Published:Updated:

ஆர்.கே.நகர் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல்: சக்சேனா தகவல்

Vikatan Correspondent
ஆர்.கே.நகர் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல்: சக்சேனா தகவல்
ஆர்.கே.நகர் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல்: சக்சேனா தகவல்
ஆர்.கே.நகர் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல்: சக்சேனா தகவல்

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பேரவைத் தலைவர் தனபால் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காகவே வெற்றிவேல் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதி காலியாக இருக்கும் தகவல் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, "ஆர்.கே.நகர் தொகுதிக்கு 5 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும். தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும்" என்றார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு  4 ஆண்டு சிறைத் தண்டனை பெங்களூரு தனி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டதால் அவரது எல்எல்ஏ பதவி பறிபோனது. ஆனால், ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருக்கிறது என்று அறிவிக்க சுமார் இரண்டு மாதங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.