Published:Updated:

மீனவர்கள் கைது: இலங்கை நடவடிக்கையை நியாயப்படுத்தும் மத்திய அரசு!

Vikatan Correspondent
மீனவர்கள் கைது: இலங்கை நடவடிக்கையை நியாயப்படுத்தும் மத்திய அரசு!
மீனவர்கள் கைது: இலங்கை நடவடிக்கையை நியாயப்படுத்தும் மத்திய அரசு!
மீனவர்கள் கைது: இலங்கை நடவடிக்கையை நியாயப்படுத்தும் மத்திய அரசு!

மதுரை: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால்தான் அவர்கள் மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கிறது என மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவுகளை மத்திய அரசு கடைபிடிக்கவில்லை எனக் கூறி மத்திய அரசு மீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ''தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மின் பிடிப்பதால்தான் இந்திய மீனவர்கள் மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கிறது.

மேலும், எல்லை தாண்டி போதை பொருள் உள்ளிட்ட கடத்தல் சம்பவங்களிலும் தமிழக மீனவர்கள் ஈடுபடுகின்றனர். இருப்பினும், இந்திய எல்லைக்குள் மீனவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது'' எனக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, எல்லை தாண்டியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜுன் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.