Published:Updated:

ஐஐடி மாணவர் அமைப்பிற்குத்தடை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது: வாசன்

ஐஐடி மாணவர் அமைப்பிற்குத்தடை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது: வாசன்
ஐஐடி மாணவர் அமைப்பிற்குத்தடை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது: வாசன்

ஐஐடி மாணவர் அமைப்பிற்குத்தடை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது: வாசன்

ஐஐடி மாணவர் அமைப்பிற்குத்தடை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது: வாசன்

சென்னை: சென்னை ஐ ஐ டி மாணவர்களின் அம்பேத்கர் பெரியார் மாணவர் அமைப்பினைத் தடை செய்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து படிக்கின்றார்கள். மாணவர்கள் அம்பேத்கர் மற்றும் பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பினை செயல்படுத்தி வந்தார்கள். சில நாட்களுக்கு முன்பு ஐஐடி நிர்வாகம் இந்த அமைப்பினை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு எதிராக ரத்து செய்வதாக உத்தரவிட்டது.

இதனால் மாணவர்களிடையே பதற்றம் காணப்படுகிறது. ஏனென்றால் மாணவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஐ.ஐ.டி. மாணவர் வட்டத்தின் மீது விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், அதன்மூலம் ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டங்கள், திட்டங்கள் கொண்டுவர முனையும் போதும் எதிர்க்கட்சிகளின் கருத்தை கேட்க மறுக்கிறார்கள்.

அது போல் எந்த ஒரு கலந்தாய்வும் இல்லாமல் திடீரென ரத்து நடவடிக்கை எடுத்திருப்பது பா.ஜ.க அரசின் ஏதேச்சதிகாரத்தை காட்டுகிறது. ஜனநாயகத்தில் மக்கள் கருத்துக்கு சுதந்திரம் அளிக்கும் உரிமையை பறிக்கும் இது போன்ற விரும்பத்தகாத நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க அரசு மேற்கொள்ளக்கூடாது. எனவே ஐ.ஐ.டி. மாணவர்களின் அமைப்பிற்கு எதிராக அறிவித்துள்ள ரத்து நடவடிக்கையை உடனடியாக பா.ஜ.க அரசு திரும்ப பெற வேண்டும்.

தமிழகம் முழுவதும் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 7 இடங்களில் அரசு சட்டக்கல்லூரிகளில் பி.ஏ. (எல்.எல்.பி) (5 வருடம்) எல்.எல்.பி (3 வருடம்) படிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சீர்மிகு சட்டப்பள்ளியும் உள்ளது. சீர்மிகு சட்டப்பள்ளிகளில் 5 வருட மற்றும் 3 வருட படிப்பிற்கான மொத்த சேர்க்கைக்கான எண்ணிக்கை 660. இவற்றிற்கான மாணவர் சேர்க்கை ஆண்டு தோறும் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் 2 அல்லது 3–வது வாரத்தில் முடிவடையும்.

ஆனால் அறிவிக்கப்பட்ட படி மே மாதம் 8 ஆம் தேதி விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. காரணம் விண்ணப்பங்களில் எழுத்துப் பிழை, தவறுகள் இருப்பதாக கூறி விரைவில் திருத்தப்பட்ட விண்ணப்பம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். மே மாதம் 8 ஆம் தேதி முதல் மாணவர்களும், பெற்றோர்களும் பல்கலைக்கழக கல்லூரி வளாகத்திற்கு தினமும் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

ஆனால் அண்டை மாநிலங்களில் உள்ள சட்டக்கல்லூரிகளில் எப்பொழுதும் போல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு ஜூன் மாதம் முதல் வாரம் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இதுவரை அளிக்கப்படாததால் பெரும்பாலான மாணவர்கள் அருகில் உள்ள மாநிலங்களில் விண்ணப்பங்கள் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு வரை 4 தனியார் சட்டக்கல்லூரிகள் இருக்கின்றன.

அரசு கல்லூரிகள், சீர்மிகு சட்டப்பள்ளிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படாததால் தனியார் கல்லூரிகளில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கான கல்விச் செலவு அதிகமாகும்.

இந்த ஆண்டு சீர்மிகு சட்டப்பள்ளிகளில் புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. முதலாமாண்டு மாணவர்களின் எண்ணிக்கையும் 660 ஆக உயரவுள்ளது. மேலும் அதே வளாகத்தில் முதுகலை சட்டப்படிப்புகளும், சட்ட ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

தரமணியில் பிரத்யேகமாக, நவீன வசதிகளுடன் கல்லூரி வளாகம், புதிய கட்டிட வசதியுடன் கட்டப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே இடவசதிக்காக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை முடிவடைந்து கல்லூரி திறக்கும் போது அப்புதிய வளாகத்தில் வகுப்புகள் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். மேலும் புதியதாக துவங்கப்படவுள்ள பாடப்பிரிவுகளுக்கு தேவையான ஆசிரியர்களையும் நியமனம் செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கான கல்வியின் அவசியத்தை உணர்ந்து அவர்களுக்கு விண்ணப்பங்கள் கால தாமதமின்றி வழங்கவும், போதுமான ஆசிரியர்களை நியமனம் செய்யவும், போதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தி தரவும் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்து, செயல்படுத்திட முன்வர வேண்டும் " என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு