ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு:
நாடாளுமன்றத் தேர்தலில் தான் அமைத்த வலுவான கூட்டணி தோற்றுப்போனதில் ஜெயலலிதாவுக்கு அதிக வருத்தம். இதை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 'தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணிக் கணக்குதான் என்றைக்கும் ஜெயிக்கும்' என்பார்கள். ஆனால், அது செல்லுபடி ஆகவில்லை. எனவே, 'பலமற்ற கட்சிகளை சும்மா பேச்சுக்கு சேர்த்துக்கொண்டு வளர்த்துவிடுவதில் அர்த்தம் இல்லை' என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார். ஆடு புலி ஆட்டம் ஆடாமல் உறுதியாக இருக்கும் வைகோ நீங்கலாக, மற்றவர்களைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை ஜெயலலிதா.
'கருணாநிதியின் வாக்கு வங்கியை நிறையக் கட்சிகளைச் சேர்ப்பதால் உடைக்க முடியாது' என்று நினைக்கும் ஜெயலலிதா, தி.மு.க. பாணியிலான தேர்தல் வேலைகளை ஒழுங்காகப் பார்த்தாலே போதும் என்று கருதுகிறார். கட்சியைப் பலப்படுத்துவது, பொறுப்பாளர்களை முடுக்கிவிடுவது, பண பலம் உள்ளவர்கள் கையில் அதிகாரத்தைக் கொடுப்பது போன்ற காரியங்களில் இறங்க இருக்கிறார்.
மொத்தத்தில், அத்தனை கட்சிகளின் நிறங்களும் இன்னும் சில மாதங்களில் மாறப் போகின்றன!
பார்க்கலாமே!
|