Published:Updated:

மூவரை விடுவிக்க சோனியாவுக்கு கருணாநிதி கோரிக்கை

Vikatan Correspondent
மூவரை விடுவிக்க சோனியாவுக்கு கருணாநிதி கோரிக்கை
மூவரை விடுவிக்க சோனியாவுக்கு கருணாநிதி கோரிக்கை

சென்னை, அக்.6,2011

மூவரை விடுவிக்க சோனியாவுக்கு கருணாநிதி கோரிக்கை

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையில் சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, இருபதாண்டு காலத்துக்கு மேலாக சிறையிலே வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்;

அதற்காக, தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநனருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அனைவரும் கேட்டுக்கொண்டு பல நாட்களாகியும், தமிழக அரசு அதற்கு முன்வரவில்லை.

இந்த நிலையில், மத்திய அரசாவது இவர்கள் மூவரையும் சிறையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு உதவிட வேண்டும் என்று பிரதமரையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவி சோனியா காந்தியையும் திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்," என்று கருணாநிதி கூறியுள்ளார்.