Published:Updated:

காங்கிரஸ் அமைச்சர்கள் ஊழலையும் இளங்கோவன் வெளியிட வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் பொளேர்!

Vikatan Correspondent
காங்கிரஸ் அமைச்சர்கள் ஊழலையும் இளங்கோவன் வெளியிட வேண்டும்: பொன்.ராதாகிருஷணன்  பொளேர்!
காங்கிரஸ் அமைச்சர்கள் ஊழலையும் இளங்கோவன் வெளியிட வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் பொளேர்!
காங்கிரஸ் அமைச்சர்கள் ஊழலையும் இளங்கோவன் வெளியிட வேண்டும்: பொன்.ராதாகிருஷணன்  பொளேர்!

கோவை: தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிடும் முயற்சியை வரவேற் பதாகவும், அதேப்போன்று கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இடம்பெற்ற அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் சேர்த்து அவர் வெளியிட வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக பாஜக கட்சி சார்பில் நடை பெற்ற 'தூய்மை இந்தியா' திட்டத்தை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பாஜக பலமாக இருக்கிறது. ஜெயலலிதா போட்டியிட உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக பாஜக தலைமை முடிவு செய்யும்" என்றார்.

தொடர்ந்து மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிடும் முயற்சியை வரவேற்பதாகவும், அதேப்போன்று கடந்த ஜக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இடம்பெற்ற அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் சேர்த்து வெளியிட்டால் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் "இந்தியாவை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர பிரதமர் மோடி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டும். இந்தியாவை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள மோடியின் பயணம் உதவும். பிரதமர் மோடி இந்தியாவின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவற்றில் 'மேக் இன் இந்தியா' திட்டம் இந்தியாவின் தயாரிப்புகளை உலகளவில் சந்தைப்படுத்த உதவுகிறது. இந்தியா வளர்ச்சி அடைவதோடு தூய்மையாகவும் இருக்க 'தூய்மை இந்தியா திட்டம்' பயனளிக்கிறது" என்றார்.

- ச.ஜெ.ரவி