Published:Updated:

மாவோயிஸ்ட் மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட்!

மாவோயிஸ்ட் மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட்!


08-07-09
மாவோயிஸ்ட் மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட்!
மாவோயிஸ்ட் மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட்!
மாவோயிஸ்ட் மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
ப.திருமாவேலன்
மாவோயிஸ்ட் மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட்!

கொல்கத்தா என்று என்ன நோக்கத்துக்காகப் பெயரைத் திருத்தினார்களோ... இன்று அது காரணப் பெயர்! கொலைகளும், துப் பாக்கிச் சத்தங்களும் மலிந்துகிடக் கின்றன மேற்கு வங்கத்தில். செய்வது அறியாது தவித்து நிற்கிறது ஆளும் மாநில அரசும் மத்திய அரசும்.

மாவோயிஸ்ட் மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட்!

மேற்கு வங்க மாநிலம் லால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை மாவோயிஸ்ட்டுகள் கைப்பற்றி வைத்து இருப்பதாக மார்க்சிஸ்ட் மாநில அரசு கதறுகிறது. ஆனால், மாவோ யிஸ்ட்டுகள் ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து இரண்டு நாட்கள் பந்த் அறிவிக்கிறார்கள். 'யாரும் வெளியே போக வேண்டாம்' என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதறுகிறார். டெல்லிக்குப் பறந்த மாநில முதல் வர் புத்ததேவ், பிரதமர் மன்மோகன் முன்னால் மௌனமாக உட்காருகிறார். 'ஏகாதிபத்யமும் முதலாளித்துவமும்தான் நம்முடைய எதிரிகள்' என்று 40 ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் போட்டபோது புத்ததேவ், இளைஞர். பதவிகளை அடை யாதவர். 'டாடா பிர்லா கூட் டாளி, பாட்டாளிக்குப் பகையாளி' என்பது சி.பி.எம்-மின் பழைய கோஷம். ஆனால், இன்று சி.பி.எம். காரர்களே டாடாவுக்குக் கூட்டாளியாகிவிட்டனர் என்று புகார் வாசிக்கிறார்கள் மாவோயிஸ்ட்டுகள்.

மாவோயிஸ்ட் மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட்!

பீகாரும் மேற்கு வங்கமும் மலை வாழ், பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் பகுதி. 40 சதவிகித மக்கள் பழங்குடியினர். அதுவும் மிதுனாப் பூர் முழுக்க அம்மக்கள்தான். "32 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சி யில் நாங்கள் தொடர்ந்து புறக் கணிக்கப்படுகிறோம். நாங்கள் ஒன்றும் பாலாறும் தேனாறும் ஓட வேண்டும் என எதிர்பார்க்க வில்லை. வீடு, மின்சாரம், பள்ளிக் கூடம் என இந்த நாட்டின் குடி மகனுக்குரிய அடிப்படை சிவில் உரிமைகளைத்தான் கேட்கிறோம். இவற்றைத் தராததுடன், எங்களின் பூர்வீக வாழ்விடத்தில் இருந்து நாங்கள் தொடர்ந்து துரத்தி அடிக் கப்படுகிறோம். எங்கள் மூதாதை யர்கள் வாழ்ந்த மலைகள் தனியார் முதலாளிகளுக்கு பட்டா போட்டுக் கொடுக்கப்படுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலமாக்க முயற்சி நடக்கிறது'' என்று கர்ஜிக்கிறார் 'போலீசுக்கு எதிரான பழங்குடி அமைப்பு' தலைவர் சத்ரதார் மகோதா. "பழங்குடி மக்களின் முன்னேற்றத்தில் அரசு ஆர்வம்காட்டாத தால்தான் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டனர் மக்கள்'' என்று சொல்கிறார் மாவோயிஸ்ட் தலைவர் கோடீஸ்வர்ராவ்.

மாவோயிஸ்ட் மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட்!

இதை அடியோடு மறுக்கிறது மேற்கு வங்க அரசு. "மாவோயிஸ்ட்டுகளுக்கும் மக்களுக்கும் சம்பந்தம் இல்லை. இவர்கள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார் கள். மாவோயிஸ்ட் அமைப்புக்கும் காங்கிரஸ்-மம்தா கட்சிக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இது ஆட்சியைக் கவிழ்க்கச் செய்யும் சதி'' என்கிறார் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா. ஆனால், யார் எதைச் சொன்னாலும் பழங் குடி மக்களிடம் மாவோயிஸ்ட்டு களுக்கான செல்வாக்கு வளர்வதைத் தடுக்க முடியவில்லை.

நக்சலைட்டுகள், தீவிர கம்யூனிஸ்ட்டுகள் என்றெல்லாம் இவர் கள் அழைக்கப்பட்டாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்_ லெனினிஸ்ட்) என்பதுதான் அமைப்பின் ஆரம்ப காலப் பெயர். அதிலிருந்து பல பிரிவுகள் வந்தன. பீகாரில் செல்வாக்கான மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையமும் ஆந்திராவின் மக்கள் யுத்தக் குழுவும் 2004-ல் ஒன்றாக இணைந்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்பது அதன் பெயர். இன்று மத்திய, மாநில ஆயுதப்படைகளைத் திணறடித்து வருபவர்கள் இவர்கள்தான். இவர் களை ஒடுக்குவதற்காக அரசாங் கங்கள் ஆயுதம் தரித்த எதிர் குழுக் களை உருவாக்கி உலவவிட்டன. சட்டீஸ்கரில் சல்வார் ஜூகும், மேற்கு வங்கத்தில் ஹர்மத் வாஹினி, ஆந்திராவில் கோப்ரா என்று கிளம்பியவர்கள் மாவோயிஸ்ட்டுகளை எதிர்த்து போலீஸ் துணை யுடன் போராடினார்கள். ஆனா லும், மக்கள் ஆதரவு மாவோ யிஸ்ட்டுகள் பக்கம்தான் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது நந்திகிராம்.

மாவோயிஸ்ட் மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட்!

வட கிழக்கு, மத்திய மாகாணங்களின் தேக்கம் குறித்து ஆய்வு செய்த திட்டக் கமிஷன் அறிக்கை, "விவசாயிகளின் இந்த இயக்கங் களை அரசியல் இயக்கமாகத்தான் பார்க்க வேண்டும். நிலமற்ற ஏழை விவசாயிகள், விவசாயக் கூலிகள், தலித் மற்றும் ஆதிவாசி மக்கள் இந்த அமைப்புகளை ஆதரிக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் பேச்சுவார்த்தை என்று நிபந்தனை விதிக்கக் கூடாது'' என்று சொல்லி இருப்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மம்தாவை நினைத்து மாவோயிஸ்ட்டுகளை மார்க்சிஸ்ட் அரசு புறக்கணிக்கக் கூடாது. வெறும் துப்பாக்கி ரவைகளால் நிரந்தர வெற்றிகளை ஈட்ட முடியாது என்பதை மாவோயிஸ்ட்டுகளும் புரிந்துகொள்ள வேண்டும். ஆயுதப் போராட்டத்தில் இருந்து தேர்தல் ஜனநாயகத்துக்குத் திரும்பிய நேபாளமே அதற்கான அண்மை உதாரணம்!

 
மாவோயிஸ்ட் மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட்!
-
மாவோயிஸ்ட் மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட்!