Published:Updated:

என் இணையம்... என் உரிமை!

என் இணையம்... என் உரிமை!
என் இணையம்... என் உரிமை!

என் இணையம்... என் உரிமை!

இனிமேல்....ஈஸியாக, வாட்ஸ் அப்பில்... போட்டோ அனுப்ப முடியாது!  யூ- டியூபில் படம் பார்க்க முடியாது. ஸ்கைபில் பேச முடியாது.  புதுசு புதுசாக கண்ணில் படும் ஆப்ஸ்களை எல்லாம் டவுன் லோடு செய்து பயன்படுத்த முடியாது.

ஏர்டெல், ரிலையன்ஸ்... என்று யாருடைய சர்வீஸை பயன்படுத்துகிறோமோ அந்த சர்வீஸ் புரொவைடர்கள் சொல்லும் ஆப்ஸை மட்டுமே டவுன் லோடு செய்து... அவர்கள் காட்டும் மெசெஞ்சரில் மட்டுமே செய்திகளை பரிமாறிக் கொண்டு அவர்கள் சொல்லும் வலைத்தளத்தில் மட்டுமே வீடியோக்களைப் பார்க்கும் அடிமைகளாக வெகு சீக்கிரமே ஆகப்போகிறோம்.

என் இணையம்... என் உரிமை!


இது சாபம் அல்ல. அத்தனை பேரும் ஒன்று திரண்டு இப்போது குரல் கொடுக்காவிட்டால் நிச்சயம் நம் நிலைமை இதைவிட கேவலமாகிப் போய்விடும் என்பதுதான் அப்பட்டமான உண்மை!

ஆம், இணையத்தில் நாம் இப்போது அனுபவிக்கும் கட்டற்ற சுதந்திரத்துக்கு குறுக்கே சுவரைக்கட்ட இன்டர்நெட் சர்வீஸ் புரொவைடர்கள் பூனையைப் போல பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இன்னொருபுறம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உதவிக்கு ஓடோடிவரவேண்டிய டிராய் (Telecom Regulatory Authority of India (TRAI))  எனப்படும் கண்காணிப்பு அமைப்பையும் ஏறக்குறைய  தங்களின் அனுதாபியாகவே அவர்கள் மாற்றிவிட்டார்கள்.

இப்போது நாம் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கும்  Net neutrality எனப்படும் சுதந்திரத்துக்கு ஆப்பு வைக்க சர்வீஸ் புரொவைடர்ஸ் இப்படி வரிந்து கட்டுவது ஏன்?  சில வருடங்களுக்கு முன்புவரை எஸ்.எம்.எஸ் என்றால் இவ்வளவு... உள்ளூர் அழைப்பாக இருந்தால் அவ்வளவு, வெளியூர் அழைப்பாக

என் இணையம்... என் உரிமை!

இருந்தால் உலகளவு... என்று கட்டு கட்டாக கட்டணம் வாங்கி தங்கள் கல்லாப் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்த சர்வீஸ் புரொவைடர்களுக்கு 'வாட்ஸ் அப்', 'ஸ்கைப்' போன்றவற்றின் வருகையால் வருமானம் அடிப்பட்டுவிட்டது. இன்டர்நெட் மூலமான தொலைபேசி சேவையும் கூடிய விரைவில் பிரபலமடைந்தால்... இவர்களின் வருமான இழப்பு மேலும் அதிகமாகும்.

டி.வி. விளம்பரம், பத்திரிக்கை விளம்பரம், பேனர் விளம்பரம், கிரிக்கெட் விளம்பரம், விதவிதமான ஸ்கீம்ஸ், நாடு முழுதும் நெட் வொர்க், சேல்ஸ் மென், ஷோ ரூம், இலவச சிம் கார்டு... எல்லாவற்றுக்கும் மேலாக அரசுக்கு கோடி கோடியாக லைசென்ஸ் தொகை, அதற்கு மேலாக அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இத்தனை பர்சன்டேஜ் என்று கணக்கு பார்க்காமல் பணத்தை கொட்டிக் கொடுத்து நாம் வாடிக்கையாளர்களை பிடித்தால்... நோகாமல் நோன்பு கும்பிடுவது மாதிரி வாட்ஸ் அப், ஸ்கைப் மாதிரியான கம்பெனிகள்... நாம் பயிரிட்டதை சந்தடியில்லாமல் அறுவடை செய்வதா... என்ற கோபம் சர்வீஸ் பிரோவைடர்களை தூக்கம் இழக்க செய்துவிட்டது.

அதனால் தங்களுக்கு கப்பம் கட்டும் ஆப்ஸ் கம்பெனிகளை மட்டும் வாடிக்கையாளர்களிடம் பிரதானப்படுத்தும் முயற்சியில் சர்வீஸ் புரொவைடர்ஸ் இறங்க நல்ல முகூர்த்த நாளாக பார்த்து கொண்டிருக்கிறார்கள். (ஒரு சிலர் இதற்கு ஏற்கனவே கால்கோல் விழா நடத்திவிட்டனர்). இந்த சர்வீஸ் புரொவைடர்களின் எண்ணம் ஈடேறினால்... ஒரு சர்வீஸ் புரொவைடர் கூகுல்-க்கு பதிலாக வேறு ஒரு சர்ச் இன்ஜினை பிரோமோட் செய்வார்.  யூ டியூபுக்கு மாற்றாக வேறு ஒரு வலைத்தளத்தை பரிந்துரைப்பார். வாடிக்கையாளர்கள், 'இல்லை இல்லை எனக்கு கூகுல்தான் வேண்டும். யூ டியூப்தான் வேண்டும்' என்று அவற்றைப் பயன்படுத்தினால்... அதன் வேகத்தை சர்வீஸ் புரொவைடர் மட்டுப்படுத்தும். அதனால் வேறு வழியின்றி காலப்போக்கில் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ சர்வீஸ் புரொவைடர் பரிந்துரைக்கும் சர்ச் இன்ஜினுடனேயே குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு வாடிக்கையாளர் தள்ளப்படுவார்.
 
சாதாரண அண்ணாச்சி கடையாக இருந்தாலே தனக்கு கோல்கேட் பற்பசை வேண்டுமா அல்லது கோபால் பற்பசை வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் உரிமை ஒரு வாடிக்கையாளருக்குத்தான் உண்டு.

என் இணையம்... என் உரிமை!

அப்படியிருக்க தனக்கு தேவை Bing ஆ அல்லது Google ஆ, Wynk ஆ அல்லது You Tube ஆ என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை வாடிக்கையாளருக்குத்தானே இருக்க வேண்டும்.  ஆனால் சர்வீஸ் புரொவைடர்களின் மீது அனுதாபத்தோடு இருக்கும்  Telecom Regulatory Authority of India (TRAI)  இப்போது வெளியிட்டிருக்கும் அறிக்கை (Consultation Paper) அதன் பரிந்துரையாக அப்படியே அரசுக்குப் போனால்... நாம் அஞ்சும் அனைத்தும் நடந்துவிடும்.

'கோடி கோடியாக பணத்தை கொட்டி எண்பது கோடி வாடிக்கையாளர்களை சேர்த்து வைத்திருக்கும் சர்வீஸ் புரொவைடர்களுக்கு வருமான இழப்பு நிகழ்ந்துவிடக்கூடாது' என்பதை காரணமாக காட்டி அவர்களுக்கு பரிந்து பேசும்  Telecom Regulatory Authority of India (TRAI)  யின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே அல்ல. காரணம். அவர்கள் இத்தனை வருடங்களாக போட்ட பணத்துக்கு மேல் பல மடங்கு சம்பாதித்து விட்டார்கள். ('அப்படியெல்லாம் இல்லை. இந்த கம்பெனி அவ்வளவாக சம்பாதிக்கவில்லையே?!" என்று யாராவது சொன்னால்... அதற்கு பதில்: எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் ஈடுபடும் அனைத்து கம்பெனிகளும் லாபம் அடைவதில்லை. ஒரு சில கம்பெனிகள் நட்டம் அடைவது வியாபாரத்தில் சாதாரணம்). அடுத்து எந்த தொழிலாக இருந்தாலும்... எந்த ஒரு கம்பெனி வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு மாறிக்கொண்டிருக்கிறதோ அதுதான் ஜெயிக்கும். இந்த விதி தொலைபேசி சேவை மற்றும் இணைய சேவையை வழங்கும் சர்வீஸ் புரொவைடர்களுக்கும் பொருந்தும். அதனால் அரசால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்  Telecom Regulatory Authority of India (TRAI) 80 கோடி வாடிக்கையாளர்களின் நலனைதான் பார்க்க வேண்டுமே தவிர நான்கு ஐந்து சர்வீஸ் புரொவைடர்களின் லாபத்தைப் பார்க்கக்கூடாது.

இணையதள சேவையை வழங்கும் சர்வீஸ் புரொவைடர்கள் யாராக இருந்தாலும் Net Neutralityயோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் சர்வதேச கோட்பாடு. வேண்டப்பட்டவரின் வலைதளம்.

வேண்டப்படாதவரின் வலைத்தளம்... என்று எந்த விதமான பாகுபாடும் பார்க்காமல் வாடிக்கையாளர்களுக்கு அவற்றை அவை வழங்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் ஒரு லேண்ட் லைன் போன் சர்வீஸ் வழங்கும் பிஎஸ்என்எல் போன்ற கம்பெனிகள்... 'இந்த போனில் ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட ஒரு சில வாடிக்கையாளர்களோடு மட்டும்தான் பேச முடியும்.' என்று கட்டுப்பாடுகள் விதித்தால் அது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் இணைய சேவையை வழங்கும் சர்வீஸ் புரொவைடர்கள் இது போன்ற கட்டுப்பாடுகளை தங்கள் வாடிக்கையாளர்கள் மீது மறைமுகமாக திணிக்க முயற்சிப்பது.  ஆகையால் இது கண்டிப்பாக எதிர்க்க வேண்டிய ஒரு நடவடிக்கை.

இதை விரிவாக விவாதிக்ககூட  நமக்கு அவகாசம் இல்லை. இந்த பிரச்னை குறித்து ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் அனுப்பப்படும் கருத்துக்களை மட்டுமே டிராய் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளும். நமது இணைய சுதந்திரத்துக்காக இப்போது நாம் மின்னஞ்சலில் கையொப்பம் இடவில்லை என்றால் அது நாம் நம் அடிமை சாசனத்தில் கையொப்பம் இட்டதற்கு சமமாகிவிடும் இல்லையா?

வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய க்ளிக் செய்க...

http://bit.ly/1ykbaUE

- வேல்ஸ்

அடுத்த கட்டுரைக்கு