Published:Updated:

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: மோடி

Vikatan Correspondent
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: மோடி
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: மோடி
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: மோடி

புதுடெல்லி: மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முடிவுக்கு கொண்டு வர அரசுக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இதுதொடர்பாக வானொலி நிகழ்ச்சியான மனதின் வார்த்தைகள் (மன் கீ பாத்) மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ''நாட்டில் இன்னமும் மனிதக் கழிகளை மனிதர்களே அகற்றும் முறை நீடிப்பது சரிதானா? பாபா சாஹேப் அம்பேத்கரின் 125வது பிறந்த தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்த முறை முழுவதும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு ஏழை மக்கள் பயன்படுத்தப்படுவது போன்ற சூழ்நிலையை சகித்துக்கொள்ள முடியாது. இந்த முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, எங்களுக்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

மும்பையில் அம்பேத்கருக்கு நினைவிடம் கட்டுவதற்காக நிலத்தை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த நிலம் தொடர்பாக பல்லாண்டுகளாக தகராறு நிலவி வருகிறது. இதேபோல், அம்பேத்கரின் பணிகளையும், அவரது பங்களிப்புகளையும் உலகம் முழுவதும் உள்ள அறிவுஜீவிகள் தெரிந்துகொள்ளும் வகையில், டெல்லியில் அவரது பெயரில் சர்வதேச மையத்தை அரசு அமைக்கவுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தப் பணிகள் தொடங்கப்படாமல் நிலுவையில் இருந்தன. எனது அரசு, அந்தப் பணியை 20 மாதங்களில் செய்து முடிப்பதற்கு முடிவு செய்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், தனது வாழ்நாள் முழுமைக்கும் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆனால், அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும், தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரை கல்வி சென்றடையவில்லை. குறிப்பாக, பெண்கள் அனைவரையும் கல்வி சென்றடையவில்லை. ஏழை மக்களின் பெண் குழந்தைகள் கல்வியறிவற்றவர்களாக நீடிப்பதை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எனது அரசு மேற்கொள்ளும் பணியில் நாட்டு மக்கள் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.