Published:Updated:

பிரதமரை சந்தித்தது ஏன்?: விஜயகாந்த் விளக்கம்!

Vikatan Correspondent
பிரதமரை சந்தித்தது ஏன்?: விஜயகாந்த் விளக்கம்!
பிரதமரை சந்தித்தது ஏன்?: விஜயகாந்த் விளக்கம்!
பிரதமரை சந்தித்தது ஏன்?: விஜயகாந்த் விளக்கம்!

புதுடெல்லி: தமிழக அனைத்துக்கட்சி குழுவினருடன் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விளக்கம் அளித்தார்.

தமிழக சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., ம.தி.மு.க., த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்களுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ''மேக்கேதாட்டூ அணை பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட 5 பிரச்னைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடியை  அனைத்துக்கட்சி குழுக்களுடன் சந்தித்து பேசினோம்.

அப்போது, தமிழக பிரச்னைகள் அனைத்திற்கும் உரிய தீர்வு காணப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்'' என்றார்.

இதையடுத்து, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக இருக்கிறது'' என்றார்.

மோடியுடன் சந்திப்பு

பிரதமரை சந்தித்தது ஏன்?: விஜயகாந்த் விளக்கம்!

முன்னதாக  தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை தன்னிச்சையாக சந்தித்து, மேக்கேதாட்டூவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனு கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து மேக்கேதாட்டூ அணை பிரச்னை தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், அதிமுகவை தவிர்த்து திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சித் தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், தமிழக அரசியல் கட்சி குழுவுடன் இன்று டெல்லி சென்ற விஜயகாந்த், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மேக்கேதாட்டூவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், முல்லைப் பெரியாறு அணை, மீனவர்கள் பிரச்னை, செம்மர கடத்தல், நில கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்டவை பற்றியும் பேசப்பட்டது.

இந்த குழுவில் திமுக சார்பில் திருச்சி சிவா, கனிமொழி, பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன்,  காங்கிரஸ் சார்பில் நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, மதிமுக சார்பில் கணேசமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன், தமாக சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தலைவர் பாரிவேந்தர், ரவி பச்சமுத்து, ஜெயசீலன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.