Published:Updated:

'பூஷனை தாக்கியவருடன் பிஜேபிக்கு தொடர்பில்லை'

Vikatan Correspondent
'பூஷனை தாக்கியவருடன் பிஜேபிக்கு தொடர்பில்லை'
'பூஷனை தாக்கியவருடன் பிஜேபிக்கு தொடர்பில்லை'

புதுடெல்லி, அக்.13,2011

'பூஷனை தாக்கியவருடன் பிஜேபிக்கு தொடர்பில்லை'

மூத்த வழக்கறிஞரும், அண்ணா ஹஜாரே குழுவைச் சேர்ந்தவருமான பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களுக்கும் பிஜேபிக்கும் தொடர்பில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறினார்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள தனது அலுவலக அறையில் நேற்று பிற்பகல் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த பிரசாந்த் பூஷனை இளைஞர்கள் மூவர் அடித்து உதைத்து சரமாரியாக தாக்கினர். தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட அந்தக் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவரான தேஜிந்தேர் சிங் பக்கா என்பவர், பிஜேபி இளைஞர் அமைப்பில் முன்னாள் உறுப்பினர் என்று தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், பூஷன் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பிஜேபி மூத்த தலைவர் அத்வானி, "எந்தவித வன்முறை செயலாக இருந்தாலும் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாக்குதல் ந்டத்தியவர்களுக்கும் சங்க் பரிவார் அமைப்புக்கோ, பிஜேபிக்கோ எந்தவித தொடர்பும் இல்லை," என்றார்.