Published:Updated:

தமிழகத்தில் காங். ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: இளங்கோவன்

Vikatan Correspondent
தமிழகத்தில் காங். ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: இளங்கோவன்
தமிழகத்தில் காங். ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: இளங்கோவன்
தமிழகத்தில் காங். ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: இளங்கோவன்

கோவை: 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

திருப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் மாவட்ட மாநாட்டில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசும்போது, ''பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற ஒரு ஆண்டிற்குள் 13 முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அதனால் இந்திய மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தற்போது சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு வாழும் இந்தியர்களின் நிலை பற்றியோ, இந்தியா-சீனா எல்லை பிரச்னை பற்றியோ பேசவில்லை. ஆனால் 4 நிகழ்ச்சிகளிலும் 4 விதமான உடைகளிலே கலந்து கொண்டு அசத்தியுள்ளார்.

மத்திய அரசு தொடர்ந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு சாதகமாகவே அமைந்திருந்தது. ஆனால், பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் விவசாயிகளுக்கு பாதகமாக இருக்கிறது. மேலும், தற்போது கொண்டு வர உள்ள குழந்தை தொழிலாளர் சட்ட திருத்தம் ஏழைகளுக்கு எதிரான சட்டமாகும்.

தமிழகத்தில் போக்குவரத்து துறை மற்றும் பொதுப்பணித் துறைகளில் பலகோடி ரூபாய் ஊழல்கள் நடந்துள்ளது. இது குறித்த தகவல்களை அதன் ஊழியர்களே வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கைகோர்க்க போகிறது. இது ஜெயலலிதா விடுதலையால் மேலும் உறுதி ஆகி உள்ளது. தமிழக மக்கள் விழிப்படைந்து விட்டனர். அதனால், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது" என்றார்.