Published:Updated:

புகையிலை ஒழிப்பில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: அன்புமணி குற்றச்சாட்டு

புகையிலை ஒழிப்பில் மத்திய அரசுக்கு  அக்கறை இல்லை: அன்புமணி குற்றச்சாட்டு
புகையிலை ஒழிப்பில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: அன்புமணி குற்றச்சாட்டு

புகையிலை ஒழிப்பில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: அன்புமணி குற்றச்சாட்டு

புகையிலை ஒழிப்பில் மத்திய அரசுக்கு  அக்கறை இல்லை: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: புகையிலையின் தீமைகளை ஒழிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு  அக்கறை இல்லை என மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டியுள்ள பா.ம.க இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்பு மணி,  புகையிலை இல்லா உலகை காண உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக் கையில், “உலக புகையிலை எதிர்ப்பு நாள் மே 31 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஒருநாள் முழுவதும் சிகரெட் உள் ளிட்ட அனைத்து வகை புகையிலைப் பொருட்களையும் பயன்படுத்தாமல் இருக்குமாறு உலகெங்கும் வாழும்  மக்களை ஊக்குவிப்பது தான் இந்த நாள் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாகும்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், “ உலகின் மிகக்கொடிய உயிர்க்கொல்லியாக புகையிலைப் பொருட்கள் உருவெடுத்து வருகின்றன. புகையிலையைப் பயன்படுத்துவதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் சுமார் 6 லட்சம் பேர் மற்றவர்கள் புகைத்து விடும் புகையை சுவாசிப்பதால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகையிலைப் பொருட்களை  பயன்படுத்துவதால் உயிரிழக் கிறார்கள். அதுமட்டுமின்றி, புகையிலையின் பயன்பாட்டால் வாய்ப்புற்று நோய், நுரையீரல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் கருப்பை  புற்றுநோய், நுரையீரல் நோய்கள், இதய நோய்கள், குருதிநாள நோய்கள், ஆண்மைக்குறைவு, மலட்டுத் தன்மை உள்ளிட்ட நோய்கள் உருவாகி உயிரைப் பறிக்கின்றன. இதற்கு காரணமான புகையிலை எனும் தீமையை இந்தியாவை விட்டு விரட்டியடிப்பதே அனைத்து இந்தியர்கள் முன் உள்ள சவாலாகும்.

நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு எனது  முயற்சியால்தான் பொது இடங் களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படங்களை வெளியிடுவது, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் புகைப்பிடிக்கும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகங்களைகாட்டுவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

புகையிலை ஒழிப்பில் மத்திய அரசுக்கு  அக்கறை இல்லை: அன்புமணி குற்றச்சாட்டு

ஆனால், அப்போது உருவாக்கப்பட்ட விதிகளும், அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்களும் இப்போது கடை பிடிக்கப்படவில்லை என்பது  வேதனையளிக்கிறது. குறிப்பாக புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 40% பரப்பளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நான் கொண்டு வந்தேன். அது கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து 85% ஆக அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புகையிலை நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் சில நாடாளுமன்ற உறுப்பினர் கள் அடங்கிய குழு அளித்த சர்ச்சைக்குரிய பரிந்துரைகளை ஏற்று இந்த திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கிடப்பில் போட்டது.

அதன்பின், இவ்விஷயத்தில் பிரதமரே தலையிட்டு எச்சரிக்கைப் படங்களை பெரிய அளவில் வெளியிட ஆணையிட்டதாக செய்தி பரப்பப்பட்ட போதிலும் களநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதே போல், புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தை கடுமையாக்குவதற்காக அதில் சில திருத்தங்களை செய்ய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முன்வந்தார்.

புகையிலை ஒழிப்பில் மத்திய அரசுக்கு  அக்கறை இல்லை: அன்புமணி குற்றச்சாட்டு

புகைப்பிடிக்க தடை விதிக்கப் பட்ட பகுதிகளின் எண்ணிக்கையை அதிக ரித்தல், பொது இடங்களில் தடையை மீறி புகைபிடித்தால் வசூலிக்கப்படும் அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்துதல், எச்சரிக்கைப் படங்கள் இல்லாத புகையிலைப் பொருட்களை தயாரிப்பவர்கள்/ விற்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதித்தல் உள்ளிட்ட வரவேற்கத்தக்க அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

ஆனால், அவர் உருவாக்கிய சட்டத்திருத்தங்கள் கிடப்பில் போடப்பட்டன. புகையிலையின் தீமைகளை ஒழிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு  அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது. மக்களின் நலன் கருதி, புகை யிலையின் தீமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்,

இது ஒருபுறமிருக்க புகையிலைப் பொருட்களை வெறுத்து ஒதுக்க வேண்டியதும், அதன் தீமைகள் குறித்து மற்றவர்களிடம் விளக்க வேண்டியதும் மக்களின் சமூகக் கடமையாகும். இன்று ஒருநாள் புகையிலையை தற்காலிகமாக கைவிடுவோம்; நாளை முதல் புகையிலைப் பொருட்களை நிரந்தரமாக கைவிடுவோம் என்பது தான் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும் அறிவுரை ஆகும்.

இதுவரை சிகரெட்டு களின் சாம்பலால் நிரப்பப்பட்டிருந்த சாம்பல் கிண்ணத்தை இனி ரோஜா மலர்களால் நிரப்ப உலக புகை யிலை எதிர்ப்பு நாளில் மக்கள் உறுதியேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 

அடுத்த கட்டுரைக்கு