Published:Updated:

முன்கூட்டியே தேர்தலை திணிக்க முயற்சி: பிரதமர்

முன்கூட்டியே தேர்தலை திணிக்க முயற்சி: பிரதமர்
முன்கூட்டியே தேர்தலை திணிக்க முயற்சி: பிரதமர்

முன்கூட்டியே தேர்தலை திணிக்க முயற்சி: பிரதமர்

புதுடெல்லி, செப்.28,2011

முன்கூட்டியே தேர்தலை திணிக்க முயற்சி: பிரதமர்

நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே திணிக்க எதிர்கட்சிகள் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டிய பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் என்று தெரிவித்தார். ##~~##

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை இரவு டெல்லி திரும்பினார்.

முன்னதாக, விமானத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், "நான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, 5 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். எனவே இன்னும் 2 ஆண்டுகள் காத்திருங்கள் என்று, எதிர்க்கட்சியினரிடம் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன்.

ஆனால், எங்கள் அரசு பற்றிய சில பலவீனமான அம்சங்களை வைத்துக் கொண்டு, முன்கூட்டியே தேர்தலை திணித்து விடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது சரியான வழிமுறை அல்ல. மக்கள் அனுமதி அளித்து உள்ளபடி, 5 ஆண்டுகளுக்கு இந்த அரசு நிச்சயம் நீடிக்கும்," என்றார்.

2ஜி 'குறிப்பு' விவகாரத்தில் பிரணாப் - சிதம்பரம் இடையிலான உரசல் குறித்து கேட்டதற்கு, "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர்களுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஊடகங்கள் தான் அப்படி நினைக்கிறது. அதுபோன்று எந்த பிரச்னையும் இருப்பதாக நான் கருதவில்லை. உறுதியான எங்கள் அரசால், நிலையான ஆட்சியை வழங்க முடியும். எனது அமைச்சரவையில் எந்தவித தகராறும் இல்லை. எப்போதும் திறந்த மனதுடன் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அமைச்சர்களுக்குள் பல்வேறு எண்ணங்கள், கருத்துகள் இருக்கலாம். இதனால், எங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று அர்த்தம் அல்ல. இதுபோன்ற விவாதங்கள், சரியான ஒரு முடிவை எடுப்பதற்கு உதவியாக இருக்கும். ஆனால், கடந்த சில நாட்களாக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி வருவது போல் எதுவும் நடைபெறவில்லை," என்றார்.

சிதம்பரம் மீது முழு நம்பிக்கை...

2ஜி குறிப்பில் சிதம்பரம் குறைகூறப்பட்டுள்ளது பற்றி கேட்டதற்கு, "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிதி அமைச்சகத்தின் குறிப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் தற்போது நீதிமன்றத்த்தில் விசாரணையில் இருந்து வருகின்றன. எனவே இந்த பிரச்னையில் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது," என்றார்.

அடுத்த கட்டுரைக்கு