Published:Updated:

தேமுதிக அணியில் இந்திய கம்யூ. : விஜயகாந்த்

தேமுதிக அணியில் இந்திய கம்யூ. : விஜயகாந்த்
தேமுதிக அணியில் இந்திய கம்யூ. : விஜயகாந்த்

தேமுதிக அணியில் இந்திய கம்யூ. : விஜயகாந்த்

சென்னை, செப்.28,2011

தேமுதிக அணியில் இந்திய கம்யூ. : விஜயகாந்த்

தேமுதிக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணையவுள்ளதாக விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்கான தேமுதிக மேயர் வேட்பாளர்  வேல்முருகன் மற்றும் 200 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மயிலாப்பூரில் இன்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுகையில், "உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எங்களுடன் வரவுள்ளது.

மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பப்படிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்தேன்.
தற்போதுள்ள ஆட்சியை ஆறு மாதம் குறை சொல்ல மாட்டேன். இப்போது எங்களால் என்ன செய்ய முடியும்?
 
தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம்.

காவல்துறையினர் சரியாக இருந்தால் நாட்டில் 50 சதவீத பிரச்னைகள் சரியாகி விடும்.

தமிழகத்தில் நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்குதான் ஓட்டளிக்க வேண்டும் என்பதல்ல. தேமுதிகவுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நான் யாருக்கும் பயப்படமாட்டேன். தவறு நடந்தால் தட்டிக் கேட்பேன்.
 
தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல திட்டங்களை தேமுதிக வைத்துள்ளது. ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் இத்திட்டங்களை செயல்படுத்த முடியும்," என்றார் விஜயகாந்த்.

அடுத்த கட்டுரைக்கு