Published:Updated:

நீண்ட விடுமுறையை தொடர்ந்து ஆன்மிக பயணம் தொடர்ந்தார் ராகுல் காந்தி!

நீண்ட விடுமுறையை தொடர்ந்து ஆன்மிக பயணம் தொடர்ந்தார் ராகுல் காந்தி!
நீண்ட விடுமுறையை தொடர்ந்து ஆன்மிக பயணம் தொடர்ந்தார் ராகுல் காந்தி!

நீண்ட விடுமுறையை தொடர்ந்து ஆன்மிக பயணம் தொடர்ந்தார் ராகுல் காந்தி!

நீண்ட விடுமுறையை தொடர்ந்து ஆன்மிக பயணம் தொடர்ந்தார் ராகுல் காந்தி!

டேராடூன்: நீண்ட விடுமுறையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தற்போது ஆன்மிக பயணம் தொடர்ந்து உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியை வலிமையாக்க தலைவர் பதவியை துணைத் தலைவரான ராகுல் காந்திக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் இதற்கு, காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி திடீரென ராகுல் காந்தி மாயமானார். ராகுல் காந்தி, ஓய்வு எடுப்பதற்காக விடுமுறையில் சென்று இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதற்கு பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் எங்கு சென்றார், எங்கிருக்கிறார் என்று காங்கிரஸ்காரர்களுக்கே தெரியாமல் இருந்தது. இது சம்மந்தமாக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 56 நாட்கள் ஓய்வுக்கு பின் ராகுல் காந்தி கடந்த 16 ஆம் தேதி டெல்லி திரும்பினார். அதை தொடர்ந்து, 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் அவர் கலந்து கொண்டார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக கடுமையாக பேசினார்.

அவர் இனி அரசியலில் தீவிரம் காட்டுவார் என்று காங்கிரசார் கூறி வந்த நிலையில், ராகுல் காந்தி நேற்று திடீரென தனது ஆன்மிக பயணத்தை தொடங்கி உள்ளார். சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் 11வது ஜோதிர் லிங்கம் அமைந்துள்ள கேதர்நாத்திற்கு அவர் நேற்று புறப்பட்டு சென்றார். அதன் பின்னர், ஜாலிகிராண்ட் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கவுரிகுந்திற்கு ராகுல் காந்தி புறப்பட்டு சென்றார்.

அவருடன் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பிகாசோனி, மாநிலத் தலைவர் கிஷோர் உபத்யாயா மற்றும் மூத்த தலைவர்கள் சென்றுள்ளனர். கவுரிகுந்த் சென்ற ராகுல்காந்தி, அங்குள்ள லின்சோலி பகுதியில் இருந்து கேதர்நாத் செல்லும் ராகுல் காந்தி, இன்று காலை சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு