Published:Updated:

மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!

எலெக்ஷன் ஸ்பெஷல் சர்வே ரிசல்ட்விகடன் டீம்

மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!

எலெக்ஷன் ஸ்பெஷல் சர்வே ரிசல்ட்விகடன் டீம்

Published:Updated:
##~##
கூ
ட்டணிகள் இறுதியாகி, வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி,  பிரசாரப் பயணமும் தொடங்கிவிட்டது. ஆனால், 'கதாநாயகர்கள்’ மனதில் என்ன இருக்கிறது?!

 தமிழகத் தேர்தல் களம் எந்த அலையும் இல்லாமல் தெளிந்த நீரோடைபோலத்தான் இப்போது தளும்பிக்கொண்டு இருக்கிறது. கடந்த காலங்களில் விகடனின் சர்வேக்கள் மக்களின் மனநிலையைத் துல்லியமாகப் பிரதி பலித்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு என்று தனித் தனியாக சர்வேக்களை வெளியிட்டோம். இந்தத் தேர்தல் களத்தின் காலம் மிகக் குறுகிவிட்டதால், ஒட்டுமொத்தமாக மக்களின் மனசையும் அறிய பொது சர்வே எடுக்கப்பட்டது!

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து ம.தி.மு.க கழற்றிவிடப்பட்ட பரபரப்பான சூழல் ஒரு பக்கம்... இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி என்று வீதிக்கு வீதி பேசப்பட்ட தி.மு.க தேர்தல் அறிக்கை மறுபக்கம்... தேர்தல் சூடு பரவிய சூழலில் மக்களிடையே நம் படை ஊடுருவியது. மார்ச் 19, 20 தேதிகளில் விகடன் நிருபர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 100 பேர்கொண்ட குழு, மாநகரம், நகரம், கிராமம், குக்கிராமம் எனத் தமிழகம் முழுக்கப் புகுந்தது. அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து, சர்வே கேள்வித் தாளை நீட்டியது விகடன் படை!

மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, தே.மு.தி.க. வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பிரசாரம் போன்ற காட்சிகள் இன்னமும் அரங் கேறாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட மக்களின் மனநிலை இது. தேர்தல் பிரசாரம் பட்டையைக் கிளப்பும்போது, அதில் தெறிக்கும் அனல் குற்றச்சாட்டுகளும், பரஸ்பரப் புகார்களும், பணம் - பலம் விளையாட்டுக்களும், வாக்காளர்களின் மனநிலையை எப்படி எல்லாம் மாற்றும் என்பதும் கவனிக்க வேண்டிய அம்சம். இருந்தாலும், இன்று இதுதான் தமிழக மக்கள் மனசு!  

''நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது அ.தி.மு.க. கூட்டணி. காங்கிரஸ் தந்த குடைச்சலில் தி.மு.க-தான் குட்டையைக் குழப்பிட்டு இருந்தாங்கன்னு பார்த்தா, 'நாங்க மட்டும் இளைச்சவங்களா?’னு அதிரடி பண்ணி, ஜெயலலிதா நல்லா காமெடி பண்ணினார். அவர் ஜெயிக்கக் கிடைச்ச நல்ல வாய்ப்பை அவரே குறைச் சுக்கிட்டார்'' என்ற குரல்களைப் பல இடங்களில் கேட்க முடிந்தது. ஜெயலலிதா கூட்டணி கட்சிகளை நடத்திய விதம் நடுநிலையாளர்கள் பலரையும் முகம் சுளிக்கவைத்து இருக்கிறது. ''தலைநகரைவிட்டு தலை தப்பிச்சாப் போதும்னு முதல்வரே திருவாரூருக்கு ஓடுறார். அவருக்கே எலெக்ஷன் ரிசல்ட் எப்படி இருக்கும்னு புரிஞ்சிருச்சு. அதைப் பயன் படுத்திக்காம, வெற்றி பெறுவோம்கிற மமதையில் ஜெயலலிதா தப்பான முடிவு களை எடுத்துட்டார். அவரை நினைச்சுப் பரிதாபப்படக்கூட முடியலை'' என்றார் ஸ்ரீரங்கத்துக்காரர்  ஒருவர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்தத் தேர்தலில் 'கொஞ்சமாகவே தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்கிறது சர்வே. 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வைத்து ஓட்டுப் போடுவேன்’ என்று சுமார் 46 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதே நேரம், சுமார் 26 சதவிகி தத்தினர் 'இந்த விவகாரத்தில் இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று சொன்னதும் முக்கிய விஷயமாகும். வைகோ அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேற்றப் பட்டது மக்களிடையே பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிந்தது. பலர், 'இது வைகோவுக்குச் இழைக்கப்பட்ட அநீதி’ என்றே கருத்துச் சொல்கிறார்கள்.

''ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆ.ராசா கைது, சி.பி.ஐ. சோதனை, சாதிக் பாட்சா தற்கொலை என்று தி.மு.க கட்சி மேல் விழுந்த ஊழல் கறையால், அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடலாம்னு நினைச்சோம். ஆனா, அந்த அம்மா இப்பவே ஆட ஆரம்பிச்சிட்டாங்க'' என்று தேனி ஏரியாவில் அலுத்துக்கொண்டார்கள் மக்கள்.

உசிலம்பட்டியில், 'ஜெயலலிதா வந்தா, சட்டம் - ஒழுங்கு சரியா இருக்கும். அதிகாரிங்க பயப்படுவாங்க. நிர்வாகம் சரியா நடக்கும். அதனால எங்களுக்கு என்ன பிரயோஜனம்? கலைஞர் வந்தா, டி.வி, மிக்ஸிலாம் கிடைக்கும். அதனால கருணாநிதிக்குத்தான் ஓட்டுப் போடுவேன்’ என்றார் ஒரு பெரியம்மா.

யார் நல்லாட்சி தருவார்கள் என்ற கேள்விக்கு, கருணாநிதியைவிட ஜெயலலிதாவே கூடுதல் சதவிகிதத்தைப் பெற்று இருப்பது வியப்பு. யாருக்கு வாக்கு அளிப்பீர்கள் என்ற கேள்விக்கும் தி.மு.க. கூட்டணியைவிட அ.தி.மு.க. கூட்டணியே அதிக சதவிகிதம் வாங்கி இருப்பது, ஏதோ ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 2,081 வாக்காளர்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்தான் கட்டங்களில் இடம்பெற்றுஉள்ளன!

மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!
மாற்றம் விரும்பும் மக்கள் மனசு!