Published:Updated:

செல்ஃபி பிரதமர் மோடி!

Vikatan Correspondent
செல்ஃபி பிரதமர் மோடி!
செல்ஃபி பிரதமர் மோடி!

ன்று சாதாரண மக்கள் துவங்கி பெரிய பிரபலங்கள் என அனைத்து நிகழ்வுகளிலும் செல்ஃபி முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அதிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் சரி, ஆட்சிக்கு வந்த பின்பும் சரி செல்ஃபிக்களை சுட்டு தள்ளி தன்னை டிஜிட்டலாக அப்டேட்டாக உள்ள நபர் என்பதை வெளிக்காட்டி வருகிறார்.

செல்ஃபி பிரதமர் மோடி!

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை போல பிரதமர் மோடியோ சென்ற இடத்தில் எல்லாம் செல்ஃபி என்று இருக்கிறார் என்கின்றன சமூக வலைதளங்கள். சமீபத்தில் சீனா சென்ற மோடி, அங்குள்ள பல இடங்களை பார்வையிட்டார் மேலும் பல திட்டங்களுக்கான ஒப்பந்தங்களையும் செய்தார். இவரது இந்த செயல்பாடுகளை தாண்டி அவரது செல்ஃபிக்கள் பேசப்பட்டன.

சீன அதிபர் லீயுடன் பிரதமர் மோடி எடுத்து கொண்ட செல்ஃபியை பிரதமர் மோடி மற்றும்  பிரதமரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் வெளியிட்டன. பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 2,200 ஷேர்களுடன் உலக அளவில் ட்ரெண்டான இந்த செல்ஃபியை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உட்பட பலர் லைக் செய்திருந்தனர். தற்போது இந்த புகைப்படம் 8.85 லட்சம் லைக்குகள் மற்றும் 16000க்கும் அதிகமான கமெண்டுகளுடன், உலகின் வல்லமைமிக்க செல்ஃபிக்களில் ஒன்றாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை யால் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

செல்ஃபி பிரதமர் மோடி!

இதற்கு முன் ஆஸ்திரேலிய பிரதமர், சார்க் நாடுகள் மாநாடு ஆகியவற்றிலும் பிரதமர் மோடி செல்ஃபிக் களை சுட்டு தள்ளி இருக்கிறார். இவரது வெளிநாட்டு பயணங்களின் போது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் மற்ற வளர்ந்த நாடுகளின் பிரதமர் மற்றும் அதிபர்களை போல அதிகமான செல்ஃபிக்களை பதிவிட்டு வருகிறார் மோடி.

செல்ஃபி பிரதமர் மோடி!

இதற்காக இவரை சமூக வலைதளங்களில் பலர் கிண்டல் செய்தாலும், அதிகப்படியான பேர் இந்திய பிரதமர் ஒருவர் இப்படி தொழில்நுட்ப அறிவுடன் இருப்பது நம் நாட்டை கவனிக்க வைக்கும் விஷயங்களே என்கின்றன. அதேபோல் இந்திய பிரதமர் ஒருவர் வெளிநாடுகளில் அதிக செல்ஃபிக்களை பதிவு செய்தவர் என்ற பெருமையையும் மோடி வசமே உள்ளது.

இன்றைய இளைஞர்கள் விரும்பும் செல்ஃபி, ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடியும் ஆக்டிவாக இருப்பது இளைஞர்களை கவரும் உத்தி என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

ஏற்கெனவே குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட உடையில் நரேந்திர மோடி என்ற பெயர் பொறிக்கப் பட்ட கோட், என்.எம் என்று எழுதப்பட்டிருந்த சால்வை என்ற சர்ச்சைகளை தொடர்ந்து மோடியை தற்போது செல்ஃபி மோகம் சூழ்ந்துள்ளதாக வர்ணிக்கின்றனர்.

செல்ஃபி பிரதமர் மோடி!

என்ன சொன்னாலும் நாட்டின் வளர்ச்சி விஷயங்களில் மோடி எடுக்கும் திட்டங்கள் தற்போது பெயரளவில் உள்ளதால், மோடி தரப்பு இதற்கு பதிலளிக்காமல் உள்ளது. திட்டங்களை  நிறைவேற்றினால் மட்டுமே இந்த விஷயங்கள் பெரிதாகாமல் இருக்கும். இல்லையெனில் செல்ஃபிக்களும் ஒரு பிரச்னையாகும் என்பதை உணர்ந்து பிரதமர் மோடி செயல்பட வேண்டும்.

- ச.ஸ்ரீராம்