Published:Updated:

ஸ்டாலின் சந்தித்தாலும் காட்டம் குறையாத அன்புமணி!

Vikatan Correspondent
ஸ்டாலின் சந்தித்தாலும் காட்டம் குறையாத அன்புமணி!
ஸ்டாலின் சந்தித்தாலும் காட்டம் குறையாத அன்புமணி!

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று அன்புமணியை சந்தித்த நிலையில், 50 ஆண்டுகால அதிமுக - திமுக ஆட்சியை அகற்றி தமிழக வளர்ச்சிக்கான மாற்று அரசை அமைப்பதே பாமாகவின் லட்சியம் என்று தனது ஃபேஸ்புக்கில் அன்புமணி தெரிவித்துள்ளார்.
 

ஸ்டாலின் சந்தித்தாலும் காட்டம் குறையாத அன்புமணி!

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டானுக்கும், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கும் அறிக்கை போர் நடந்து வந்த நிலையில், தனது சகோதரர் மகனின் திருமண அழைப்பிதழை ஸ்டாலின் இன்று அன்புமணியை நேரில் சந்தித்து வழங்கினார்.

இந்தநிலையில், ஸ்டானுடனான சந்திப்பு குறித்துதனது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள அன்புமணி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று என்னை சந்தித்து அவரது சகோதரர் மகனின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்து அழைத்தார்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட இத்தகைய நாகரிகத்தை தமிழ் நாட்டில் வளர்க்க வேண்டும் என்பதே பாமகவின் இலக்காகும். இதனை அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம்.

நேற்று லட்சக்கணக்கான மக்கள் திரண்ட, சோழமண்டல மாநாட்டில் நான் உறுதி அளித்த படி, திமுக - அதிமுக கட்சிகளுடன் நாங்கள் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம்.

50 ஆண்டுகால அதிமுக - திமுக ஆட்சியை அகற்றி தமிழக வளர்ச்சிக்கான மாற்று அரசை அமைப்பதே பாமாகவின் லட்சியம்" என்று கூறியுள்ளார்.