Published:Updated:

1032 ஊரகக் குடியிருப்புகள் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடக்கம்!

1032 ஊரகக் குடியிருப்புகள் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடக்கம்!
1032 ஊரகக் குடியிருப்புகள் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடக்கம்!

1032 ஊரகக் குடியிருப்புகள் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடக்கம்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா 1032 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," தமிழக முதல்வர் ஜெயலலிதா 29ம் தேதி தலைமைச் செயலகத்தில், விருதுநகர் மாவட்டம் -  ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 1032  ஊரகக் குடியிருப்புகள் மற்றும் வத்திராயிருப்பு, சேத்தூர், மம்சாபுரம், சுந்தரபாண்டியம், செட்டியார்பட்டி, டபிள்யூ.புதுப்பட்டி மற்றும் எஸ்.கொடிக்குளம் ஆகிய பேரூராட்சி  பகுதிகள் பயன் பெறும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 363 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்.

1032 ஊரகக் குடியிருப்புகள் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடக்கம்!

மேலும், 345 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் 104 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றையும் துவக்கி வைத்தார்கள்.

பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீரின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கூட்டுக் குடிநீர் திட்டம், ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் வழங்கும் திட்டம், தனி மின்விசை திட்டம் போன்ற எண்ணற்ற குடிநீர் திட்டங்களைத்  தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு