. பி.ரசார வியூகங்கள் பற்றி தோழர்களோடு பேசியபடியே வந்து அமர்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டி யன். பரபர 10 நிமிடப் பேட்டி இது! .
''கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் ஜெயலலிதா ஏற்படுத்திய குழப்பங்கள் உங்கள் அணிக்குப் பாதக மாகப் போய்விட்டதே?''

''அப்படியான ஒரு கருத்து மாற்றம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், நாங்கள் கடுமையான பிரசாரம் மூலமாக நிலைமையை எங்களுக்குச் சாதகமாக மாற்றிவிட்டோம்!''

'' 'ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்ட பின்னும், கம்யூனிஸ்ட் கட்சிகள் போயஸ் கார்டனில் சில சீட்டுகளுக்காகச் சுயமரியாதையை இழந்து நின்றன’ என்கிற குற்றச்சாட்டு குறித்து?''

''இந்தியாவில் எந்த அரசியல் கட்சி, கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டிஇடுகிறது? காங்கிரஸோடும் பா.ஜ.க-வோடும் மாறி மாறி உடன்பாடு வைத்துக்கொண்ட வர்கள்தானே அறிவாலயத்தில் இருக்கிறார்கள். அவை எல்லாம் கொள்கைக் கூட்டணிகளா என்ன? சோனியா காந்தியின் கொடும்பாவியைச் சிலர் எரித்தார்கள்; ராகுல் காந்தியின் உருவ பொம்மையைச் சிலர் செருப்பால் அடித்தார்கள்; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவித்தவுடன் நடந்த கூத்துக்களைப் பார்த்தோமே? சொந்தக் கட்சிக்காரர்களால் அவமானத்துக்கு உள்ளானவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்!''

''மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பு இந்த முறையும் கைநழுவிப் போனதற்காக வருத்தப்படுகிறீர்களா?''

''நிச்சயமாக இல்லை! இன்றைய சூழலில் ஆளும் தி.மு.க. அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டும். அதுதான் இப்போதைய உடனடித் தேவை. இப்போது மூன்றாவது அணி அமைத்தால், அது தி.மு.க-வுக்கே சாதகமாக முடிந்திருக்கும். அதனால்தான், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் அமைதி காத்தோம்!''

''108 ஆம்புலன்ஸ் மூலம் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக நீங்கள் ஆளும் கட்சி மீது குற்றம்சாட்டியிருக்கிறீர்களே?''

''மதுரை, திருச்சி போன்ற இடங்களில் இப்படி ஆம்புலன்ஸ்கள் மூலமாகப் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. எங்கள் கட்சி ஆட்கள் இதனைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்கள். கர்நாடகாவில் இருந்து இரண்டு லாரிகளில் கடத்தப்பட்டு, தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட மது பாட்டில்களை எங்கள் கட்சியினர் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆனால், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!''

''மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு ம.தி.மு.க-வினரை வைகோ கேட்டுக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில், நீங்கள் ம.தி.மு.க உங்கள் அணிக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்களே?''

''மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள மக்கள் விரோத அரசுகளை அகற்ற வேண்டும் என்பதே வைகோவின் நோக்கம். அப்படி இருக்கையில், எங்கள் அணிக்கு ம.தி.மு.க ஆதரவளிக்க வேண்டும் என்கிற எங்கள் விருப்பத்தினைத் தெரிவித்திருக்கிறோம். ஆனால், முடிவெடுக்க வேண்டியது வைகோதான். இனி, அவர் விருப்பம்!''

''இந்தத் தேர்தலில் உங்கள் கட்சியின் பிரசார யுக்தி என்ன?''

''என்ன பெரிய யுக்தி? நடந்ததைச் சொன்னாலே போதுமே. தி.மு.க-வின் இமாலய ஊழல் பற்றித்தான் மக்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கிறதே!''

''நகர்ப்புற மக்களுக்கு ஸ்பெக்ட்ரம் பிரச்னை பற்றி தெரியும். கிராமப்புற மக்கள் அதை அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?''

''கிராமப்புற மக்களுக்கு ஸ்பெக்ட்ரம் என்கிற வார்த்தை வேண்டுமானால் தெரியா மல் இருக்கலாம். ஆனால், நம்ம ஊர் அமைச்சர் ஒருவர் திஹார் ஜெயிலில் இருக்கிறார் என்று தெரியாதா? அவர் மக்களுக்காகப் போராடி ஜெயிலுக்குச் செல்லவில்லை என்பது புரியாதா? அவருடன் கூட இருந்த சாதிக்பாட்சா தற்கொலை செய்துகொண்டது தெரியாதா? முதலமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தியது தெரியாதா? கிராமத்து மக்களை அத்தனை எளிதாக நாம் விவரம் தெரியாது என்று எடைபோட்டுவிட முடியாது!''

''தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் குறித்து?''

''தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் வரவேற்கத் தகுந்தவைதான். தேர்தல் ஆணையம் கொள்கை முடிவுகளை எடுக்கிறது. ஆனால், அந்த முடிவுகளை நடைமுறைப்படுத்தும் இலாகா தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளையே நம்பி இருக்கிறது தேர்தல் ஆணையம். இந்த நிலை மாற வேண்டும்!''

''50 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டு நீங்களும் சி.மகேந்திரனும் தளி தொகுதியில் வேட்பாளரை அறிவித்துவிட்டீர்கள் என்று நாகராஜ ரெட்டி குற்றம் சாட்டுகிறாரே?''

''இந்த அபாண்டமான குற்றச்சாட்டுக்காக அவர் மீது வழக்குத் தொடர இருக்கிறோம். நாங்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு வேட்பாளரை அறிவித்ததாகக் குற்றம்சாட்டும் நாகராஜ ரெட்டி, ஊழல் என்றால் என்ன என்றே தெரியாத தி.மு.க-வில் இணைந்திருக் கிறார். இதை என்னவென்று சொல்வது?''

''நல்லகண்ணு மாநிலச் செயலாளராக இருந்தவரையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஜனநாயகம் இருந்ததாகவும், உங்கள் காலத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுவதாகவும் நாகராஜ ரெட்டி கூறுகிறாரே?''

''இடதுசாரிக் கட்சிகளில், மாநாட்டில்தான் மாநிலச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பார்கள். மாநிலம் முழுவதிலும் இருந்தும் வந்திருந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில்தான் நான் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த மாநாட்டின் பிரதிநிதிகளில் நாகராஜ ரெட்டியும் ஒருவர். இந்தக் கேள்வியை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்!''

''மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதா?''

''கேரளாவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகள் வந்த பின்னர்தான் நிலைமை தெரிய வரும். மேற்கு வங்க மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ? யாருக்குத் தெரியும்? எந்தத் தீர்ப்பு வந்தாலும், அதனைத் தலை வணங்கி ஏற்போம்!''