Published:Updated:

மேற்கு வங்க இடைத்தேர்தலில் மம்தா வெற்றி!

மேற்கு வங்க இடைத்தேர்தலில் மம்தா வெற்றி!
மேற்கு வங்க இடைத்தேர்தலில் மம்தா வெற்றி!

மேற்கு வங்க இடைத்தேர்தலில் மம்தா வெற்றி!

கொல்கத்தா, செப்.28,2011

மேற்கு வங்க இடைத்தேர்தலில் மம்தா வெற்றி!

மேற்கு வங்கத்தின் பவானிபூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.

அவர் தனக்கு அடுத்து வந்த வேட்பாளரைக் காட்டிலும் 54,213 வாக்குகள் அதிகம் பெற்றதாக மேற்கு வங்க மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இதேபோல், பாசிர்ஹத் (வடக்கு) தொகுதி இடைத்தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது.

இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார்.

முதல்வர் பதவி ஏற்ற 6 மாதத்துக்கு எம்.எல்.ஏ.வாக அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை சுப்ரதா பாக்ஷி ராஜினாமா செய்தார். இதையடுத்து, பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

பாசிர்ஹத்(வடக்கு) தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்தபா பின் காசிம் (மார்க்சிஸ்ட்), கொல்கத்தாவில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதால் அங்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு