Published:Updated:

மோடிக்கு எதிரான காவல்துறை அதிகாரி கைது!

Vikatan Correspondent
மோடிக்கு எதிரான காவல்துறை அதிகாரி கைது!
மோடிக்கு எதிரான காவல்துறை அதிகாரி கைது!

காந்திநகர், அக்.01,2011

மோடிக்கு எதிரான காவல்துறை அதிகாரி கைது!

குஜராத் கலவர வழக்கில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக சாட்சியளித்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை ஐ.ஜி. பதவியில் இருக்கும் சஞ்சீவ் பட், தனக்கு கீழ் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம், மோடிக்கு எதிராக சாட்சியமளிக்கும்படி பலவந்தப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரின் அடிப்படையிலேயே சஞ்சீவ் வெள்ளிக்கிழமை காந்திநகரில் கைது செய்யப்பட்டிருப்பதாக குஜராத் அரசு தரப்பு தெரிவிக்கிறது.

அதேவேளையில், நரேந்திர மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று சாட்சியம் அளித்ததற்காகவே சஞ்சீவ் பட் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக சஞ்சீவுக்கு நெருக்கமானவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை அனுமதிக்குமாறு முதல்வர் நரேந்திர மோடி அம்மாநில காவல்துறைக்கு உத்திரவு வழங்கியதாக உச்ச நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் சாட்சியம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.