Published:Updated:

ஜெ. கடிதத்தால் மட்டும் பிரச்னையை தீருமா?- கருணாநிதி

Vikatan Correspondent
ஜெ. கடிதத்தால் மட்டும் பிரச்னையை தீருமா?- கருணாநிதி
ஜெ. கடிதத்தால் மட்டும் பிரச்னையை தீருமா?- கருணாநிதி

சென்னை, அக்.13,2011

ஜெ. கடிதத்தால் மட்டும் பிரச்னையை தீருமா?- கருணாநிதி

பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினால் மட்டும் மீனவர் பிரச்னை தீர்ந்து விடுமா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு  ஜெயலலிதா கடிதம் எழுதியிருப்பதாக செய்தி வந்துள்ளதே?

"திமுக ஆட்சியிலே இதைப்போல மீனவர்கள் பிரச்னை ஏற்பட்டபோது ஜெயலலிதா 5-7-2008 அன்று விடுத்த அறிக்கையிலே, "கடிதம் எழுதுகிறேன்", "தொலைபேசியில் பேசுகிறேன்" என்று சொல்வதையெல்லாம் நிறுத்திவிட்டு மீனவர்கள் பிரச்னையை விரைவில் தீர்க்க வேண்டுமென்று கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதினார்.

அத்துடன், மீனவர் பிரச்னை தொடருமேயானால் அதிமுக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடத் தயங்காது என்றும் அவர் கூறினார்.

தற்போது அவருடைய ஆட்சியில் மீனவர்களின் பிரச்னை என்பது அன்றாடப் பிரச்னையாக உள்ளது. இந்த நிலையில் அவர் பிரதமருக்கு வெறும் கடிதம் மட்டும் எழுதினால் போதுமா?

ஜெயலலிதா 11-3-2007 அன்று விடுத்த அறிக்கையில் மீனவர்களின் நலன் மீது சிறிதும் அக்கறை காட்டாமல் இருக்கும் மைனாரிட்டி திமுக அரசைக் கண்டிக்கிறேன் என்று எழுதினாரே, தற்போது மெஜாரிட்டி அதிமுக அரசு பிரதமருக்கு வெறும் கடிதத்தை மட்டும் எழுதினால், மீனவர் பிரச்னை தீர்ந்து விடுமா என்ன?" என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.