ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
அமெரிக்காய் ஆபத்து!
தலையங்கம்

ண்மையை வெகுகாலம் ஒளித்துவைக்க முடியாது என்ற தத்துவத்தை விளக்க, 'கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்' என்பார்கள். இப்போது, அமெரிக்கத் தயாரிப்பான மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காயைப் பரிசோதனை அடிப்படையில் பயிரிடலாம் என்று இந்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக வரும் செய்தியும் இதைத்தான் நினைவூட்டுகிறது!

'நாட்டுக் கத்திரிக்காய்க்கும், வீரிய ஒட்டு ரக கத்திரிக்காய்க்கும் பூச்சித் தாக்குதல் ஆபத்து இருக்கிறது. எனவே, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சுற்றுச்சூழலுக்கும், உண்ணும் மனிதர்களுக்கும் இதனால் தீங்கு உண்டாகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளில், பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகாத வண்ணம் எதிர்ப்புச் சக்தி ஏற்றப்பட்டு இருக்கிறது' என்பதுதான் இதைச் சந்தைப்படுத்தும் அமெரிக்க நிறுவனத்தின் வாதம்.

'மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயைச் சாப்பிட்டால் வரக்கூடிய பக்க விளைவுகள் பற்றி முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை; மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் விதையை மறுபடி பயன்படுத்த முடியாது. எனவே, பாரம்பரிய இந்திய விவசாய முறைப்படி, விளைவித்தவனே அதில் இருந்து விதையும் எடுத்து அடுத்தடுத்த போகங்களுக்குப் பயன்படுத்தும் தன்னிறைவு நிலை கைவிட்டுப் போகும்; விதை கொடுத்த நிறுவனத்திடம் நிரந்தரமாகக் கையேந்த வேண்டிய கட்டாயம் உண்டாகும்' என்பது இதை எதிர்ப்போரின் எச்சரிக்கை!

ஏற்கெனவே, இது போலப் பருத்தி விதைகளை வாங்கிப் பயன்படுத்திய இந்திய விவசாயிகளின் கசப்பான அனுபவங்களும், அந்தப் பருத்தித் தோட்டத்தில் மேய்ந்த கால்நடைகள் இறந்துபோனதாக வந்த தகவல்களும் மறக்கக் கூடாதவை!

விவசாயப் பாரம்பரியத்தில் நம்மைவிட மிகக் குறைந்த அனுபவமே உள்ள ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு இன்னும் பச்சைக் கொடி காட்டவில்லை. சீனாவும் இதுவரை ஏற்கவில்லை. அப்படி இருக்க, கத்திரிக்காயின் தாயகமாகவே விளங்கும் இந்தியா, அவசரப்பட வேண்டிய அவசியம் என்ன?

பன்னாட்டு நிறுவனங்களின் பரிசோதனை முறைகளுக்கு நாம் ஏன் 'எலி'களாக மாற வேண்டும்?

 
தலையங்கம்
தலையங்கம்