Published:Updated:

திராவிட கட்சிகளை வெளியேற்ற சுதந்திர போர்: மக்களை அழைக்கும் ராமதாஸ்!

Vikatan Correspondent
திராவிட கட்சிகளை வெளியேற்ற சுதந்திர போர்: மக்களை அழைக்கும் ராமதாஸ்!
திராவிட கட்சிகளை வெளியேற்ற சுதந்திர போர்: மக்களை அழைக்கும் ராமதாஸ்!

அரியலூர்: தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து திராவிட கட்சிகளை வெளியேற்ற பா.ம.க நடத்தும் 2வது சுதந்திரபோரில் மக்களும் பங்கேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
 

திராவிட கட்சிகளை வெளியேற்ற சுதந்திர போர்: மக்களை அழைக்கும் ராமதாஸ்!

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சோழமண்டல அரசியல் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குரு தலைமை தாங்கினார். பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, வழக்கறிஞர் அணி செயலாளர் பாலு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முதலில் மைக்கை பிடித்த பாலு, "தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் தமிழகத்தை மோசம் செய்திருக்கின்றன. அ.தி.மு.க. ஊழல் ராணியை தலைவியாக வைத்து நடந்து கொண்டிருக்கிறது. நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 20 ஆண்டுகள் இருக்கிறேன். ஊழல் வழக்கில் இது போன்ற தீர்ப்பை பார்த்ததே இல்லை. நீதிபதி குமாராசாமி வழங்கியிருக்கிற தீர்ப்பு மிக மோசமான தீர்ப்பு. இன்றைக்கு சொல்லுகிறேன். ஜெயலலிதா சிறைக்கு செல்லக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை. உச்ச நீதிமன்றத்தால் ஜெயலலிதா சிறைக்கு செல்கிறார். இல்லை என்று சொன்னால் என்னுடைய வழக்கறிஞர் தொழிலை  விட்டுவிட தயாராக இருக்கிறேன்" முடித்தார்.

அடுத்ததாக பேசிய வன்னியர் சங்கதலைவர் குரு, ஸ்டாலினை நேரடியாக  தாக்கினார். எங்கள் சின்ன ஐயாவை பார்த்து கேட்கிறாய். என்ன தகுதி இருக்கிறது. இன்று உன் தகுதி என்ன?  எங்கள் சின்ன ஐயா அவருடைய  குடும்ப பின்னணியை சொல்வார். உன் தாத்தா, பாட்டன், பூட்டன் பெயரையாவது சொல்ல முடியுமா? உன் குடும்பம் உன் அப்பா கடந்து வந்த பாதையை  நான் சொல்லவா? எங்கள் பெரிய ஐயா என் வாயை கட்டிப் போட்டு வைத்து இருக்கிறார்  அதனால் நீயும் உன் குடும்பமும் தப்பித்தது, ஊழலை முதன் முதலில் அறிமுகப்படுத்தியதே உன் அப்பா தான். சாராயக் கடையை திறந்து வைத்து மக்களை சீரழித்துவிட்டார்கள்.

அம்மையாரோ மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடுனு கொடுத்தார். அம்மா ஆடு, மாடு கொடுத்துச்சி. 2016 தேர்தலில் எனக்கு ஓட்டு போட்டால் உங்களுக்கு பன்னிக்குட்டி கொடுப்பேன் என்று சொல்லுவார். சொந்தங்களே ஏமாந்துவிடாதீர்கள். உங்களுக்காக உழைக்க வந்துள்ளார் சின்ன ஐயா அவரை வெற்றி பெறவைப்பது உங்கள் கடமை" என்று முடித்தார்.
 

திராவிட கட்சிகளை வெளியேற்ற சுதந்திர போர்: மக்களை அழைக்கும் ராமதாஸ்!

பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி பேசுகையில், "ஐம்பது ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆண்டு தமிழகத்தை சீரழித்துவிட்டது. அவர்களை நீங்கள் தூக்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிமுகவினர் 4 ஆண்டு ஆட்சிகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மைனஸ் -1.3 விழுக்காட்டை பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய பொருளாதாரம் 4.2 விழுக்காட்டை கடைசி இடத்தில் பெற்றுள்ளது. சட்டமன்றத்தில் 666 முறை விதி எண் 110யை பயன்படுத்தி திட்டங்களை அறிவித்தனர். ஆனால் அது வெறும் அறிவிப்பாகவே மட்டும் உள்ளது. வேளாண்மைத்துறை, கல்வித்துறை, கூட்டுறவுத்துறை என அனைத்துத்துறைகளும் மிகவும் மோசமான நிலையான ஐசியூவில் இருக்கிறது.இதற்கு ஆபரேசன் செய்ய மருத்துவர் தேவை. அதற்கு நாங்கள்தான் சிறந்த நபர்கள். அதனால் மக்களே இந்த ஒருமுறை எனக்கு வாய்ப்பு தாருங்கள்" என்றார்.

மாநாட்டில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "தமிழ்நாட்டில் இதுவரை ஐந்தாண்டிற்கு ஒருமுறை திமுக, அதிமுக என மாறிமாறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் யாரும் மாற்று அரசியலை கொண்டுவரவில்லை. தற்போது பாமக மாற்று அரசியலை முன்னிறுத்தி திட்டங்களையும் கொள்கைகளை கொண்டு வருகிறோம். ஒருமுறை பா.ம.க.வை நம்பி வாக்களியுங்கள். தமிழ்நாட்டை மாற்றி காண்பிக்கிறோம். குடியில்லாத, புகையில்லாத தமிழ்நாட்டை உருவாக்கி காண்பிக்கிறோம்.

முதலாவது சுதந்திரப்போரில் வெள்ளையனை வெளியேற்றினோம். தற்போது தமிழ்நாட்டை கொள்ளைடித்துக் கொண்டிருக்கும் திராவிட கட்சிகளை வெளியேற்ற பாமக 2வது சுதந்திரப்போரை நடத்துகிறது. இதில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்" என்று கூறினார்.

-எம்.திலீபன்