Published:Updated:

டெல்லி அரசை இயக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

டெல்லி அரசை இயக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!
டெல்லி அரசை இயக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

டெல்லி அரசை இயக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

டெல்லி அரசை இயக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

புதுடெல்லி: எந்த ஒரு நபர் மூலமாகவும் டெல்லி அரசை இயக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.

டெல்லியில் உயர் அதிகாரிகளை நியமிப்பதற்கான அதிகாரம் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை கவர்னர் நஜீப் ஜங்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் முற்றியதை தொடர்ந்து, டெல்லியில் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் தேவைப்பட்டால் முதல்வர், துணை நிலை கவர்னர் ஆலோசிக்கலாம் என கூறியது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து டெல்லி அரசு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன், மத்திய அரசின் அறிவிப்பு சட்ட விரோதமானது என்று டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும், மோடி தலைமையிலான அரசு, நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அழைத்து செல்வதாக குற்றம் சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை கவர்னர் மூலம் டெல்லி மாநில அரசை இயக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறினார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பிரதமர் மோடி ஒரு யதார்த்தவாதி. பொருளாதார வல்லுனர் கிடையாது. அவரது அணுகுமுறை நடைமுறை சார்ந்தது. எனவேதான் அவரது கொள்கைகளால் பலன் கிடைக்கின்றன.

வெறும் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெறுவது மட்டுமே பிரதமர் பதவிக்கான அடிப்படையும் அல்ல. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பொருளாதாரத்துறை மிகவும் மோசமாக இருந்தது. பணவீக்க விகிதத்தைவிட வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. ஆனால், இந்த ஓராண்டில் அவை அனைத்தும் தலைகீழாக மாறியிருக்கிறது.

எந்த ஒரு நபர் மூலமாகவும் டெல்லி அரசை இயக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. அரசை இயக்க அவர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அரசியலமைப்பு விதிகளை நிலைநிறுத்தும் நடவடிக்கையை மட்டுமே நாங்கள் மேற்கொண்டோம்.

அரசியலமைப்பு விதிகளை நிலைநிறுத்த வேண்டியது எங்கள் கடமை. அரசியலமைப்பின் வரம்புக்குள்ளேயே ஒவ்வொருவரும் இருக்க வேண்டும். எனவே நாங்கள் யாருக்கு எதிராகவும் செயல்படவில்லை. டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை.

மேலும், டெல்லி சட்டமன்ற தீர்மானம் குறித்து நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் அதேநேரம், அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதை தடுக்க வேண்டியது உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு. அதை நாங்கள் மேற்கொள்வோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு