08-07-09

ஆ..பத்து!

இங்கே ஒரு வழக்கம் உண்டு. கும்பகோணம் பள்ளியில் தீப்பிடித்துக் குழந்தைகள் கருகினால், பள்ளிகளில் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்துவார்கள். ஏரி உடைந்து ஊருக்குள் வரும்போது மட்டும்தான், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பற்றிய புதிய ஞானோதயம் பிறக்கும். அது போல்தான், இப்போது கல்வித் துறையிலும் கலவரமான புரட்சி அறிவிப்புகள் வெளியாகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பொறியியல் கல்லூரிகளில் நன்கொடைக் கொள்ளை நடப்பது குறித்து ஊடகங்களில் செய்திச் சூறாவளி அடித்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், 'அடுத்த நூறே நாளில் ஒட்டுமொத்த கல்வித் திட்டத்தையும் சீரமைத்துக் காட்டுகிறேன்' என்று புறப்பட்டு இருக்கிறார் மத்திய அமைச்சர் கபில்சிபல். 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இனி உண்டா இல்லையா' என்று வீட்டுக்கு வீடு விவாதம் நடந்துகொண்டு இருக்க... உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியோ, 'ஐந்து பாடங்களில் தேர்வானால், ஆறாவது பாடம் தள்ளுபடி' என்று பாண்டி பஜார் வியாபாரியாகக் குபீர் அறிவிப்பு செய்து இருக்கிறார்.

கல்வித் துறையில் சீரமைப்பு கட்டாயம் தேவைதான். அச்சடித்த பாடங்களைக் கண்ணால் விழுங்கி, கைகளால் தாளில் கக்குவது மட்டுமே முழுமையான கல்வியல்ல என்று மாணவர்களுக்கு உணர்த்துவதற்கு இத்தகைய கல்விச் சீர்திருத்தம் முக்கியம்தான். ஆனால், படிக்கிற மாணவர்களைவிட, அவர்களுக்குப் போதிக்கும் ஆசான்களுக்கல்லவா காலத்துக்கேற்ற வழிகாட்டுதல் முதலில் தேவை!

ஒரு பாடத்துக்கே மூன்று புத்தகம், வாரத்துக்கு நான்கு தனிக்கவன வகுப்புகள், மாதம் ஐந்தாறு தேர்வுகள் என்று கசக்கிப் பிழிகிற கல்வித் திட்டத்தின்கீழ் வருகிற மாணவர்களுக்குப் படிப்பு பளுவும், மன அழுத்தமும் குறைக்கப்பட வேண்டியது தேவைதான். ஆனால், அளவான பாடமாக இருந்தாலும், அதைத் தரமாகத் தருவதற்கேற்ற திறமையோடு மற்ற பள்ளிகளின் ஆசிரியர்களைக் கூர்மைப்படுத்த வேண்டியதும் அரசின் கடமை அல்லவா?

அதைச் செய்வதற்கு முன்பே, பொதுத் தேர்வு ரத்து என்பதை ஏதோ ஒட்டுமொத்த சலுகையாக அறிவித்துவிட்டால்... ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறனுக்கும் பொறுப்பு உணர்வுக்கும் உள்ள குறைந்தபட்ச அளவுகோலையும் நீக்கியது போல் ஆகாதா?

அஸ்திவாரத்தை உறுதிப்படுத்தாமலே ஆகாயம் தொட கட்டடம் எழுப்ப நினைத்தால்... அது மிகப் பெரிய ஆபத்து அல்லவா? பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து யோசனையும் அப்படித்தான்!