தமிழ்நாட்டையே படிக்கவைப்பார்! மு.க.ஸ்டாலின் - கொளத்தூர்.

ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து கொளத்தூருக்கு இடம்பெயர்ந்து இருக்கிறார் மு.க.ஸ்டாலின். சரியான போட்டியாக சைதை துரைசாமியை நிறுத்தி இருக்கிறார் ஜெயலலிதா. மாநிலம் முழுக்கப் பிரசாரத்தில் இருக்கும் ஸ்டாலின், மூன்று நாட்கள் மட்டுமே கொளத்தூருக்கு ஒதுக்கினார். ''பிரசாரத்துக்குக்கூட தொகுதிப் பக்கம் வராதவர், உங்க பிரச்னைகளைத் தீர்க்கவா வரப்போறார்?'' என்று கேட்டு, சைதை துரைசாமி செய்த வித்தியாசப் பிரசாரம் ஆரம்பத்தில் நன்றாக எடுபட்டது. ஆனால், ஸ்டாலின் மனைவி துர்கா தனது தங்கைகள் இருவருடன் களத்தில் குதிக்க... கொளத்தூர் நிலைமை தி.மு.க. பக்கம் திரும்பி வருகிறது. கூடவே, இந்திரகுமாரி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டவர்களும் வீதி வீதியாக ஸ்டாலினுக்காக வலம் வருகிறார்கள். துர்காவுக்கு பிரசார ரூட் போடும் பொறுப்பு இந்திரகுமாரிக்கு!

''அவர் ஐ.ஏ.எஸ்., அகாடமி நடத்தி நாலு பேரைப் படிக்கவைக்கிறது உண்மைதான். ஆனால், தளபதி நாடு முழுக்க இருக்கிறவங்களையே படிக்க வைக்கிறாரே...'' என்று மடக்குகிறார் துர்கா. ஆரத்தி, குங்குமம் என எதையும் தவிர்க்காமல், ''வீட்ல இன்னிக்கு என்ன சாப்பாடு?'' எனக் கேட்கும் துர்காவின் எளிமையான பிரசாரம், ஸ்டாலின் நேரில் வராததை ஈடுசெய்கிறது. வெளி மாவட்டப் பயணங்களை முடித்துவிட்டு, கொளத்தூருக்கு மேலும் இரண்டு நாட்களை ஒதுக்கிப் பிரசாரம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார். அதற்கு இடையில், பம்பரமாகச் சுற்றி வரும் துர்காவே அவருக்குப் பலம்!

முதல்வர்னு சொன்னாலே முறைக்கிறார்!
ஓ.பன்னீர் செல்வம்-போடிநாயக்கனூர்.

அம்மாவின் பிரசாரப் பயணத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், தான் நிற்கும் போடி தொகுதியில் தலைகாட்ட முடியாமல் தவித்து வந்தார். ஜெயலலிதா ஓய்வு எடுக்கும் நேரம் பார்த்து, சொந்தத் தொகுதியில் தலையைக் காட்டி பிரசாரம் செய்து வருகிறார். சீலையம்பட்டி கிராமத்தில் ஒரு பெரியவர், 'ஐயா... முதல்வர் ஐயா... நீங்க நல்லா இருக்கணும்’ என்று ஓ.பி.எஸ். வந்த ஜீப்பை மறித்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். பதறிப்போன பன்னீர், 'அந்தாளு எதிர்க்கட்சி ஆளான்னு பாருங்கய்யா’ என்றார். ரத்தத்தின் ரத்தம்தான்என்று தெரியவந்தது. அந்தப் பெரியவரை அழைத்த பன்னீர், ''இப்படி எல்லாம் சொல்லக் கூடாதுங்க. ரெட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்க'' என்றார்உஷாராக. முன்னாள் முதல்வர் என்று அவரும் சொல்வதுஇல்லை. யாரையும்சொல்ல விடுவதும் இல்லை. இதுவல்லவா பணிவு?

நாட்டாமைக்கு வடையும் டீயும்!
சரத்குமார் - தென்காசி.

'நாட்டாமை’ சரத்குமாரும் 'சித்தி’ ராதிகாவும் வலம் வருகிறார்கள். கூட்டத்தைப் பார்த்துவிட்டால், சரத்குமார் பொசுக்கெனப் பிரசார வேனில் இருந்து இறங்கி, மக்களோடு மக்களாகக் கலந்துவிடுகிறார்.

இலஞ்சி என்ற கிராமத்தில், மக்கள் அவரை டீ குடிக்க அழைத்தனர். உடனே அவர்களோடு சென்று டீக்கடை பெஞ்ச்சில் அமர்ந்து, ஹாயாகப் பேசியபடி டீ குடித்தார். பக்கத்துக் கடைக்காரர், ''சூடா வடை போட்டிருக்கேன். ஒண்ணு டேஸ்ட் பாருங்களேன்...'' என்று விரும்பி அழைக்க, அவரது கடைக்குச் சென்று டேஸ்ட் பார்த்தபடி, ''நானும் யாருடைய தயவும் இல்லாம சொந்தக் காலில் நின்னு கடுமையா உழைச்சு முன்னேறியவன்தான். அதனால், நீங்க கஷ்டப்பட்டு உழைச்சா, நிச்சயம் முன்னேற முடியும்'' என்று சிறிது நேரம் பொதுவாகப் பேசி அட்வைஸ் செய்யும் சரத்குமார், பின்னர் பாயின்ட்டுக்கு வருகிறார். ஓட்டுதானே பாயின்ட்!

''எதிரி இல்லீங்க... நம்புங்க!''
பொன்.ராதாகிருஷ்ணன் - நாகர்கோவில்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார். பந்தா அரசியல்வாதிகள் மத்தி யில் இவர் வித்தியாசமானவர். தன்னோடு பாதுகாப்புக்கு போலீஸையும் டிரைவரையும் தவிர, வேறு யாரையும் அழைத்துச் செல்வது இல்லை. பொதுவாக, பி.ஜே.பி-க்காரர்களைப் பார்த்து சிறுபான்மை இனத்தவர்கள் முகம் சுழிப்பார்கள். ஆனால், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களைச் சந்தோஷமாகச் சந்திக்கிறார். ''நாங்கள் உங்களுக்கு எதிரிகள் இல்லை. உங்களது குழந்தை களின் கல்விக்காக அரசு உதவித்தொகை வழங்குகிறது. அதைத் தடுக்க வில்லை. அதேபோல, எங்களுக்கும் தரும்படி கேட்கிறோம். இது தவறா?'' என்று நியாயம் பேசுகிறார்!

தடம் மாறிய டாக்டர்!
டாக்டர் கிருஷ்ணசாமி - ஒட்டப்பிடாரம்.

1996-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், கொடியன்குளத்தில் நடந்த கலவரத்தின்போது, அந்தப் பகுதி மக்களுக்காகக் குரல் கொடுத்த டாக்டர் கிருஷ்ணசாமி, அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனி ஆளாக நின்று அன்று அவர் போராடியது, இன்று வரை பேசப்படுகிறது!

2001 , 2006-ல் நடந்த தேர்தல்களில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி,இரண்டு முறையும் வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்போது அ.தி.மு.க கூட்டணி சார்பில் அதே ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், முன்புபோல் அல்லாமல் அந்தத் தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு தலித் அல்லாதவர்கள் அதிகம் வாழும் தொகுதியாக மாறியிருக்கிறது. குறிப்பாக, நாடார்கள் அதிகம் இருப்பதால், ''தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் மீட்புப் பேரணியில் சரத்குமாருடன் சென்ற நானும் அடி வாங்கினேன். இப்போதுகூட தென்காசியில் இருக்கும் தலித் ஓட்டுக்களை சரத்குமாருக்கு ஒட்டுமொத்தமாகப் போடச் சொல்லியிருக்கிறேன். நாடார் சமுதாயப் பிரமுகர் கராத்தே செல்வின் கொலை செய்யப்பட்டபோது, சட்டமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன்'' என்று அடுத்த சாதியைப்பற்றியே அதிகம் பேசிவருகிறார்!

''குரு சொன்னா கேட்டுக்கணும்!''
காடுவெட்டி குரு - ஜெயம்கொண்டம்.

தேர்தல் தேதி அறிவிக்கவில்லை. யாருடன் கூட்டணி என்றும் முடிவாகவில்லை. அப்படி ஒரு நேரத்தில் டாக்டர் ராமதாஸ் யோசிக்காமல் அறிவித்தார், ''ஜெயங்கொண்டத்தில் குரு போட்டியிடுவார்'' என்று! அந்த அளவுக்கு பா.ம.க-வைத் தாங்கும் தூண்தான் குரு. களத்தில் இருக்கும் வேட்பாளர்களில் அதிகப்படியான வழக்குகள் கொண்டவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் குரு! அவரைப் பார்த்தாலே அந்தப் பகுதியில் பயம்தான். அதனால்தான் மக்களைப் பார்த்து, ''நானும் பாமரன்தான். என்னைத் தேர்ந்தெடுங்கள்'' என்று கெஞ்சுகிறார் குரு. அப்பாவியாக அவர் சொல்வதுதான் மக்களுக்குப் புரியவில்லை!

''நேரு மாமா வந்திருக்காக!''
கே.என்.நேரு-திருச்சி மேற்கு.

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் கே.என்.நேரு, அதிகாலையிலேயே வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் ஆஜராகிவிடுகிறார். ஒவ்வொரு ஏரியாவிலும் தான் செய்த பணிகளைப் பட்டியலிடுபவர், ''இன்னும் நிறைய திட்டங்கள் கைவசம் இருக்கு. அதெல்லாம் நிறைவேறணும்னா, உதய சூரிய னுக்கு ஓட்டுப் போடுங்க'' என சிம்பிளாகப் பேசுகிறார்.

வழியில் எதிர்ப்படுகிறது ஒரு பேருந்து. பேருந்தில் ஏறும் நேரு. டிரைவர், கண்டக்டரைப் பார்த்து, ''நல்லா இருக்கீங்களா? இப்போ எவ்வளவு சம்பளம் கைக்கு வருது? ''- வாஞ்சையாக விசாரிக்கிறார். தாயின் மடியில் இருக்கும் ஐந்து வயதுக் குழந்தை ஒன்று, ''யாரு இவரு? பெரிய மீசை வெச்சிருக்காரு?'' என்று கேள்வி எழுப்ப... ''இவருதான் நேரு மாமா!'' என்று சொல்கிறார் அந்தத் தாய்!

''எதுக்குப்பா ஓட்டு கேட்டு வந்த?''
செங்கோட்டையன் - கோபிச்செட்டிப்பாளையம்.

செங்கோட்டையன், எம்.ஜி.ஆரிடம் பெற்ற புகழைவிட, ஜெயலலிதாவிடம் கொங்கு மண்டலத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார். அம்மாவுடன் டூரில் இருப்பதால் சனி, ஞாயிறு இரண்டு நாட்களைத் தொகுதியில் செலவழிக்கிறார். மற்ற நாட்களில் கோபியில் இவருக்காக ஓட்டுக் கேட்பது... செங்கோட்டையனின் மகன் கதிர்!

இவர் போகும் பல கிராமங்களில், ''ஏம்ப்பா! நீ நம்ம செங்கோட்டையன் பையனா? நல்லா இருக்கியா ராசா? நீ எதுக்குப்பா ஓட்டுக் கேட்க வந்த? கண்டிப்பா எங்க ஓட்டு உங்க அப்பாவுக்குத்தான்'' என்று சொல்லி ஆரத்தி எடுத்து அனுப்பிவைக்கிறார்கள். அப்பாவின் செல்வாக்கைப் பார்த்துப் பிரமிப்பில் இருக்கிறார் மகன்!

கட்சியே கல்யாணம்!
பாலபாரதி - திண்டுக்கல்.

கட்சிகளில் கறாராக இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! மற்ற கட்சிகளில் போட்டியிட வாய்ப்புக் கேட்பார்கள். ஆனால், இங்கு கட்சியின் தலைமை பரிந்துரைக்கும் நபருக்கு மற்றவர்கள் வழிவிட வேண்டும். இப்படிப்பட்ட கட்சியில் மூன்றாவது முறையாக திண்டுக்கல் தொகுதி, பாலபாரதிக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆளும் கட்சியைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் விமர்சிப்பதும் எந்தக் குற்றச்சாட்டுகளிலும் சிக்காமல் இருப்பதும் பாலபாரதிக்கு ப்ளஸ். இன்னும் திருமணம் செய்துகொள்ளாதவர். கட்சியைக் கல்யாணம் செய்துகொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்!

நம்பிக்கையான பேராசிரியர்!
ஜவாஹிருல்லாஹ் - ராமநாதபுரம்

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நண்பரான அசன் அலிக்கு (காங்கிரஸ்) எதிராக ராமநாதபுரத்தில் நிற்கிறார் ஜவாஹிருல்லாஹ். 25 ஆண்டுகளாகப் பேராசிரியர் பணி, 30 ஆண்டுகளாக சமூகப் பணி எனப் பரபரப்பாக இருப்பவர். இவரது மனிதநேய மக்கள் கட்சிக்கு இஸ்லாமிய சமூகத்தவர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் மத்தியில் பிரபலமான அமைப்பு இது. தற்கால அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப நீக்குப்போக்குடன் முடிவுகள் எடுத்து அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் கொள்கைகள் பேசுவதில் ஜவாஹிருல்லாஹ் முக்கியமானவர். சர்ச்சைக்கு உரிய பாபர் மசூதிக்குள் யாரும் நுழைய முடியாது. ஆனால், உள்ளே அனுமதிக்கப்பட்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர்!

மாமான்னு சொல்லாதே... மச்சான்!
வீரபாண்டி ஆறுமுகம் - சங்ககிரி

சங்ககிரி தொகுதியில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து அ.தி.மு.க-வில் களம் இறங்கி இருப்பது அவரது சொந்த அண்ணன் மகள் விஜயலட்சுமி பழனிசாமி. சங்ககிரி தொகுதி, கவுண்டர் சமுதாய மக்கள் அதிகம் உள்ள பகுதி. அதனால், கொ.மு.க-வின் மாவட்டச் செயலாளர் ராஜாவும் கூடவே போகிறார். ''நம் கொங்கு குல மாமா வீரபாண்டியார் வந்திருக்காரு. மாமாவுக்கு மறக்காம உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, ஜெயிக்கவைக்க வேண்டியது உங்க பொறுப்பு...'' கூடியிருக்கும் கிராம மக்களிடம் ராஜா பேச இடைமறிக்கிறார் வீரபாண்டியார், ''மாமான்னு சொல்லாதே... நான்தான் உங்க வீட்டுல பொண்ணு கட்டியிருக்கேன். அதனால, மச்சானுக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொல்லிக் கேளுங்க'' என்று உரிமையோடு வீரபாண்டியார் பேசுவதைக் கூட்டம் ரசித்துக் கைத் தட்டுகிறது!

சேலத்தில் அப்பா... சென்னையில் அம்மா!
என்.ஆர்.ரங்கசாமி - புதுச்சேரி (இந்திராநகர், கதிர்காமம்)

புதிதாகக் கட்சி தொடங்கி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் புதுச்சேரியின் அ.தி.மு.க. - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ரங்கசாமி. காலையில் தேநீர் குடிக்க வெளியே வரும்போதே, ரங்கசாமியின் பிரசாரம் ஆரம்பித்துவிடுகிறது. அம்மா பாஞ்சாலியின் காலில் விழுந்து ஆசி வாங்கியபடி, யமஹாவை ஸ்டார்ட் செய்கிறார். பந்தாவே இல்லாமல் பைக்கை நிறுத்திவிட்டு கால் நடையாகவே வீடு வீடாகப் போய் ஓட்டுக் கேட்கிறார். நண்பர்களின் வீடுகளில் இருந்து பிரசாரத்தின் இடையே சாப்பாடு வருகிறது. இட்லியும் மீன் குழம்பும் விருப்பமான உணவு. பிரசாரத்துக்கு மத்தியிலும் டென்னிஸ் விளையாட்டை ரங்கசாமி மிஸ் பண்ணுவதே கிடையாது. வியர்க்க விறுவிறுக்க ஆட்டத்தை முடித்துவிட்டுத்தான் அடுத்தகட்ட பிரசாரத்துக்குக் கிளம்புகிறார். அ.தி.மு.க. கூட்டணி அமைந்ததால், அம்மாவின் ஆதரவை நம்பிக்கையாக நினைக்கிறார்!

கார்ப்பரேட் கேண்டிடேட்!
'மாஃபா’ பாண்டியராஜன் - விருதுநகர்.

தே.மு.தி.க-வின் ஸ்டார் வேட்பாளராகக் களம் இறங்கி இருக்கிறார் 'மாஃபா’ பாண்டியராஜன். ஒரு கிராமத்தில் ஒரு பெரியவர் 'ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பீங்க?’ என்று கேட்க, இவர் 'போன தடவை எவ்வளவு குடுத்தாங்க?’ என்று எதிர்க் கேள்வி கேட்கிறார். பெரியவர் 'நூத்தம்பது ரூபா’ என்றதும், 'உங்க ஓட்டைக் காசுக்கு விக்காதீங்க. காசு கொடுக்குறவங்க அந்தக் காசைத் திரும்ப எடுக்கணும்னு நினைப்பாங்க. ஊழல் பண்ணுவாங்க. அதுக்கு நீங்களே துணை போகலாமா?’ என்று அரை மணி நேரம் வகுப்பு எடுத்தார்.

அவர் கார்ப்பரேட் கன்சல்டன்சி நடத்துவதால், அவரது பிரசாரமும் கார்ப் பரேட் ஸ்டைலில் இருக்கிறது. அவருடைய நிறுவனத்து ஆட்கள் தொகுதிக்கு வந்து தங்கியிருக்கிறார்கள். பாண்டியராஜனுக்காக 100 சுய உதவிக் குழுக் கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார்கள். 'அவர்கள் சரியாக பிரசாரத்துக்குச் செல்கிறார்களா?’ என்று கண்காணிப்பது நிறுவன ஆட்களின் வேலை. திட்டமிடல், தீவிர உழைப்பு எனத் தொடர்கிறது பாண்டியராஜனின் பயணம்!

காளி கோயிலில் சாமியோவ்!
ரவிக்குமார் - காட்டுமன்னார்கோவில்.

மெயிலில், எஸ்.எம்.எஸ்-ல் ஓட்டு கேட்பது ரவிக்குமாரின் புது ஸ்டைல். நேரிலும் அனைவரையும் சந்தித்து வருகிறார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இவர் வாக்கு கேட்டுப் போகும்போது, நரிக்குறவர் இன மக்கள் ரவிக்குமாரின் கையை இறுகப் பிடித்துக்கொண்டார்கள். ''எங்களுக்கு நல வாரியம் அமைச்சுக் கொடுத்தது நீங்கதான் சாமியோவ்! எங்களைக் கண்டாலே எல்லாரும் ஒதுங்கிடுவாங்க. ஆனா, சொந்தமா நினைச்சது நீங்கதான் சாமியோவ்!'' என்று சொல்லி மகிழ்ந்தார்கள். பாசிமணிகளை மாலையாகப் போட்டு ''எங்களோட பூஜையில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்!'' என்று அழைத்திருக்கிறார்கள். குலதெய்வமான காளி கோயிலுக்குப் பொங்கல் வைத்து பூஜை செய்து வெற்றி கோஷமிட்டதை நினைத்து இப்பவே ஜெயித்ததாக வலம் வருகிறார் ரவிக்குமார்!

எல்லோரும் விஜயகாந்த்துதான்!
விஜயகாந்த் - ரிஷிவந்தியம்

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். இந்தத் தொகுதியில் கடந்த நான்கு முறையும் வெற்றி பெற்று, சிட்டிங் எம்.எல்.ஏ-வான சிவராஜ், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். கடந்த 24-ம் தேதி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜயகாந்த், அன்று மாலை சுமார் மூன்று மணி நேரம் மட்டுமே தன் தொகுதிக்குச் சென்று பிரசாரம் செய்தார். பிரசாரத்தை முடிக்கும்போது, ''நான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டி இருப்பதால், தினமும் உங்களோடு இருக்க முடியாது. எனவே, இங்கே உள்ள ஒவ்வொருவரும் தன்னை விஜயகாந்த்தாக நினைத்துத் தேர்தல் பணியாற்ற வேண்டும்'' என்றார்!