Published:Updated:

தெலுங்கானா: விவாவத்தைக் கிளப்பும் ஆசாத் அறிக்கை

Vikatan Correspondent
தெலுங்கானா: விவாவத்தைக் கிளப்பும் ஆசாத் அறிக்கை
தெலுங்கானா: விவாவத்தைக் கிளப்பும் ஆசாத் அறிக்கை

புதுடெல்லி, அக்.1,2011

தெலுங்கானா: விவாவத்தைக் கிளப்பும் ஆசாத் அறிக்கை

தெலுங்கானா பிரச்னை தொடர்பாக மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் அளித்துள்ள ஆய்வறிக்கை, இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தியே தீர்வு காண வேண்டும் என்று கூறுகிறது.

ஆந்திராவில் தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அமைப்புகள் என பல்வேறு தரப்பினரால் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு அறிக்கை அளிக்குமாறு ஆந்திராவின் காங்கிரஸ் பொறுப்பாளரும், மத்திய சுகாதார அமைச்சருமான குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டிருந்தது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்கள் ஆகியோரை அவர் நேரில் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

தெலுங்கானா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டது.

அந்தந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பிரதேசம் சார்ந்த நிலையை எடுத்துரைத்ததாக தெரிகிறது. அவர்களின் கருத்துக்களை கடந்த 3 மாதங்களாக கேட்டறிந்த பிறகு, அது தொடர்பான விவர அறிக்கை ஒன்றை குலாம் நபி ஆசாத் தயாரித்தார்.

இந்த நிலையில், தனது ஆய்வு அறிக்கையை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஆசாத் அளித்துள்ளார்.

தெலுங்கான விவகாரத்தில் பல்வேறு தரப்பினருடன் மேலும் முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே ஆசாத் அறிக்கையின் முக்கிய அம்சமாக உள்ளது என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களில் அடிப்படையில், இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சோனியா காந்தி சில அறிவுறுத்தல்களை வழங்குவார் எனத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, இப்பிரச்னையில் மத்திய அரசு விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.