Published:Updated:

''எல்லாம் பிசினஸ் ஆகிருச்சு!''

பாலகிஷன்படம் : கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##
னதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இப்போ செம பிஸி! தனது கட்சி வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்து முடித்த கையோடு, டெல்லிக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தவரைப் பிடித்தேன்.  

''பயங்கர வெயில்... அனல் பறக்கும் பிரசாரம். எப்படிச் சமாளிக்கிறீங்க?''

''நான் ஒரு கர்மயோகி. எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கிற மனோபக்குவம் எனக்கு உண்டு. உட்கார்ந்தபடியே தூங்கும் டெக்னிக்கை எனக்கு மொரார்ஜி தேசாய் கத்துக் கொடுத்திருக்கிறார். சமயம் கிடைக்கும்போது குட்டித் தூக்கம் போட்டு ஃப்ரெஷ் ஆகிருவேன்!''

''எல்லாம் பிசினஸ் ஆகிருச்சு!''

''ஆன்மிகத்தைக் கலந்து தேர்தல் பிரசாரம் பண்றீங்களே?''

''தமிழ்நாடு ஆன்மிக பூமிதானே? மேல்மருவத்தூருக்குப் போயிருந்தேன். அங்கே, தி.மு.க-வோட மகளிர் அணி யைச் சேர்ந்தவங்க கறுப்பு-சிவப்பு பார்டர் போட்ட சேலையில வந்திருந் தாங்க. 'நீங்க எப்படி இங்கே?'னு கேட்டா, 'பகுத்தறிவுப் பிரசாரம் எல்லாம் மேடையில்தான்'னு சிரிக் கிறாங்க. அவங்கமட்டுமா? கருணா நிதி குடும்பத்தில் ஸ்டாலினின்மனைவி பெயர் துர்கா. கனிமொழியின் மகன் பெயர் ஆதித்யன். ஏன்? கதிரவன் என்று சுத்தத் தமிழில் வைக்க வேண்டியதுதானே? தனது குடும்பத்தையே பகுத்தறிவு மேடையில் ஒண்ணு சேர்க்க முடியாத கருணாநிதி, மக்கள் மத்தியில் போய் பகுத்தறிவுப் பிரசாரம் செய்கிறாராம். யார் கேட்பாங்கன்னு தெரியலை!''  

''நீங்க பிரசாரத்துக்குப் போற இடங்களில் மக்கள் கூட்டம் வருதா?''

(குறுகுறுவெனப் பார்க்கிறார்) ''தமிழகத்துல பத்து இடத்துல என் கட்சி வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் நிக்குறாங்க. தி.மு.க, அ.தி.மு.க-காரங்க பிரசாரத்துக்கு ஆட்டு மந்தை போல கும்பலை வேன்ல கூட்டிக்கிட்டு வர்றாங்க. அதெல்லாம் பிரியாணி சாப்பிடுற கூட்டம். தலைக்கு ஐந்நூறு ரூபா கொடுத்தா, கூட்டத்துக்கு ஆட்களை சப்ளை பண்றதா ஒரு தனியார் கம்பெனிக்காரர் என்கிட்டே சொன்னார். எல்லாம் பிசினஸ் ஆகிருச்சு. ஒரே ஆளு காலையில ஒரு கூட்டம், சாயங்காலம் ஒரு கூட்டம்னு பல கட்சிக் கூட்டத்துக்குப் போய் கை தட்டுறான். என் ரேஞ்சே வேற... நான் பிரியாணி போடுறதில்லை. பணம் குடுக்கிறதுஇல்லை. ஆனா, கூட்டம் தானா கூடுது!''

''எதைவெச்சு அப்படிச் சொல்றீங்க?''

''பதவியிலேயே இல்லாமல், ஒரு மத்திய அமைச்சரை நான் ஜெயிலுக்கு அனுப்பிட்டேன்ல! அதுக்கு அப்புறம் மக்கள் மத்தியில எனக்கு மவுசு கூடிருச்சு. 'நீங்க யாரை வேணும்னாலும் ஆட்சியில் உட்காரவைங்க. எங்களை யும் ஜெயிக்கவைங்க. ஆட்சியின் காவலர்களா நாங்க இருக்குறோம். ஆட்சியில இருக்கிறவா ஊழல் செஞ்சா, அவுங்களை ஜெயிலுக்கு அனுப்பிடுவோம்'னு சொல்றேன். இந்த மாதிரியான அதிரடி அறிவிப்புகளை மக்கள் ரசிக்குறாங்க. ஆனா, ஒரு பேப்பர்ல காலி மைதானத்தை போட்டோ போட்டு, எனக்குக் கூட்டமே இல்லைன்னு எழுதியிருக்கா. அந்தப் பத்திரிகையில எல்.டி.டி.ஈ-யைச் சேர்ந்தவா வேலை பார்க்கிறானு நினைக்கிறேன். அவாளை மன்னிப்பு கேட்கச் சொல்லி லெட்டர் போட்டு இருக்கேன்!''

''சில மீடியாக்கள் எடுத்த சர்வே ரிப்போர்ட் அ.தி.மு.க-வுக்குச் சாதகமா இருக்கிற மாதிரி இருக்கே?''

''தி.மு.க-வுக்கு எதிரா அலை வீசுது. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒருத்தரை ஒருத்தர் திட்டுவா. ஆனா, உருப்படியா மக்களுக்காக ஏதும் பண்ண மாட்டா. தி.மு.க, இந்த அஞ்சு வருஷமா ஜெயலலிதா மேல ஒரு கேஸ் போடலையே? அ.தி.மு.க ஆட்சியில இருந்தப்ப, கருணாநிதி மேலயும் உருப்படியா எந்த கேஸும் போடலையே? ஜெயலலிதா ஆட்சி மேல நான்தான் நிறைய கேஸ் போட்டேன். இப்போ 2 ஜி பத்தி ஜெயலலிதா, அவங்க கட்சி வழக்கறிஞர் அணியைவெச்சு கோர்ட்டுல ஏன் வாதாடலை? ஏன்னா, தேர்தலுக்கு அப்புறம் சோனியாவோட கூட்டணி சேர்ற வாய்ப்பு கிடைக்கலாம். அதனால அடக்கி வாசிக்கிறா. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு அப்புறம், டெல்லியில தமிழன்னாலே ஊழல் பண்றவன்னு

''எல்லாம் பிசினஸ் ஆகிருச்சு!''

நினைக்க ஆரம்பிச் சிட்டா. ஊழல் பண்றவங்களைப் பிடிச்சுக் கொடுத்து, சட்டத்தை நிலைநாட்டுறவனும் ஒரு தமிழன்தான்னு நான் ஒரு புது இமேஜை உருவாக்கிட்டேன்!''

''ஓய்வு நேரத்துல சினிமா எல்லாம் பார்ப்பீங்களா?''

''ரஜினி கூப்பிட்டார். 'பாபா’ படத்தைப் போய்ப் பார்த்தேன். அதுக்கு அப்புறம் யாரும் என்னைக் கூப்பிடலை. நானும் போகலை!''

''ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு எந்த அளவில் இருக்கிறது?''

''ஆ.ராசா உள்ளே இருக் கார். வரும் நாட்களில்கருணா நிதி, கனிமொழி, ராசாத்தி, சோனியா காந்தின்னுபலரை யும் சி.பி.ஐ. என்ன பண்ணப்போகுதுன்னு பொறுத்திருந்து பாருங்கோ!’'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு