Published:Updated:

தமிழக காவல்துறைக்கு அத்வானி பாராட்டு

தமிழக காவல்துறைக்கு அத்வானி பாராட்டு
தமிழக காவல்துறைக்கு அத்வானி பாராட்டு

திருவனந்தபுரம், அக்.29,2011

தமிழக காவல்துறைக்கு அத்வானி பாராட்டு

மதுரை அருகே தனது யாத்திரை பாதையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை கண்டெடுத்த தமிழக காவல்துறைக்கு பிஜேபி மூத்த தலைவர் அத்வானி பாராட்டு தெரிவித்தார்.

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி திருவனந்தபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "மதுரை அருகே வெடிகுண்டை கண்டுபிடித்து அப்புறப்படுத்தியதுடன், மாற்றுப்பாதைக்கு அறிவுறுத்திய தமிழக காவல்துறையை பாராட்டியே ஆகவேண்டும்.

அதேவேளையில், இந்த நாசவேலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, அதன் பின்னணியை தீவிரமாக விசாரிக்க வேண்டும்," என்றார்.

முன்னதாக, மதுரை அருகே அத்வானியின் ரத யாத்திரை செல்லும் வழியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது நேற்று கண்டறியப்பட்டது. உரிய நேரத்தில் வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டதால், ரத யாத்திரையை சீர்குலைக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக நேரு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.