Published:Updated:

ராமதாஸ் மீதான வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

ராமதாஸ் மீதான வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
ராமதாஸ் மீதான வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

சென்னை, அக்.29,2011

ராமதாஸ் மீதான வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த 2006-ம் ஆண்டு பேரவைத் தேர்தலின்போது திண்டிவனத்தில் போட்டியிட்ட சி.வி.சண்முகம், கூலிப்படையினரால் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

அந்தத் தாக்குதலில் சி.வி.சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் என்பவர் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் உறவினர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர், குற்றப்பத்திரிகையில் அவர்கள் பெயர் நீக்கப்பட்டது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். முருகானந்தம் கொல்லப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

இந்த நிலையில், சி.வி.சண்முகத்தின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார்.