Published:Updated:

அலப்பறை போஸ்டர்கள்...அடேங்கப்பா படங்கள்...ஜெ. உத்தரவை கண்டுகொள்ளாத அ.தி.மு.க.வினர்!

அலப்பறை போஸ்டர்கள்...அடேங்கப்பா படங்கள்...ஜெ. உத்தரவை கண்டுகொள்ளாத அ.தி.மு.க.வினர்!
அலப்பறை போஸ்டர்கள்...அடேங்கப்பா படங்கள்...ஜெ. உத்தரவை கண்டுகொள்ளாத அ.தி.மு.க.வினர்!

அலப்பறை போஸ்டர்கள்...அடேங்கப்பா படங்கள்...ஜெ. உத்தரவை கண்டுகொள்ளாத அ.தி.மு.க.வினர்!

.தி.மு.க.வினர் வைக்கும் விளம்பர பேனர்களில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர்களை தவிர மற்ற அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் படங்களை பயன்படுத்தக் கூடாது என கடந்த 2012  ஆகஸ்ட் மாதம் அதிரடியாக உத்தரவிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அந்த உத்தரவை தற்போது அ.தி.மு.க.வினரே மீற ஆரமித்துள்ளதுதான் கொடுமை.

அலப்பறை போஸ்டர்கள்...அடேங்கப்பா படங்கள்...ஜெ. உத்தரவை கண்டுகொள்ளாத அ.தி.மு.க.வினர்!

ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி தமிழகத்தின் பலபகுதிகளில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு கட் அவுட்களை வைத்து அலப்பறை கொடுத்தார்கள் அ.தி.மு.க.வினர். அந்த பேனர்களில் ஜெயலலிதா போட்டோவுக்கு இணையாக மற்ற தலைவர்கள் படங்கள் இருக்கத்தான் செய்தது. குறிப்பாக, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் வைக்கப்பட்ட பேனர்கள், ஒட்டப்பட்ட போஸ்டர்களின் பன்னீர்செல்வத்தின் பெயர் கூட சின்னதாகவே இருந்தன. தற்போது, சர்ச்சையில் சிக்கி எந்தநேரமும் பதவி பறிக்கப்படும் என்கிற நிலையில் இருக்கும் ஓ.பி.எஸி.ன் தம்பி ஓ.ராஜா மற்றும் ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத் குமார் படங்கள் பளபளத்தன.

அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் படங்கள் இருந்தன. இந்நிலையில், நேற்று  திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான திருச்சி டி.வி.எஸ் டோல்கட் புனித ஜான் பிரிட்டோ நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா பொருட்கள் வழங்கும் விழாவிற்கு வைக்கப்பட்ட பேனர்களில், ஜெயலலிதாவிற்கு இணையாக வீட்டுவசதிவாரியத் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், அரசு தலைமை கொறடா மனோகரன், திருச்சி எம்.பி. குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, ஶ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. வளர்மதி உள்ளிட்டோரின் புகைப்படத்துடன் கூடிய பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அலப்பறை போஸ்டர்கள்...அடேங்கப்பா படங்கள்...ஜெ. உத்தரவை கண்டுகொள்ளாத அ.தி.மு.க.வினர்!

தமிழகத்தில் ஜெயலலலிதாவின் உத்தரவை சாதாரண தொண்டர்கள் மதிப்புடன் காப்பாற்றும் நிலையில், ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமான ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி, நத்தம் விசுவநாதனின் திண்டுக்கல், ஜெயலலிதா நேரடி பார்வையில் எப்போதும் இருக்கும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அவருடைய உத்தரவுகள் மதிக்கப்படவில்லை என அ.தி.மு.க.வின் தீவிர தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சில அ.தி.மு.க.வின் உண்மைவிசுவாசிகள், ''தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே நிகழ்ச்சிகள், விழாக்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிற்கு நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் வைக்கின்ற வரவேற்பு பலகைகள், சுவரொட்டிகள், விளம்பரங்கள் போன்றவற்றில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.

அலப்பறை போஸ்டர்கள்...அடேங்கப்பா படங்கள்...ஜெ. உத்தரவை கண்டுகொள்ளாத அ.தி.மு.க.வினர்!

புரட்சித்தலைவி அம்மா, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தலைமை ஏற்ற பிறகு, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது படங்களை மட்டுமே  பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தோம். ஆனால், இந்த நடைமுறைக்கு மாறாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததால், ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு வருகை தரும் அமைச்சரின் புகைப்படத்தை மட்டுமே சிலர் விளம்பர பேனர்களில் போட்டுவிட்டு மற்ற நிர்வாகிகளின் படங்களை தவிர்த்து விடுகின்றனர்.

இதன் காரணமாக நிர்வாகிகளுக்குள் பிரச்னை ஏற்படும் நிலை வந்தது. அ.தி.மு.க. பேனர்களை அ.தி.மு.க.வினரே கிழிக்கும் சம்பவங்கள் கூட நடந்தது. இதையெல்லாம் உணர்ந்துதான் அம்மா, கட்சிக்கு கெட்டப்பெயர் வந்துவிடக் கூடாது என நிகழ்ச்சிகள், விழாக்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றிற்கு கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் படங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவை தற்போது பல அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் காற்றில் பறக்கவிடுகிறது எங்களை போன்ற அம்மாவின் தீவிர தொண்டர்களிடையே வேதனையை ஏற்படுத்துகிறது. இதை அம்மா உடனே கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

சி.ஆனந்தகுமார்

படங்கள்:
தே.தீட்ஷித்

அடுத்த கட்டுரைக்கு