''நான் கேட்பது, ஜெயலலிதாவின் பல்வேறு தவறுகளுக்கு சசிகலாவைக் காரணமாகச் சொல்வதைப் பற்றி?''
''சட்டப்படி யார் கையெழுத்துப் போடுகிறாரோ, அவருக்குத்தான் எல்லாப் பொறுப்பும் உண்டு அறிவிப்பைச் செய்பவர், தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. இவரால்தான் இந்த முடிவு எடுத்தேன், தவறாக நான் வழிகாட்டப்பட்டேன் என்று சொல்லி யாரும் தப்ப முடியாது. என்னுடைய குடும்பத்தினர் தவறு செய்தால், அவர் களைஅனுப்பிவிடுங்கள் என்பதுதான் என்னுடைய பதில்.
இத்தனை ஆண்டு கால ஜெயலலிதாவின்வளர்ச் சிக்கு சசிகலாவின் பங்களிப்புகள் எவ்வளவுஅமைந்தி ருந்தது என்பதைத் தமிழக வரலாற்றில் யாரும் மறைக்க முடியாது... ஜெ.ஜெ. உள்பட!'' என்று அழுத்தமாக முடிக்கிறார் எம்.என்!
|