடுத்துக் கொடுக்கிறார் உஷார் வைகோ.

''விருதுநகரில் தோற்றுப் போவோம் என்று நினைத்தீர்களா?''

''அப்படி நினைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தில் ஊர் ஊராகப் போய்க்கொண்டு இருந்தபோது நான் பார்த்த மக்கள், அவர்கள் கொடுத்த வரவேற்பு அனைத்துமே உறுதியாக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையைத்தான் என்னுள் விதைத்திருந்தது. பிரசாரம் செய்யக் குறைந்த காலமே இருந்தது. 10 நாட்கள்தான் என்னுடைய தொகுதியில் இருந்தேன். 11 நாட்கள் மற்ற இடங்களில் இருந்தேன். ம.தி.மு.க. நான்கு இடங்களில் போட்டியிட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பால் மற்ற மூன்று தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்தாக வேண்டிய கடமை இருந்தது. அந்தக் கடமையையும் பொறுப்பையும் தட்டிக்கழிக்க முடியாது. எனவே, விருதுநகரில் பல கிராமங்களுக்கு வாக்கு கேட்டுப் போக நேரமில்லை. என்னைத் தோற்கடிக்க தி.மு.க. தலைமை திட்ட மிட்டுச் சதி செய்தது. சிலரை வலுக்கட்டாயமாகப் போட்டியிட வைத்தார்கள். சிலரைப் போட்டியில் இருந்து விலக வைத்தார்கள். இதனால்தான் வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டி வந்தது.

மேலும், வாக்குப்பதிவு நாளன்று வரிசையில் நின்றிருந்த மக்களின் முகங்களைப் பார்த்தபோது எனக்கு உள்ளுணர்வு சொன்னது. மக்கள் வேறு மனநிலைக்கு மாறிவிட்டார்கள், அவர்களைப் பணம் மாற்றிவிட்டது என்பதை உணர்ந்தேன். 200 முதல் 500 ரூபாய் வரை என்று வீடு வீடாகப் போய் கோடிக்கணக்கான பணம் பட்டுவாடா செய்யப்பட்டு இருந்தது, முந்தைய நாள் இரவு. இப்படி எல்லாச் சதிகளும் சேர்ந்துதான் விருதுநகர் வெற்றியை என்னிடம் இருந்து பறித்தன.''

''தொடர் தோல்விகளால் வருத்தங்கள் இல்லையா?''

''அரசியல் களத்தில் வெற்றி-தோல்விகள் இயல்பானவை. ஆள் பலம், அதிகார பலம், ஆட்சி பலம், பண பலம் அத்தனையும் வைத்துக்கொண்டு வந்தபோதும் 15 ஆயிரம்தானே வித்தியாசம்? இதை நான் தோல்வியாகக் கருதவில்லை. என்னைவிட, கட்சிக்காரர்களை நினைத்துத்தான் நான் வருந்தினேன். அவர்களால் இதைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்று யோசித்தேன். என்னைவிட என் கட்சியினர் வலிமையானவர்கள். அழுத்தமானவர்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கட்சியின் செயல்வீரர்களைச் சந்திக்கும் படலத்தை ஆரம்பித்தேன். அனைத்து மாவட்டங்களுக்கும் போய் வந்துவிட்டேன்.கட்சியை விட்டு வருத்தத்தில் இருந்தவர்கள், ஒதுங்கி இருந்தவர்கள் எல்லாரும் மீண்டும் இந்தக் கூட்டங்களுக்கு வந்து என்னை உற்சாகப்படுத்தி னார்கள். ம.தி.மு.க. என்ற கட்சி தலைவர்களால் உருவாக்கப்பட்டதல்ல. தொண்டர்கள் உருவாக்கியது. மரத்தை வைத்தது அவர்கள். தங்கள் ரத்தத்தைத் தண்ணீராக ஊற்றி வளர்க்கிறார்கள்.''

''இந்தத் தோல்விகளால் நீங்கள் பெற்ற பாடம் என்ன? நடவடிக்கைகளில் எதையாவது மாற்றம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா?''

''ம.தி.மு.க. திராவிட இயக்கத்தின் அடிப்படை லட்சியங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கோட்டை. அதில் எந்தக் காலத்திலும் சமரசம் கிடையாது. எங்களை உயிர்ப்புடனும் வலிமையுடனும் இயக்கிக்கொண்டு இருக்கும் ஈழத் தமிழர் பிரச்னையில் தமிழீழம்தான் தீர்வு என்பதில் எந்தக் காலத்திலும் மாற்றம் கிடையாது. மகிந்தா ராஜபக்ஷேவின் கோர தாண்டவத்துக்குப் பிறகு இந்தக் கோரிக்கை இன்னும் வலுவடைந்து இருக்கிறது. எனவே, கொள்கைகளில் எந்த சமரசமும் கிடையாது.

''கருணாநிதி கொடுத்த விலை!''

ஆனால், தேர்தல் வேலைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கட்சியினர் என்னிடம் வலியுறுத்தினார்கள். ஓட்டு வாங்குவதற்காக மற்ற கட்சியினர் செய்யும் தந்திரங்களை நாமும் செய்தாக வேண்டும் என்றார்கள். 'யுத்தத்திலும் காதலிலும் விதிகள் கிடையாது, நீங்கள் பழைய நியாய தர்மங்களைப் பேசிக்கொண்டு இருந்தால் வெற்றி பெற முடியாது. அந்த நியாயங்களால் நிகழ்கால அரசியலுக்கு எந்தப் பயனும் இல்லை' என்று ஓட்டுக்கு துட்டு கொடுப்பதைச் சுட்டிக்காட்டி சிலர் சொன்னார்கள். 'தேர்தலில் வெற்றிதான் முக்கியம், எப்படி ஜெயித்தார்கள் என்று எவரும் பார்ப்பது இல்லை' என்றார்கள். அந்தப் பாவத்தை வைகோ எந்தக் காலத்திலும் செய்ய மாட்டான். ஓட்டு வாங்குவதற்காகப் பணம் கொடுத்தால் நான் 'அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை' என்ற கொள்கையைப் பேசும் தகுதியை இழந்துவிடுவேன். ஓட்டை பணத்துக்கு விற்பதும் பாவம்... பணம் கொடுத்து வாங்குவதும் மகாபாவம். அதை நான் செய்ய மாட்டேன்.

நாங்கள் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டோம். நான்கு தொகுதிகளுக்கும் சம அளவிலான பணத்தைத்தான் செலவு செய்தோம். விருதுநகருக்கு மட்டும் அதிகம் செலவழிக்க வேண்டும் என்று முக்கியஸ்தர்கள் சொன்னதை நான் ஏற்கவில்லை. அரசியல் முடிவுகளுக்கு என்னிடம் யாரும் ஆலோசனை சொல்லலாம். ஆனால், அடிப்படை நெறிமுறைகளை மாற்றிக்கொள்ளச் சொல்லி என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.''

''தி.மு.க-வை எதிர்த்து 16 ஆண்டுகளுக்கு முன் தனிக் கட்சி கண்டீர்கள். ஆனாலும் இன்னும் தி.மு.க. பலமாகத்தானே இருக்கிறது?''

''தேர்தல் வெற்றிகளை அளவுகோலாக வைத்துக் கணக்கிட்டால் ஏமாந்துபோவோம். தி.மு.க. லட்சக்கணக்கான தொண்டர்களின் உதிரபலத்தால் நின்றிருந்த கட்சி. ஆனால், இன்று புதிய பணக்காரர்கள், பண முதலைகளின் பலத்தால் மட்டும்தான் நிற்கிறது. அண்ணா அந்தக் காலத்தில் சொல்வார், உக்கடைத் தேவர், வடபாதி மங்கலத்தார், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் என்று. அதைப் போல இப்போது கருணாநிதியால் புதிய பணக்காரர்கள் உருவாகி இருக்கிறார்கள். இவர்கள் அதிகாரம், ஆட்சி பலத்தால் பணம் சம்பாதித்து அந்தப் பணத்தை மக்களுக்கு மறுபடியும் விதைத்து வெற்றியை அறுவடை செய்கிறது இந்தக் கூட்டம்.

கருணாநிதிக்குத் தெரியும், இந்த வெற்றிக்குத் தான் கொடுத்த விலை எவ்வளவு என்று? பல நூறு கோடிகளைக் கொட்டித்தான் இந்த வெற்றி அவருக்கு வந்திருக்கிறது. எல்லா வெற்றிகளின் போதும் துள்ளிக் குதித்துக் கொண்டாடும் கருணாநிதி இம்முறை, கட்சியின் முன்னணியினரை அழைத்து கோப வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? இன்று நொறுங்கிக்கொண்டு இருக்கிறது கட்சி என்பதை அவர் உணர்ந்துவிட்டார். அதன் வெளிப்பாடுதான் இது.''

''மக்கள் நலத் திட்டங்கள் தி.மு.க-வுக்குத் தொடர் வெற்றியைத் தரும் என்ற எதிர்பார்ப்பைக் கொடுத்திருக்கிறதே?''

''அதை நம்பவில்லை அவர்கள். மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி தங்களது ஊழல் பணத்தை அவர்களுக்குக் கொடுத்து வாக்குகளை வாங்கி வெற்றி பெறுவதில்தான் தி.மு.க. குறியாக இருக்கிறது. 15 லட்சம் வாக்குகள்தான் எங்களது அ.தி.மு.க. கூட்டணியைவிட கருணாநிதி அதிகம் வாங்கி இருக்கிறார். அவரால் முடிந்தது அவ்வளவுதான்.

''கருணாநிதி கொடுத்த விலை!''

இந்த வெற்றியின் மூலம் தங்களது குடும்பத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும், அதைத் தொடர்ச்சியாகத் தக்கவைப்பதும்தான் கருணாநிதியின் முதலும் கடைசியுமான குறிக்கோள். கட்சியை ஏகபோகமாக்கி, ஆட்சியில் முடிந்தளவு தனது குடும்பத்தினரை உள்ளே நுழைத்து, எல்லாவற்றையும் ஏகபோகமாக ஆக்குவதை மக்கள் எப்படி விரும்புவார்கள்? இதை உணராத அளவுக்கு தி.மு.க. தொண்டர்கள் முன் யோசனை இல்லாதவர்கள் அல்ல. உயிர்த்தன்மை இழந்த கட்சிக்கு உயிரூட்ட யாராலும் முடியாது. சட்டமன்றத்துக்கு முன்னதாகத் தேர்தலைக் கொண்டுவந்து வெற்றி பெற நினைக்கிறார்கள். அந்த ஆசை நிறைவேறாது.''

''உங்களைப் போன்றவர்கள் உணர்ச்சிபூர்வமாகப் பேசி இலங்கைப் பிரச்னையைத் திசைதிருப்புவதாக கருணாநிதி சொல்கிறாரே?''

''நாங்கள் என்ன எங்கள் விளம்பரத்துக்காகவா உணர்ச்சிபூர்வமாகப் பேசுகிறோம்? உடலில், உணர்வில் கலந்த என் சகோதரனுக்காகப் பேசுகிறேன். அதைப் பார்த்து அவருக்கு ஏன் ஆத்திரம் வர வேண்டும்? ரேடாரைக் கொடுத்து, கடற்படைக்குத் தகவல் பரிமாற்றம் கொடுத்து, விமான தளத்தைப் பராமரிப்பு செய்து கொடுத்து, ஆயுதங்கள் வழங்கி, அங்குள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல, இந்திய அரசாங்கம் உதவி செய்வதைக் குற்றம் சாட்டினால், இவருக்கு ஏன் கோபம் வர வேண்டும்? முத்துக்குமார் தொடங்கி 14 பேர் தங்களின் தேகங்களுக்கு தீ வைத்துக்கொண்டபோது, இரங்கல் அறிக்கைகள் வெளியிடாத கருணாநிதி, தன்னுடைய காவல் துறை அதிகாரியை வைத்து அந்தத் தீக்குளிப்பு தியாகிகள் அனைவரையும் கொச்சைப்படுத்தினார். சொந்தப் பிரச்னைக்காகத் தீக்குளித்தார்கள், பொண்டாட்டியுடன் சண்டை போட்டுத் தீக்குளித்தார்கள் என்று தமிழினத் தியாகிகளை நயவஞ்சகமாகக் கொச்சைப்படுத்திய கருணாநிதிக்கும் ஹிந்திப் போராட்டத் தியாகிகளைக் கொச்சைப் படுத்திய பக்தவத்சலத்துக்கும் என்ன வித்தியாசம்? இதைக் கண்டித்துப் பேசக் கூடாதா?''

''தமிழீழம் கேட்டுப் போராடிய புலிகள் அமைப்பு முழுமையாக அடக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறதா?''

''புலிகள் அமைப்பு தற்காலிகமாக அடக்கப்பட்டு இருக்கிறது. என்னிடம் கடைசியாக மே 13-ம் தேதி பேசிய நடேசன் சொன்ன கடைசி வார்த்தைகள், 'நாங்கள் வெல்வோம் அண்ணா' என்பதுதான். அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. இது வெறும் நம்பிக்கை அல்ல. முக்கியமான தளபதிகள் பலர் அங்கிருந்து வெளியேறி இன்னமும் இருக்கிறார்கள். எனவே, தமிழீழம்தான் சரியான தீர்வு. அது விரைவில் மலரும்.''

''பிரபாகரன்?''

''அதிலென்ன சந்தேகம்! அவர் இருக்கிறார். யாருக்கும் துளியளவு சந்தேகம் தேவை இல்லை. சிங்கள ராணுவம் காட்டும் உடல் அவருடைது அல்ல. அவருடைய உடலாக இருந்தால், இன்னமும் டி.என்.ஏ. அறிக்கையை ஏன் ராணுவம் தரவில்லை? பிரபாகரனின் பெற்றோர் ராணுவத்தின் வசம் இருக் கிறார்கள். அவர்களை வைத்து இந்தச் சோதனையை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து எங்களது நம்பிக்கையை ராஜபக்ஷே தகர்க்கலாமே? ஏன் செய்யவில்லை?

கடைசிக்கட்டத் தடையைத் தகர்த்து வெளியேறிய தளபதிகள் சொல்வது, 'தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார்' என்று. இந்த நம்பிக்கை இன்னும் சில மாதங்கள் ஆக ஆகத்தான் வலுப்பெறும்'' சஸ்பென்ஸ் வைத்து முடிக்கிறார் வைகோ!

 
''கருணாநிதி கொடுத்த விலை!''
''கருணாநிதி கொடுத்த விலை!''