Published:Updated:

நேபாளத்திற்கு உதவி: ராஜ்நாத் சிங் உறுதி!

Vikatan Correspondent
நேபாளத்திற்கு  உதவி: ராஜ்நாத் சிங் உறுதி!
நேபாளத்திற்கு உதவி: ராஜ்நாத் சிங் உறுதி!
நேபாளத்திற்கு  உதவி: ராஜ்நாத் சிங் உறுதி!

புதுடெல்லி: நிலநடுக்கத்தால் கடும் அழிவைச் சந்தித்து இருக்கும் நேபாளத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும்  இந்தியா செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ரஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நேபாளம் நமது நெருங்கிய அண்டை நாடு. நமக்கு நேபாளத்துடன் கலாச்சார உறவுகளும்  உள்ளன. எனவே நமது தரப்பில் இருந்து சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. எனவே நேபாளத்திற்கு அதிகபட்ச உதவிகள் செய்யப்படும்” என்றார்.

இந்தியாவில் சில பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய ராஜ்நாத் சிங், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட  மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்றார்.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள  நேபாளத்தில் மீட்பு பணிகளை  இந்தியா முடுக்கி விட்டுள்ளது.   24 விமானங்கள்  மற்றும் ஹெலிகாப்டர்களையும் அனுப்பியுள்ளது. மேலும், மீட்பு பணிக்கு  திறமை வாய்ந்த 1000 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும்  நேபாளத்தில் பூகம்ப பகுதியில் சிக்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை   விரைவாக மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு நல்லெண்ண விசா அளித்தல் மற்றும் மீட்கப்பட்டவர் களை பேருந்து  மற்றும் ஆம்புலன்சுகளில் ஏற்றி இந்தியா அழைத்து வருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.