Published:Updated:

மேலும் ஒரு வழக்கில் இருந்து சசிகலா விடுதலை!

Vikatan Correspondent
மேலும் ஒரு வழக்கில் இருந்து சசிகலா விடுதலை!
மேலும் ஒரு வழக்கில் இருந்து சசிகலா விடுதலை!

சென்னை: அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் இருந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா, தினகரன் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
 

மேலும் ஒரு வழக்கில் இருந்து சசிகலா விடுதலை!

சென்னை அமலாக்கப்பிரிவு, கடந்த 1997ஆம் ஆண்டு சசிகலா, தினகரன் ஆகிய இருவர் மீதும் அன்னிய செலவாணி மோசடி வழக்கு தொடர்ந்தது. மொத்தம் 7 வழக்குகள் அவர்கள் இருவர் மீதும் பதிவு செய்யப்பட்டது.

அன்றைய ஜெ.ஜெ.டி.வி. நிறுவனத்துக்கு பணம் பரிவர்த்தனை செய்தது தொடர்பாகவும், ஆவணம் இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்ததாகவும் சசிகலா மீதும், தினகரன் மீதும் அமலாக்கப்பிரிவு குற்றம் சுமத்தி இருந்தது. இந்த 7 வழக்குகளில் 5 வழக்குகள் எழும்பூரில் உள்ள முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

மீதமுள்ள 2 வழக்குகளும் எழும்பூரில் உள்ள 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த 7 வழக்குகளையும் நீதிபதி தட்சிணாமூர்த்தி விசாரித்து வந்தார்.

இந்த நிலையில் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சசிகலா மனு செய்து இருந்தார். அதுபோல 2வது நீதிமன்றத்தில் உள்ள 2 வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தினகரன் மனு செய்து இருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது ஒரு வழக்கில் இருந்து சசிகலாவையும், 2 வழக்குகளில் இருந்து தினகரனையும் விடுவித்து நீதிபதி தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.